மேலும் அறிய

கொடைக்கானல் அருகே கோயிலில் வினோத வழிபாடு; உடலில் சேற்றை பூசி பக்தர்கள் ஊர்வலம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே தாண்டிக்குடியில் முத்தாலம்மன் கோயிலில் வினோத வழிபாடு . உடலில் சேற்றை பூசிக்கொண்டு பக்தர்கள் ஊர்வலம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே தாண்டிக்குடியில் முத்தாலம்மன், பட்டாளம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அப்போது உடல் முழுவதும் சேற்றை பூசிக்கொண்டு `சேத்தாண்டி வேடமணிந்து பக்தர்கள் வினோத வழிபாடு நடத்துவார்கள். அதன்படி, 3 ஆண்டுகளுக்கு பிறகு தாண்டிக்குடி முத்தாலம்மன், பட்டாளம்மன் கோயிலில் இன்று திருவிழா தொடங்கியது.

CM Stalin Speech: புதுச்சேரிக்கும் திராவிட மாடல் ஆட்சி தேவைப்படுகிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

கொடைக்கானல் அருகே கோயிலில் வினோத வழிபாடு; உடலில் சேற்றை பூசி  பக்தர்கள் ஊர்வலம்

இதையொட்டி தாண்டிக்குடி, காமனூர், மங்களம்கொம்பு, கானல்காடு, பட்டலங்காடு, கொடங்காடு, பண்ணைக்காடு, அரசன்கொடை உள்ளிட்ட மலைக்கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் நேற்று காலை கோயிலில் குவிந்தனர். அப்போது பூ போட்டு, அம்மனுக்கு பாலாபிஷேகம் நடத்தினர். 

Actress Murder: பிரபல நடிகை படுகொலை...! சொத்துக்காக அடித்து கொன்ற சொந்த மகன்...! சினிமாவை மிஞ்சிய கொடூரம்..

பின்னர் மாலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள் சேத்தாண்டி வேடமணிந்து ஊர்வலமாக வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆண்கள் மட்டும் பங்கேற்றனர். அப்போது பக்தர்கள் ஒருவருக்கொருவர் உடலில் சேற்றை வாரி பூசிக்கொண்டு சேத்தாண்டி வேடமணிந்து ஆட்டம், பாட்டத்துடன் ஊர்வலமாக கோயிலுக்கு சென்றனர். இதில், சிறுவர்கள், பெரியவர்கள் என வயது வித்தியாசமின்றி ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி பூசிக்கொண்டனர்.

கொடைக்கானல் அருகே கோயிலில் வினோத வழிபாடு; உடலில் சேற்றை பூசி  பக்தர்கள் ஊர்வலம்

இதையடுத்து தாண்டிக்குடி கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்ற பக்தர்கள், இறுதியில் கோயிலுக்கு வந்தனர். அங்கு ஒன்றாக கூடி வழிபாடு நடத்தினர். இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், மலைக்கிராம மக்கள் நோயின்றி வாழவும், விவசாயம் செழிக்க வேண்டியும் இவ்வாறு சேற்றை பூசி வழிபாடு நடத்தப்படுகிறது என்றனர். 

TN Rain Alert: அய்யோ.. மீண்டும் புயல் சின்னமா? நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்றைய வானிலை நிலவரம்..

அதைத்தொடர்ந்து கோயில் பூசாரி வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஆபரண பெட்டி கோயிலுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. பின்னர் ஆபரண பெட்டியில் இருந்த நகைகள் முத்தாலம்மன், பட்டாளம்மனுக்கு அணிவித்து பூஞ்சோலைக்கு சென்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கொடைக்கானல் அருகே கோயிலில் வினோத வழிபாடு; உடலில் சேற்றை பூசி  பக்தர்கள் ஊர்வலம்

மேலும் பக்தர்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக சென்றனர். 3 நாட்கள் நடக்கும் திருவிழாவில் 2-ம் நாளான இன்று பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்தல், அக்னி சட்டி எடுத்தல், பூக்குழி இறங்குதல் மற்றும் அபிஷேகம் நடைபெற உள்ளது. 3-ம் நாளான நாளை கரகம் எடுக்கும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், மலைக்கிராம மக்கள் செய்துள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vijay - Seeman:
Vijay - Seeman: "திருமாதான் வேண்டும்" சீமானை கண்டுகொள்ளாத விஜய்! அப்செட்டில் அண்ணன்!
வேகமாக சென்ற கார் மரத்தில் மோதி விபத்து - 4 பேர் பலி
வேகமாக சென்ற கார் மரத்தில் மோதி விபத்து - 4 பேர் பலி
Thirumavalavan Aadhav Arjuna : பத்தில் ஒருவர் ஆதவ் அர்ஜுனா.. விஜய் மீது சங்கடமா.. உடைத்து பேசிய திருமா!
Thirumavalavan Aadhav Arjuna : பத்தில் ஒருவர் ஆதவ் அர்ஜுனா.. விஜய் மீது சங்கடமா.. உடைத்து பேசிய திருமா!
Ponmanickavel :”வயிறு எரியது!  கோவில் நிதியை வைத்து ஊழல்..” கொதித்தெழுந்த பொன்மாணிக்கவேல்
Ponmanickavel :”வயிறு எரியது! கோவில் நிதியை வைத்து ஊழல்..” கொதித்தெழுந்த பொன்மாணிக்கவேல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Vs TVK | Aloor Shanavas: என்னது விஜய் கூத்தாடியா? உங்க தலைவர் திருமா யாரு? ஷா நவாஸை பொளக்கும் பிரபலங்கள்!Aadhav Arjuna: VCK Issue : ஆதவ் பற்றவைத்த நெருப்புகோபத்தில் விசிக சீனியர்ஸ்! கட்சியை காப்பாற்றுவாரா திருமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay - Seeman:
Vijay - Seeman: "திருமாதான் வேண்டும்" சீமானை கண்டுகொள்ளாத விஜய்! அப்செட்டில் அண்ணன்!
வேகமாக சென்ற கார் மரத்தில் மோதி விபத்து - 4 பேர் பலி
வேகமாக சென்ற கார் மரத்தில் மோதி விபத்து - 4 பேர் பலி
Thirumavalavan Aadhav Arjuna : பத்தில் ஒருவர் ஆதவ் அர்ஜுனா.. விஜய் மீது சங்கடமா.. உடைத்து பேசிய திருமா!
Thirumavalavan Aadhav Arjuna : பத்தில் ஒருவர் ஆதவ் அர்ஜுனா.. விஜய் மீது சங்கடமா.. உடைத்து பேசிய திருமா!
Ponmanickavel :”வயிறு எரியது!  கோவில் நிதியை வைத்து ஊழல்..” கொதித்தெழுந்த பொன்மாணிக்கவேல்
Ponmanickavel :”வயிறு எரியது! கோவில் நிதியை வைத்து ஊழல்..” கொதித்தெழுந்த பொன்மாணிக்கவேல்
WTC Points Table: பலத்த அடி வாங்கிய இந்தியா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் கடும் சரிவு
WTC Points Table: பலத்த அடி வாங்கிய இந்தியா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் கடும் சரிவு
"அவங்களோட பங்கு ரொம்ப முக்கியம்" மாற்றுத் திறனாளிகளுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா புகழாரம்!
Ind vs Aus 2nd Test : இதெல்லாம் ஒரு டார்கெட்டா! அசால்ட்டாக அடித்து முடித்து ஆஸ்திரேலியா.. இந்திய அணி படுதோல்வி
Ind vs Aus 2nd Test : இதெல்லாம் ஒரு டார்கெட்டா! அசால்ட்டாக அடித்து முடித்து ஆஸ்திரேலியா.. இந்திய அணி படுதோல்வி
Thanjavur: இப்படி ஒரு மாநகராட்சியா! தூய்மை பணியாளர்கள் தான் முக்கியம்.. முழு உடல் பரிசோதனை முகாம்
Thanjavur: இப்படி ஒரு மாநகராட்சியா! தூய்மை பணியாளர்கள் தான் முக்கியம்.. முழு உடல் பரிசோதனை முகாம்
Embed widget