மேலும் அறிய

Match Fixing: மேட்ச் ஃபிக்ஸிங்கில் சிக்கிய 3 இந்தியர்கள் உள்பட 8 பேர்.. ஐசிசி அதிரடி நடவடிக்கை.. என்ன நடந்தது?

கடந்த 2021ம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற எமிரேட்ஸ் டி10 லீக்கில் மேட்ச் ஃபிக்ஸிங் செய்ததாக 3 இந்தியர்கள் உள்பட 8 பேர் மற்றும் சில அதிகாரிகள் மீது ஐசிசி குற்றஞ்சாட்டியுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற எமிரேட்ஸ் டி10 லீக்கில் மேட்ச் ஃபிக்ஸிங் செய்ததாக 3 இந்தியர்கள் உள்பட 8 பேர் மற்றும் சில அதிகாரிகள் மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) குற்றஞ்சாட்டியுள்ளது. ஐசிசி வெளியிட்டுள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்தியர்களில் 2 பேர் அணியின் இணை உரிமையாளர்கள் என்றும், இது தவிர வங்கதேச அணியின் முன்னாள் வீரர் நசீர் ஹுசைனின் பெயரும் இந்த பட்டியலில் உள்ளது என்றும் அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. 

மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்ட இந்தியர்கள் யார் யார்..?

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற எமிரேட்ஸ் டி10 லீக்கில் விளையாடிய புனே டெவில்ஸ் அணியைச் சேர்ந்த பராக் சங்வி மற்றும் கிருஷ்ண குமார் ஆகியோர் இந்த விவகாரத்தில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த இருவரும் அந்த அணியின் இணை உரிமையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர, மூன்றாவது சிக்கிய இந்தியர் சன்னி தில்லான் ஆவார். இவர்  பேட்டிங் பயிற்சியாளராக உள்ளார். இவர்கள் அனைவரும் மேட்ச் ஃபிக்ஸிங் செய்ததாக குற்றம் சாட்டுவதுடன், 2021 ஆம் ஆண்டில் அபுதாபி டி10 லீக் மற்றும் அந்த போட்டியில் போட்டிகளை தங்களுக்கு சாதகமாக முயற்சிகள் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது என்று ஐசிசி கூறியது. ஐசிசியானது முன்னதாக இந்த தொடருக்கு ஈசிபியை (எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம்) ஊழல் தடுப்பு அதிகாரியாக (Designated Anti-Corruption Official) நியமித்துள்ளது. அவர்கள் மேற்கொண்ட சோதனையின் அடிப்படையில் இந்த குற்றச்சாட்டுகள் வெளியாகியது. 

ஐசிசி வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், போட்டி முடிவுகள் மற்றும் பிற விஷயங்களில் பந்தயம் கட்டியதாகவும், விசாரணையில் ஏஜென்சிக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் சங்வி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதேபோல், பேட்டிங் பயிற்சியாளர் சன்னி தில்லான் போட்டியை தங்களுக்கு சாதகமாக சரிசெய்ய முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்பட்டார். இது தவிர, கிருஷ்ண குமார் Designated Anti-Corruption Official விடம் இருந்து உண்மைகளை மறைத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இப்போது டி-10 லீக்கில் மேட்ச் பிக்சிங் நடந்ததை உறுதி செய்த ஐசிசி, குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

19 நாட்கள் மட்டுமே அவகாசம்:

இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள வங்கதேச அணியின் முன்னாள் வீரர் நசீர் ஹுசைன் இதுவரை வங்கதேச அணிக்கான 19 டெஸ்ட் மற்றும் 65 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 2017-க்குப் பிறகு அவர் எந்த ஒரு சர்வதேச கிரிக்கெட்டிலும் விளையாடவில்லை. தற்போது அவர் பங்களாதேஷ் பிரீமியர் லீக் மற்றும் வேறு சில லீக்குகளில் விளையாடி வருகிறார். இவர்  750 டாலர்களுக்கு மேல் பரிசுகளைப் பெற்றது குறித்து DACO க்கு தெரிவிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தவிர, பேட்டிங் பயிற்சியாளர் அசார் ஜைதி பட்டியலில் சேர்க்கப்பட்ட மற்ற நபர்களில் ஒருவர். மேலாளராக ஷதாப் அகமதுவும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்நாட்டு வீரர்கள் ரிஸ்வான் ஜாவேத் மற்றும் சாலியா சமான் ஆகியோர் உள்ளனர். 6 பேரை சஸ்பெண்ட் செய்ததுடன், குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க அனைவருக்கும் 19 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது ஐசிசி. ஐசிசி தனது அறிக்கையில், 'டி-டென் லீக் 2021 இன் சில போட்டிகளை நிர்ணயம் செய்ய முயற்சிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது பலிக்கவில்லை. இப்போது, ​​ஐசிசி, ஈசிபியின் ஊழல் தடுப்புத் துறை அதிகாரிகளை விசாரிக்க நியமித்துள்ளது, அவர்கள் விசாரித்து முடிவெடுப்பார்கள்." என தெரிவித்தது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆகும் ஆர்.மகாதேவன்: யார் இவர்?
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆகும் ஆர்.மகாதேவன்: யார் இவர்?
டென்மார்க் சென்ற அமைச்சர் அன்பில்: புதுமைப்பெண், காலை உணவுத் திட்டங்களை விளக்கி பெருமிதம்!
டென்மார்க் சென்ற அமைச்சர் அன்பில்: புதுமைப்பெண், காலை உணவுத் திட்டங்களை விளக்கி பெருமிதம்!
Breaking News LIVE: காவலர்கள் கட்டணமின்றி பேருந்தில் பயணிக்க அனுமதி இல்லை - போக்குவரத்துத்துறை உத்தரவு
காவலர்கள் கட்டணமின்றி பேருந்தில் பயணிக்க அனுமதி இல்லை - போக்குவரத்துத்துறை உத்தரவு
Singer Srinivas: “கடவுளின் படைப்பு என சொல்பவர்களுக்கு சிகிச்சை தேவை” - பாடகர் ஸ்ரீனிவாஸ்
Singer Srinivas: “கடவுளின் படைப்பு என சொல்பவர்களுக்கு சிகிச்சை தேவை” - பாடகர் ஸ்ரீனிவாஸ்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Irfan baby gender reveal : மன்னிப்பு கேட்ட இர்ஃபான்! கறார் காட்டும் சுகாதாரத்துறை! அடுத்தது என்ன?Amitshah on VK Pandian :  ”ஒடிசாவை தமிழர் ஆளலாமா? மோடி பாணியில் அமித்ஷா! VK பாண்டியனுக்கு ஸ்கெட்ச்Congress Master Plan  : இன்னும் 35 சீட் தான் பாஜகவின் அஸ்திவாரம் காலி காங்கிரஸின் ரகசிய ரிப்போர்ட்Palanivel Thiyagarajan  : PTR தான் வேணும்..ஸ்டாலின் அதிரடி!மீண்டும் FINANCE மினிஸ்டர்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆகும் ஆர்.மகாதேவன்: யார் இவர்?
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆகும் ஆர்.மகாதேவன்: யார் இவர்?
டென்மார்க் சென்ற அமைச்சர் அன்பில்: புதுமைப்பெண், காலை உணவுத் திட்டங்களை விளக்கி பெருமிதம்!
டென்மார்க் சென்ற அமைச்சர் அன்பில்: புதுமைப்பெண், காலை உணவுத் திட்டங்களை விளக்கி பெருமிதம்!
Breaking News LIVE: காவலர்கள் கட்டணமின்றி பேருந்தில் பயணிக்க அனுமதி இல்லை - போக்குவரத்துத்துறை உத்தரவு
காவலர்கள் கட்டணமின்றி பேருந்தில் பயணிக்க அனுமதி இல்லை - போக்குவரத்துத்துறை உத்தரவு
Singer Srinivas: “கடவுளின் படைப்பு என சொல்பவர்களுக்கு சிகிச்சை தேவை” - பாடகர் ஸ்ரீனிவாஸ்
Singer Srinivas: “கடவுளின் படைப்பு என சொல்பவர்களுக்கு சிகிச்சை தேவை” - பாடகர் ஸ்ரீனிவாஸ்
Watch video : கர்ப்பமாக இருக்கிறாரா கத்ரீனா கைஃப்? லண்டனில் குழந்தை பிறக்கப்போகிறதா? வைரலாக பகிரப்படும் வீடியோ 
Watch video : கர்ப்பமாக இருக்கிறாரா கத்ரீனா கைஃப்? லண்டனில் குழந்தை பிறக்கப்போகிறதா? வைரலாக பகிரப்படும் வீடியோ 
Virat Kohli: வெறும் 29 ரன்கள் எடுத்தால் போதும்..! ஐபிஎல் வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டும் விராட் கோலி!
வெறும் 29 ரன்கள் எடுத்தால் போதும்..! ஐபிஎல் வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டும் விராட் கோலி!
PM Modi: நான் சாதாரண மனிதனே இல்லை..கடவுளின் குழந்தை.. பிரதமர் மோடி பேச்சால் சர்ச்சை!
நான் சாதாரண மனிதனே இல்லை..கடவுளின் குழந்தை.. பிரதமர் மோடி பேச்சால் சர்ச்சை!
Youtuber Irfan: ”நடந்தது தப்புதான் ” - குழந்தையின் பாலினம் பற்றி அறிவித்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட இர்ஃபான்!
”நடந்தது தப்புதான் ” - குழந்தையின் பாலினம் பற்றி அறிவித்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட இர்ஃபான்!
Embed widget