மேலும் அறிய

Aadi Festival 2024: "ஆடி மாத பிறப்பை தேங்காய் சுடும் பண்டிகையுடன் வரவேற்ற சேலம் மக்கள்" சுவாரஸ்சிய நிகழ்வு..!

வெல்லம், நாட்டுச்சர்க்கரை போன்ற இனிப்புகளை படைத்து, இனிமையான வாழ்க்கை வேண்டும் என்பதற்காக, ஆடிப் பண்டிகையை சேலம் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் ஆடி பண்டிகை என்பது மிகச்சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும். ஆடி மாதத்தை வரவேற்கும் விதமாக ஆடி முதல் நாள் தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இன்று சேலம் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் தேங்காய் சுடும் பண்டிகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேங்காய் சுடும் முறை:

தேங்காயில் உள்ள நார்களை எடுத்து, தேங்காயின் கண் பகுதி என்று சொல்லக்கூடிய மேல் பகுதியில் ஒரு சிறு துளையிட்டு அதில் உள்ள நீரை தனியாக பிரித்தெடுத்துவிட்டு, பின்பு வெள்ளம், நாட்டுச் சர்க்கரை, பச்சரிசி, பாசிப்பருப்பு, முந்திரி மற்றும் பல பொருட்கள் அதோடு சேர்த்து, தேங்காயை உட்பகுதியில் செலுத்தி பின்பு அதனை நெருப்பில் சுட்ட பின் மாரியம்மனுக்கு படைத்து விட்டு ஆடிப்பண்டிகையை, சேலம் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி மகிழ்ச்சியாக வரவேற்பார்கள்.

Aadi Festival 2024:

தேங்காய் சுடுவதின் காரணம்:

தேங்காயில் ஓட்டை பிரித்தால் தான் அதில் உள்ள தேங்காய் கிடைக்கும். அதுபோன்ற நம் மனதில் உள்ள கசப்பு, துன்பம், வேதனை என அனைத்தையும் எடுத்து வீசிவிட்டு. வெல்லம், நாட்டுச்சர்க்கரை போன்ற இனிப்புகளை படைத்து, இனிமையான வாழ்க்கை வேண்டும் என்பதற்காக, ஆடிப் பண்டிகையை சேலம் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

வியாபாரிகள் கருத்து:

இதுகுறித்து தேங்காய் சுடும் பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் கூறுகையில், ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் நாள் தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் ஆண்டுக்காண்டு மக்களுக்கு இதன் மீதான ஆர்வம் குறைந்து வருகிறது. முன்னோர்கள் ஆடி மாதத்தை வரவேற்கும் விதமாக உறவினர்களோடு தேங்காய் சுட்டு, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வந்தனர். ஆனால் தேங்காய் சுடும் பண்டிகை தற்போது அழிந்து வரும் பண்டிகைகளில் ஒன்றாக உள்ளது. இதனால் ஆண்டு தோறும் தேங்காய் சுட பயன்படுத்தும் பொருட்களின் விற்பனையும் சரிந்து வருவதாக வேதனை தெரிவித்தனர்.

Aadi Festival 2024:

சேலத்தில் ஆடி மாதம்:

இந்த மாதம் முழுவதும் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து காளியம்மன் மற்றும் மாரியம்மன் திருக்கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படும். ஆடி முதல் நாள் என்பதால் சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது, அம்மாபேட்டை பலபட்டரை மாரியம்மன் கோவிலில் மாரி அம்மனுக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு இருந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். அதேபோன்று ஆடி மாதத்தை வரவேற்கும் விதமாக சேலம் மாநகரில் உள்ள ராஜ கணபதி திருக்கோவிலில் விநாயகருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ஆடி பண்டிகை:

இதைத் தொடர்ந்து ஆடி முதல் வாரம் செவ்வாய்க்கிழமை அம்மனுக்கு பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும். இதைத்தொடர்ந்து இரண்டாம் வாரம் கம்பம் நடுவது, மூன்றாம் வாரம் பூ கரகம் எடுப்பது, அலகு குத்துதல், பொங்கல் வைப்பது, வண்டி வேடிக்கை போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆடி மாதம் முழுவதும் சேலம் மாவட்டம் கிடா கோலம் கொண்டிருக்கும் ஒன்பதாவது பாதுகாப்பு பணிகளும் ஏராளமான காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Aadhar Card Update: செப்.14 வரைதான் டைம்! ஆதார் அட்டையை ஆன்லைனிலே அப்டேட் செய்வது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் விவரம்!
Aadhar Card Update: செப்.14 வரைதான் டைம்! ஆதார் அட்டையை ஆன்லைனிலே அப்டேட் செய்வது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் விவரம்!
Breaking News LIVE: தயாநிதிமாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு - எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் ஆஜர்
Breaking News LIVE: தயாநிதிமாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு - எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் ஆஜர்
வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு புதிய வரவு! க்யூட்டாக குட்டியை பெற்றெடுத்த நீர்யானை..!
வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு புதிய வரவு! க்யூட்டாக குட்டியை பெற்றெடுத்த நீர்யானை..!
CM MK Stalin: இன்று அமெரிக்கா புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 17 நாட்கள் பயணத்தின் முழு விவரம்!
CM MK Stalin: இன்று அமெரிக்கா புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 17 நாட்கள் பயணத்தின் முழு விவரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namitha Madurai Issue | Kolkata doctor case : ”செமினார் ஹால் SECRET” பல்டி அடித்த குற்றவாளி! டாக்டர் கொலையில் ட்விஸ்ட்Namitha Madurai Issue : VCK Ravikumar on DMK | ”திமுகவும் பாஜகவும் ஒன்னு” போட்டுத் தாக்கும் விசிக! தமிழ் கல்வியில் காவியா?”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aadhar Card Update: செப்.14 வரைதான் டைம்! ஆதார் அட்டையை ஆன்லைனிலே அப்டேட் செய்வது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் விவரம்!
Aadhar Card Update: செப்.14 வரைதான் டைம்! ஆதார் அட்டையை ஆன்லைனிலே அப்டேட் செய்வது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் விவரம்!
Breaking News LIVE: தயாநிதிமாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு - எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் ஆஜர்
Breaking News LIVE: தயாநிதிமாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு - எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் ஆஜர்
வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு புதிய வரவு! க்யூட்டாக குட்டியை பெற்றெடுத்த நீர்யானை..!
வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு புதிய வரவு! க்யூட்டாக குட்டியை பெற்றெடுத்த நீர்யானை..!
CM MK Stalin: இன்று அமெரிக்கா புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 17 நாட்கள் பயணத்தின் முழு விவரம்!
CM MK Stalin: இன்று அமெரிக்கா புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 17 நாட்கள் பயணத்தின் முழு விவரம்!
Bijili Ramesh Death: காலையிலே சோகம்! நடிகர் பிஜிலி ரமேஷ் உடல்நலக்குறைவால் மரணம் - ரசிகர்கள் வேதனை
Bijili Ramesh Death: காலையிலே சோகம்! நடிகர் பிஜிலி ரமேஷ் உடல்நலக்குறைவால் மரணம் - ரசிகர்கள் வேதனை
Nalla Neram: இன்று செவ்வாய் கிழமை! பஞ்சாங்கம் சொல்லும் சுபகாரியத்திற்கான நல்ல நேரம் என்ன?
Nalla Neram: இன்று செவ்வாய் கிழமை! பஞ்சாங்கம் சொல்லும் சுபகாரியத்திற்கான நல்ல நேரம் என்ன?
Vinayagar Chaturthi 2024: பக்தர்களே! நெருங்கி விட்டது விநாயகர் சதுர்த்தி! எப்போது? எந்த நேரத்தில் பூஜை செய்ய வேண்டும்?
Vinayagar Chaturthi 2024: பக்தர்களே! நெருங்கி விட்டது விநாயகர் சதுர்த்தி! எப்போது? எந்த நேரத்தில் பூஜை செய்ய வேண்டும்?
Rahul Gandhi: திருமணம் குறித்து கேள்வி எழுப்பிய மாணவிகள்! புன்னகையுடன் பதிலளித்த ராகுல்காந்தி!
Rahul Gandhi: திருமணம் குறித்து கேள்வி எழுப்பிய மாணவிகள்! புன்னகையுடன் பதிலளித்த ராகுல்காந்தி!
Embed widget