மேலும் அறிய

PM Modi : ரூ. 12,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி; எங்கு தெரியுமா?

பிரதமர்  நரேந்திர மோடி, நாளை ( ஜனவரி 5 ஆம் தேதி ) மதியம் சுமார் 12:15 மணிக்கு தில்லியில் புதிய திட்டங்களுக்கு  அடிக்கல் நாட்டவுள்ளார். என்ன திட்டங்கள் தெரியுமா?

தில்லியில் உள்ள ரோகினியில் அதிநவீன மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்திற்கான  அடிக்கல்லை  நாட்டுகிறார் பிரதமர் மோடி

12,200 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களை பிரதமர்  நரேந்திர மோடி, நாளை ( ஜனவரி 5 ஆம் தேதி ) மதியம் சுமார் 12:15 மணிக்கு தில்லியில் தொடக்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு  அடிக்கல் நாட்டுவார். சாஹிபாபாத் ஆர்ஆர்டிஎஸ் நிலையத்திலிருந்து புதிய அசோக் நகர் ஆர்ஆர்டிஎஸ் நிலையத்திற்கு காலை 11 மணிக்கு நமோ பாரத் ரயிலில் பிரதமர் பயணம் மேற்கொள்வார்.

பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், சாஹிபாபாத் மற்றும் நியூ அசோக் நகர் இடையே சுமார் 4,600 கோடி ரூபாய் மதிப்பிலான தில்லி-காசியாபாத்-மீரட் நமோ பாரத் வழித்தடத்தின் 13 கிமீ தூரத்தை பிரதமர் திறந்து வைக்கிறார். இந்த திறப்பு விழாவின் மூலம் தில்லி தனது முதல் நமோ பாரத் இணைப்பைப் பெறும். இது தில்லி மற்றும் மீரட் இடையேயான பயணத்தை கணிசமாக எளிதாக்கும்.  மேலும் ஒப்பிடமுடியாத பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையுடன் அதிவேக மற்றும் வசதியான பயணத்தின் மூலம் கோடிக்கணக்கான மக்களுக்கு பயனளிக்கும்.

1,200 கோடி மதிப்பிலான தில்லி மெட்ரோ 4ஆம் கட்டத்தின் ஜனக்புரி மற்றும் கிருஷ்ணா பார்க் இடையேயான 2.8 கிமீ தூரத்தையும் பிரதமர் திறந்து வைக்கிறார். தில்லி மெட்ரோ கட்டம் - IV இன் முதல் பகுதி இதுவாகும். மேற்கு தில்லியின் கிருஷ்ணா பார்க், விகாஸ்புரியின் சில பகுதிகள், ஜனக்புரி உள்ளிட்ட பகுதிகள் பயனடையும்.

சுமார் ரூ.6,230 கோடி மதிப்பிலான தில்லி மெட்ரோ 4-ஆம் கட்டத்தின் 26.5 கிமீ ரிதாலா - குண்ட்லி பகுதிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இந்த வழித்தடம்  தில்லியில் உள்ள ரிதாலாவை ஹரியானாவில் உள்ள நாதுபூருடன் (குண்ட்லி) இணைக்கும், இது தில்லி மற்றும் ஹரியானாவின் வடமேற்கு பகுதிகளில் இணைப்பை கணிசமாக மேம்படுத்தும். ரோகினி, பவானா, நரேலா, குண்ட்லி ஆகியவை பயன்பெறும். முக்கிய பகுதிகள், குடியிருப்பு, வணிக மற்றும் தொழில்துறை மண்டலங்களுக்கான அணுகலை மேம்படுத்தும். செயல்பாட்டிற்கு வந்ததும், நீட்டிக்கப்பட்ட ரெட் லைன் வழியாக தில்லி, ஹரியானா மற்றும் உத்தரபிரதேசம் முழுவதும் பயணிக்க இது உதவும்.

புதுதில்லியின் ரோகினியில் சுமார் 185 கோடி ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்திற்கான) புதிய அதிநவீன கட்டிடத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இந்த வளாகம் அதிநவீன சுகாதார மற்றும் மருத்துவ உள்கட்டமைப்பை வழங்கும். புதிய கட்டிடத்தில் நிர்வாகப் பிரிவு, வெளிநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு,  ஒரு பிரத்யேக சிகிச்சை பிரிவு  ஆகியவை இருக்கும். இது நோயாளிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் தடையற்ற சுகாதார அனுபவத்தை உறுதி செய்யும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

தலைப்பு செய்திகள்

Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
கேரளாவின் அதிசய கோவில்கள்: குறிப்பிட்ட நாட்களில் ஆண்கள் நுழைய தடை ஏன்?
கேரளாவின் அதிசய கோவில்கள்: குறிப்பிட்ட நாட்களில் ஆண்கள் நுழைய தடை ஏன்?
ஓணம் சிறப்பு ரயில்: சென்னை-கொல்லம் பயணிகளுக்கு முக்கிய வழிகாட்டுதல்கள்!விபரம் இதோ.
ஓணம் சிறப்பு ரயில்: சென்னை-கொல்லம் பயணிகளுக்கு முக்கிய வழிகாட்டுதல்கள்!விபரம் இதோ.
மோகன்லால் 'அதிமனோகரம்' படத்திற்குத் தடை: சபரிமலை வனத்துறை அதிரடி!விபரம் இதோ
மோகன்லால் 'அதிமனோகரம்' படத்திற்குத் தடை: சபரிமலை வனத்துறை அதிரடி!விபரம் இதோ

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?

Embed widget