Vinayaga Chathurthi 2022 : இது விநாயக சதுர்த்தி Breakfast.. அவல் பண்டம்.. ரவை அப்பம்.. இது விக்கி ஃபேவரைட்ஸ்..
காலை உணவு சரிவர சாப்பிடாமல் இருந்தால் பல்வேறு உடல்நலக் குறைபாடுகள் ஏற்படும்.
காலை வேளையில் எளிமையான முறையில் தயாரிக்கப்படும் ரவை பணியாரம் மற்றும் அவல் உப்புமா போன்றன எல்லோரும் விரும்பி சாப்பிடும் உணவாகும் .
இப்பொழுது பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் உலகத்தில் நாமும் பரபரப்பாகவே இயங்கிக் கொண்டிருக்கிறோம் .இந்த நிலையில் நமது உணவு என்பது நமக்கு ஆரோக்கியமாகவும் மற்றும் குறுகிய நேர தயாரிப்பாகவும் இருக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோம்.பொதுவாக காலையில் தயாரிக்கப்படும் உணவானது ஒரு குறுகிய நேர தயாரிப்பு உணவாக இருந்தால் நமக்கு அது மிகவும் எளிதானதாக இருக்கும். ஏனென்றால் நாம் காலையில் அவசர அவசரமாக பணிக்குச் செல்ல வேண்டிய காரணத்தால் சமைப்பதற்கு அதிக நேரம் எடுக்கும் உணவை சமைத்து சாப்பிட்டு செல்வது கடினம். பொதுவாக காலை உணவு உண்பது நமக்கு முக்கியமானதாகும். காலை உணவு சரிவர சாப்பிடாமல் இருந்தால் பல்வேறு உடல்நலக் குறைபாடுகள் ஏற்படும். இதற்காகத்தான் அனைவரும் குறுகிய நேரத்தில் தயாரிக்கப்படும் உணவுகளை அதிகம் வரவேற்கின்றனர். ஆனால் அந்த குறுகிய நேரத்தில் தயாரிக்கும் உணவானது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவாக இருந்தால்? அது மிகவும் ஆபத்தாக முடியும்.ஆனால் குறுகிய நேரத்திலும் நமது உடலுக்கு அதிக அளவு நன்மை கொடுக்கக்கூடிய உணவானது அதிக அளவில் உள்ளது.அதில் ஒன்று இந்த ரவை பணியாரம் ஆகும். இந்த ரவை பணியாரமானது ஒரு தென்னிந்திய உணவாகும். இவைகளின் சுவையானது அனைவராலும் அதிக அளவு விரும்பப்படும் மற்றும் ஆரோக்கியத்திற்கும் சிறந்த உணவாகவும் இருக்கிறது.
இந்த ரவை பணியாரத்தை தயாரிக்க தேவையான பொருட்கள் மற்றும் அதனை தயாரிக்கும் முறைகள் ஆகியவற்றை நாம் பார்ப்போம்:
தேவையான பொருட்கள்:
○ரவை - 1 கப்
○தயிர் - 1 கப்
○கேரட் (நறுக்கியது) - 2 தேக்கரண்டி
○பீன்ஸ் (நறுக்கியது) - 1 தேக்கரண்டி
○கொத்தமல்லி (நறுக்கியது) - 1/2 தேக்கரண்டி
○வெங்காயம் (நறுக்கியது) - 1 தேக்கரண்டி
○தக்காளி (நறுக்கியது) - 1 தேக்கரண்டி
○ உப்புதண்ணீர் - 1/2 கப்
○அவல் - 1/2 கப்
○தண்ணீர் - 1 கப்
○ உப்பு - 1 தேக்கரண்டி
ஆகிய பொருள்களை முதலில் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
ரவை பணியாரம் செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் முதலில் ரவையை எடுத்துக் கொள்ள வேண்டும்.அதனுடன் தேவையான அளவு தயிர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.பின்பு நாம் நறுக்கி வைத்துள்ள கேரட் ,பீன்ஸ் மற்றும் கொத்தமல்லி, தக்காளி ஆகியவற்றுடன் நமக்கு தேவையான அளவு உப்பை சேர்த்து கலக்கவும்.
2 . பின்பு இதில் அவலை எடுத்து பொடி பொடியாக அரைத்து,பின்னர் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதனுடன் உப்பை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
3. அதன் பிறகு நமது வீட்டில் உள்ள பணியாரம் சுடும் கடாயில் எண்ணெய்களை ஊற்றி அதில் இந்த மாவினை நிரப்பி நன்கு வேகும் வரை அதனை திருப்பி திருப்பி வேக வைக்க வேண்டும்.
இந்த ரவை பணியாரத்தை தயார் செய்த பின்பு நாம் தேங்காய் சட்னி அல்லது கார சட்னி ஆகியவற்றினை சேர்த்து சூடான சுவையான பணியாரத்தை சுவைக்கலாம்.
அவல் உப்புமா செய்முறை:
அவல் உப்புமா ஆனது மிகவும் குறுகிய காலத்தில் செய்யும் உணவாகும். நமது உடல் நலத்திற்கு அதிக அளவு நன்மைகளை கொடுக்கக்கூடிய ஒரு உணவாக பார்க்கப்படுகிறது.இதனை செய்வது மிகவும் எளிமையான ஒன்று.
○முதலில் அவலை நன்கு தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
○அதன் பிறகு ஊற வைத்து அவுலை எடுத்து அதனுடன் சிறிதளவு வெங்காயம் மற்றும் கடலைப்பருப்பு ,சிறிதளவு கறிமசால் தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து எண்ணெயில் சிறிது நேரம் வதக்கி எடுத்து சூடான சுவையானது அவல் உப்புமாவை நாம் தயார் செய்து சாப்பிடலாம் .
○இது காலை உணவிற்கு மிகவும் ஏற்றது மற்றும் உடலுக்கு அதிகளவு நன்மையும் கொடுக்கும் .
○இதனை நாம் சாதாரணமாக ஊற வைத்து சர்க்கரை அல்லது வெல்லம் கொண்டும் சாப்பிடலாம்.