மேலும் அறிய

பழமையான இராயப்பன்பட்டி புனித பனிமய மாதா ஆலய தேர் வெள்ளோட்டம் 

உத்தமபாளையம் அருகே 123 ஆண்டுகள் பழமையான இராயப்பன்பட்டி புனித பனிமய மாதா ஆலய தேர் வெள்ளோட்டம்  நடைபெற்றது. நூற்றுக்கணக்கான ஆண்களும் ,பெண்களும் தேரை வடம் பிடித்து இழுத்தனர் .

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள இராயப்பன்பட்டியில் எழுந்தருளியுள்ள புனித பனிமய அன்னை திருத்தலம் 123 ஆண்டுகள் பழமையான ஆலயமாகும். புகழ்பெற்ற இந்த ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆலயமணி ரோமில் இருந்து கொண்டு வரப்பட்டது கூடுதல் சிறப்பாகும். மேலும் பழமை வாய்ந்த இந்த புனித பனிமய மாதா ஆலயத்திற்கு தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாது வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான கிறிஸ்துவ இறை மக்களும், சுற்றுலா பயணிகளும் இங்கு வந்து செல்கின்றனர்.

பழமையான இராயப்பன்பட்டி புனித பனிமய மாதா ஆலய தேர் வெள்ளோட்டம் 

மேலும் இந்த திருத்தலத்தில் வழிபடும் மக்களுக்கு வேண்டிய வரங்கள் கிடைப்பதாக ஐதீகம் உள்ளது. இவ்வாலயம் அமையப்பெற்று நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் இறைமக்கள் ஒன்று சேர்ந்து திருவிழா மிக விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இத்திருவிழாவின் நிகழ்வாக பனிமய மாதா சிலை சப்பரத்தில் வைத்து பவானி மேற்கொள்வது வழக்கம். அதனை மாற்றி தேரில் மாதாவை பவனி கொண்டு வருவதற்காக புதிதாக தேவாலயத்தின் சார்பில் தேர் வடிவமைக்கும் பணி கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பாக துவங்கியது.

Senthil Balaji: பரபரப்பு! செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல்நலக்குறைவு! ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி!

இந்த தேரானது முழுவதும் தேக்கு மரத்தில் 29.5 அடி உயரமும் 7.5 டன் எடையுடன் கீழிருந்து மேல் பகுதி வரை சிலுவை பொறிக்கப்பட்டும், பக்கவாட்டுகளில் கிறிஸ்துவ போதனைகளை வெளிப்படுத்தும் விதமாக 12 அப்போஸ்தலர்கள் இறைதூதத்தை வெளிக்காட்டு விதமாக 12 (சம்மனஸ்) வானதூதர்கள் மையத்தில் 5 அடி உயரம் கொண்ட பனிமய மாதாவின் சோரூபம் வைக்கும் வண்ணமாக இந்த தேர் உருவாக்கப்பட்டுள்ளது.

பழமையான இராயப்பன்பட்டி புனித பனிமய மாதா ஆலய தேர் வெள்ளோட்டம் 

மதுரை உயர் மறை மாவட்டத்தில் மாதாவுக்கு என உருவாக்கப்பட்டுள்ள மிகப்பெரிய தேராக இத்தேர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான திருவிழா அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி கொடியேற்றத்துடன்  துவங்கி 17ஆம் தேதி புனித பனிமய அன்னை திருத்தலம் பெருவிழா நடைபெற உள்ளது. இதற்காக நேற்று தேர் வெள்ளோட்டம் ராயப்பன்பட்டி பகுதியில் நடைபெற்றது. முன்னதாக பங்குத்தந்தை ஞான பிரகாசம் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை தேரின் முன்பாக நடத்தப்பட்டு திருத்தேரானது இறைமக்கள் மற்றும் ராயப்பன்பட்டி கிராம கமிட்டி மற்றும்  பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரினை இழுத்து வந்தனர்.

Coolie: ரஜினிகாந்த் மகளாக நடிக்க மாட்டேன் என்று சொன்ன சீரியல் நடிகை - ஏன்?
பழமையான இராயப்பன்பட்டி புனித பனிமய மாதா ஆலய தேர் வெள்ளோட்டம் 

தேவாலயத்தில் துவங்கி ராயப்பன்பட்டி நகரின் முக்கிய வீதிகள் தேர் பவனி வரும் வீதிகள் உள்ளிட்டவை வழியாக தேரானது இழுத்துச் செல்லப்பட்டு வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. இந்த தேர் வெள்ளோட்டத்தில் ராயப்பன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட  கிறிஸ்துவ பெருமக்கள் பங்கேற்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?
TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
Coolie : ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்...  கூலி குட்டி டீசர் வெளியிட்ட படக்குழு
Coolie : ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்... கூலி குட்டி டீசர் வெளியிட்ட படக்குழு
CBSE CTET Admit Card: சிபிஎஸ்இ சிடெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
CBSE CTET Admit Card: சிபிஎஸ்இ சிடெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Survey On TVK : ‘’விஜய் தான் பெரிய MINUS’’.. DMK எடுத்த சீக்ரெட் சர்வே! வெளியான மெகா ட்விஸ்ட்TVK Vijay : ”2026-ல் விஜய் முதலமைச்சர்! என்.டி.ஆர் பாணியில் வெற்றி” வெளியான மெகா சர்வே!Trichy Suriya on Annamalai | Bussy Anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?
TNPSC Group 2 Result: அடி தூள்.. 57 நாட்களில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்- காண்பது எப்படி?
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
TN Rain Alert: டிச.15 புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி; நாளை 16 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு; வானிலை முக்கிய அலர்ட்!
Coolie : ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்...  கூலி குட்டி டீசர் வெளியிட்ட படக்குழு
Coolie : ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்... கூலி குட்டி டீசர் வெளியிட்ட படக்குழு
CBSE CTET Admit Card: சிபிஎஸ்இ சிடெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
CBSE CTET Admit Card: சிபிஎஸ்இ சிடெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Seeman: விமானத்தில் சிக்கிய சீமான்; கனமழையால் தரையிறங்க முடியாமல் விமானம் தவிப்பு.!
Seeman: விமானத்தில் சிக்கிய சீமான்; கனமழையால் தரையிறங்க முடியாமல் விமானம் தவிப்பு.!
Poondi Dam: சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... அபாய கட்டத்தை நெருங்கிய பூண்டி நீர்த்தேக்கம்.. திறந்துவிடப்பட்ட நீர்...!
சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... அபாய கட்டத்தை நெருங்கிய பூண்டி நீர்த்தேக்கம்.. திறந்துவிடப்பட்ட நீர்...!
One Nation One Election: வரப்போகும் மாற்றம்; மாநிலங்கள் என்னவாகும்? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
One Nation One Election: வரப்போகும் மாற்றம்; மாநிலங்கள் என்னவாகும்? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
Keerthy Suresh Wedding: காதல் கொண்டாட்டம்.. கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்கள்!
Keerthy Suresh Wedding: காதல் கொண்டாட்டம்.. கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்கள்!
Embed widget