கரூரில் ஸ்ரீ விஸ்வகர்மா ஜெயந்தி விழா - மேல தாளங்கள் முழங்க நடந்த திருவீதி உலா
தேர்வீதி பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்திற்கு சுவாமி திருவீதி உலா வந்தடைந்தது.
கரூர் மாவட்டம், அமராவதி நதிக்கரையில் ஸ்ரீ விஸ்வ பிராமண சபையோர்கள் கைலாய வாகன மண்டப படி மக்கள் நல சங்கத்தின் சார்பாக விஷ்வகர்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு அமராவதி நதிக்கரையில் அருகே உள்ள சங்க கட்டிடத்தில் இருந்து விஸ்வகர்மா சுவாமிகளும், கணபதி உற்சவரும் சிறப்பு ரத வாகனத்தில் கொழுவிற்கச் செய்தனர்.
தொடர்ந்து மேல தாளங்கள் முழங்க அங்கிருந்து புறப்பட்ட சுவாமி திருவீதி உலா கரூர் உழவர் சந்தை, ஜகவர் பஜார், உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. அதை தொடர்ந்து தேர்வீதி பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்திற்கு சுவாமி திருவீதி உலா வந்தடைந்தது.
பின்னர் சுவாமிக்கு மகா தீபாரதனை காட்டப்பட்டு, கூடியிருந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு நடைபெற்ற திருவீதி உலாவில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை அமராவதி நதிக்கரையின் ஸ்ரீ விஸ்வ பிராமண சபையோர்கள் கைலாய வாகன மண்டப படி மக்கள் நல சங்கத்தின் சார்பாக சிறப்பாக செய்தனர்.
கரூர் பாலமலை அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணியசுவாமி ஆலயத்தில் 24 ஆம் ஆண்டு திருப்புகழ் திருப்படி விழா.
கரூர் மாவட்டம், பவித்திரம் கிராமம், பாலமலை அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணியசுவாமி ஆலயத்தில் 24-ஆம் ஆண்டு திருப்புகழ் திருப்பதி விழா சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு பக்தர்கள் பாலமலை பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தை கிரிவலம் வந்த பிறகு படி பூஜை தொடங்கியது. தொடர்ந்து ஆலயத்தில் உள்ள அனைத்து படிகளுக்கும் வண்ணக் கோலமிட்டு, வாழை இலை, வாழைப்பழம், தேங்காய், பக்தி, வண்ண மாலைகள் அணிவித்து அதை தொடர்ந்து ஆலய நுழைவாயிலில் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு பின்னர் அனைத்து படிகளிலும் விளக்குகள் ஏற்றப்பட்டது.
அதை தொடர்ந்து தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய் வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் அனைத்து படிகளுக்கும் மகா தீபாதனை கட்டப்பட்டது. அதை தொடர்ந்து மூலவர் ஸ்ரீ பாலசுப்பிரமணியசுவாமிக்கு பல்வேறு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று வண்ண மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு ராஜ அலங்காரத்தில் காட்சி அளித்த சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பாலமலை அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணியசுவாமி ஆலயத்தில் நடைபெற்ற 24ஆம் ஆண்டு திருப்புகழ் திருப்பதி விழா நிகழ்ச்சியில் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாகவும், பக்தர்கள் சார்பாகவும் சிறப்பாக செய்தனர்.