மேலும் அறிய

Actress Murder: பிரபல நடிகை படுகொலை...! சொத்துக்காக அடித்து கொன்ற சொந்த மகன்...! சினிமாவை மிஞ்சிய கொடூரம்..

சொத்து தகராறில் பிரபல பாலிவுட் நடிகை வீணா கபூர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீணா கபூர்

இந்தி படங்களிலும், டிவி தொடர்களிலும் நடித்து பிரபலமாக இருந்தவர் வீணா கபூர்(74). மும்பையில் வசித்து வந்த இவரை சொந்த மகனே கொடூரமான முறையில் கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவில் வீணா கபூர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

அமெரிக்காவில் வசிக்கும் மூத்த மகன்  கடந்த செவ்வாய்கிழமை அன்று வீணா கபூருக்கு பலமுறை போன் செய்துள்ளார். ஆனால் யாருமே போனை எடுக்கவில்லை. இதையடுத்து உறவினருக்கு போன் செய்த அவர், உடனே விட்டிற்கு சென்ற பார்க்கும்படி கூறினார். இதனை அடுத்து உறவினர் வீட்டிற்கு வந்த பார்த்தபோது, அங்கு வீணா கபூர் இல்லை. இது குறித்து அவர் போலீசாரிடம் புகார் அளித்தார். 

கபூரை கொன்ற மகன்

மும்பையில் வசித்து வரும் வீணா கபூரின்  இளைய மகன் சச்சினிடம் போலீசார் அவரது தாய் குறித்து  கேட்டனர். 42 வயதான சச்சினின் பதில்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்துள்ளது. இதனால், அவரிடம் விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தினர். அப்போது, போலீசார் விசாரணைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சச்சின் தனது தாயை கொடூரமாக கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.  தனது தாய் என்று கூட பார்க்காமல் பேஸ்பால் பேட் மூலம் தாயை பலமுறை தலையில் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த வீணா கபூர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டபோது சொத்து தகராறு காரணமாக தனது தாய் வீணா கபூரை கொன்றதாக சச்சின் தெரிவித்தார். இந்த சம்பவம் கூறித்து போலீசார் கூறியதாவது, 'தாயாரின் தலையில் பேஸ்பால் பேட்மூலம் அவர் பலமுறை அடித்துள்ளார். பிறகு யாரிடமும் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று, உயிரிழந்த தாயாரின் உடலை அப்புறப்படுத்தியுள்ளார். வீட்டில் இருந்து 90 கி.மீ தூரத்தில் இருக்கும் ஒரு காட்டின் அருகிலுள்ள ஆற்றில் வீணா கபூரின் உடலை வீசியுள்ளார்.  மும்பை ஜூஹு பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது என்று போலீசார் கூறினர்.

பேஸ்பால் பேட்டால் அடித்து கொலை

வீணா கபூருக்கு மும்பையில் 12 கோடி ரூபாய் மதிப்பில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இருந்துள்ளது. அதை தனது பெயருக்கு மாற்றிக் கொடுக்கும்படி சச்சின் கேட்டுள்ளார். இதற்கு வீணா கபூர் மறுத்ததாக தெரிகிறது. இது தொடர்பாக இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இளைய மகன் சச்சின் பேஸ்பால் பேட்டால் கொடூரமாக அடித்துள்ளார். உயிரிழந்த கபூரின் உடலை பெட்டி ஒன்றில் வைத்துள்ளார்.

பின்பு வீட்டில் வேலை செய்த நபரின் உதவியுடன் காரில் அவரது உடலை எடுத்து காட்டில் வீசியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சச்சின் மற்றும் வீட்டு வேலைக்காரர் சோட்டு மண்டல் இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். வரும் 19ம் தேதி வரை அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 

தலைப்பு செய்திகள்

தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி... பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி! பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget