மேலும் அறிய

Sani Vakra Nivarthi Palangal: கன்னிக்கு சூப்பர்! கடகம், சிம்மம் ராசிக்கு எப்படி தெரியுமா? சனி வக்கிர நிவர்த்தி பலன்கள் இதோ!

Sani Vakra Nivarthi Palangal: சனி வக்கிர நிவர்த்தியால் கடகம், சிம்மம் மற்றும் கன்னி ராசிக்கார்களுக்கு வாழ்வில் என்ன மாற்றம் நடக்கப் போகிறது? என்பதை கீழே காணலாம்.

Sani Vakra Nivarthi 2023: ஒரு மனிதனின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வல்லமை பொருந்தியவர் சனிபகவான். இந்த நிலையில், சனி வக்கிர நிவர்த்தி இன்று(நவம்பர் 4-ஆம் தேதி) நடைபெற்றுள்ளது. இதன் தாக்கம் கடகம், சிம்மம் மற்றும் கன்னி ராசிக்கு எப்படி அமையப்போகிறது என்பதை கீழே காணலாம். 

கடக ராசி :   55%  கவனம் தேவை 

சனி பகவான் உங்கள் ராசிக்கு  ஏழு மற்றும் எட்டாம் இடத்துக்கு சொந்தக்காரன்.  பொதுவாகவே சனி அஷ்டம  ஸ்தானத்தில் வருவது  மிகப்பெரிய சிக்கல்களையும்  தடங்கல்களையும் கொண்டுவரும்.  கிட்டத்தட்ட கடக ராசிக்கும் அதே போன்று  அஷ்டமுத்து சனி பிரச்சனைகளை கொண்டு வரும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் கடக ராசிக்கு அஷ்டமாதிபதி அஷ்டமத்திலேயே ஆட்சி பெறுவது  ஒருவகையில் எதிர்பாராத தன வரவுகளை ஜாதகருக்கு கொண்டு வரும்.

எட்டாம் இடம் என்பது அடுத்தவரின் பணம்,  மனைவியின் தனம்,  உழைக்காமல் சம்பாதிக்க கூடிய பணம்,  இப்படி சில ஏற்றமான பலன்கள் இருந்தாலும்,  பல விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். உதாரணமாக பணத்தை முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். வாகனங்களில் செல்லும்போது வேகமாக செல்லக்கூடாது  அகப்பட்டவனுக்கு அஷ்டமத்து சனி என்று கூறுவார்கள். எட்டாம் இடத்து சனி நீதிபதியாக செயல்படுவார்  எமதர்மன் எப்படி ஒருவரின் பாவம் புண்ணியத்திற்கு ஏற்ப அவருக்கு  சொர்க்கம் நரகம் என்பதை தீர்மானிக்கிறாரோ?

அதேபோல் எட்டாம் இடம் ஆயுளைக் குறிக்கும் ஸ்தானம் என்பதால்  ஒருவரின் பாவம் புண்ணியத்திற்கு ஏற்றார் போல அங்கு அமர்ந்திருக்கும் சனி பகவானும்  அந்த ஜாதகருக்கு மரணத்தையோ மரணத்துக்கு ஒப்பான கண்டத்தையோ கொண்டு வருவார். இப்படி கூறுவதால் கடக ராசி அனைவருக்கும் இது நடக்கும் என்பது அல்ல  எட்டாம் இடத்தில் இருக்கும் சனி ஆட்சி பெறுவதால் உங்கள் உயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

கடக ராசிக்கு ஏழாம் அதிபதியும் சரியாக வருவதால் அவர் எட்டாம் வீட்டில் அமர்ந்திருப்பதால்  கணவனிடமும் அல்லது மனைவியிடமோ சிறு சிறு கருத்து வேதங்கள் வந்து போகலாம். நம்மை யாரோ கட்டுப்படுத்துவது போல ஒரு உணர்வு  தோன்றலாம். சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு  தீபம் ஏற்றி வர இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம். என்னதான் சனிபகவான் அஷ்டமத்தில் அமர்ந்தாலும்,  பாக்கியஸ்தளத்தில் அமர்ந்திருக்கும் ராகுவால் உங்களுக்கு நன்மையே நடக்கப் போகிறது,  அதேபோல் அடுத்த வருடம் மே மாதத்திற்கு பிறகு  லாப ஸ்தானத்தில் வரப்போகும் உருவாக நன்மை நன்மை நன்மை நன்மை நன்மையே !!! 

அதிர்ஷ்டமான எண் : 2

அதிர்ஷ்டமான நிறம்:   வெள்ளை 

வணங்க வேண்டிய தெய்வம் : அம்மன் வழிபாடு 

சிம்ம ராசி :  80%  வெற்றி உறுதி 

அன்பார்ந்த சிம்ம ராசி வாசகர்களே  2023,

உங்களுக்கு சற்று ஏற்ற இறக்கமான  பலன்களே நடந்திருக்கும் காரணம் அஷ்டம குருவின் ஆதிக்கம் கடைசி மூன்று மாதத்தில் உங்களுக்கு செயல்பட்டுக் கொண்டிருந்தது.  தற்போது நடந்திருக்கும் இந்த சனி வக்கிர நிவர்த்தியின் மூலமாக  உங்களுடைய ராசிக்கு ஆறு மற்றும் ஏழாம் இடத்திற்கு சொந்தக்காரரான சனி பகவான்  ஏழிலேயே ஆட்சி பெற்று அமர்வதால் புது நண்பர்கள்,  பார்ட்னர்ஷி  வகையில்  முன்னேற்றம்,  எதிலும் வெற்றி, முதலீடு செய்து அதில் லாபம் பார்ப்பதாக அமையும். 

சிம்மத்திற்கு ஆறாம் வீட்டிற்கு வக்கிரம் அடைந்திருந்த சனி பகவான்  தற்போது வக்கிர நிவர்த்தி அடைந்து ஏழாம் பாவத்திற்கு வந்து  சிம்ம ராசியை பார்ப்பது  கடனை அடைக்க கூடிய தன்மையை காட்டுகிறது.  ஒருவேளை தொழில் தொடங்குவதற்கு பெரிய கடனாக நீங்கள் வாங்கி இருந்தால், அந்தக் கடனை சல்லி பைசா மிச்சம் இல்லாமல் அடைப்பதற்கான வழியை ஏழில் இருக்கும் சனி பகவான்  செய்து கொடுப்பார். நீண்ட நாட்களாக தள்ளிப்போன திருமண பேச்சுவார்த்தை  முடிவுக்கு வரும்.

திருமணம் ஆகாத சிம்ம ராசிக்காரர்களுக்கு திருமணம் நடைபெறும். வீட்டில் சுப விசேஷங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். கால புருஷ லக்னத்திற்கு  கும்ப வீடு லாபஸ்தானம் என்பதால்  சிம்ம ராசிக்கு அது ஏழாம் பாவமாக வருவதால், நிச்சயமாக  மனதிற்குப் பிடித்த வரன் அமையும்.  கூட்டுத் தொழிலில் வெற்றி கிடைக்கும். கலைத்துறையினருக்கு ஏற்றமான ஒரு காலகட்டம். மீடியா கம்யூனிகேஷன் ஃபீல்டில் இருப்பவர்களுக்கு  அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கான வாய்ப்புகள் அதிகம். காரணம் சிம்ம ராசிக்கு மூன்றுக்கும் பத்திற்கும் அதிபதியாக சுக்கிரன் வருவதால்  சிம்ம ராசியில் கலை துறையைச் சார்ந்த அதிகமானோர் இருக்க வாய்ப்புண்டு.  பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று கூட போகிறார்கள்.  தம்பதிகளின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்தால்  அவை திரும்ப வாபஸ் வாங்கப்பட்டு குடும்பம் ஒற்றுமை அடையும். இந்த சனி வக்கிர நிவர்த்தி சிம்ம ராசிக்கு அமோக வெற்றியை தரப்போகிறது !!!

அதிர்ஷ்டமான எண் : 6

அதிர்ஷ்டமான நிறம்:   ஆரஞ்சு 

வணங்க வேண்டிய தெய்வம் :  சிவன் 

கன்னி ராசி : 90%  வெற்றி உறுதி 

அன்பார்ந்த  கன்னி ராசி  நேயர்களே, 

சனிபகவான்  உங்கள் ராசிக்கு ஐந்தாம் அதிபதி மற்றும் ஆறாம் அதிபதி. ரோக,  ருண,  சத்ரு  ஸ்தானத்தில் வக்ர நிவர்த்தி பெறுகிறார். ஆறாம் இடம் என்பது சனி பகவானுக்கு பிடித்தமான இடம். உங்களது வாழ்க்கையை முன்னேற்றுவதற்கான பாதையை அமைத்துக்  கொடுப்பார்.  கடன் தொல்லை ஓயும்.  எதிரிகள் அவர்கள் இருந்த இடம் தெரியாமல் தெறித்து ஓடுவார்கள்.

இது நாள் வரையில் உங்களுக்கு இரண்டாம்  இடத்தில் கேது பகவான் அமர்ந்து  சிறு சிறு சண்டை சச்சரவுகளை குடும்பத்திற்குள் கொடுத்திருப்பார்.  அந்த நிலை தற்போது மாறப்போகிறது.  லக்கினத்தில் கேது வந்து விட்டதே  என்ன செய்யப் போகிறாரோ? இன்று கலங்கி நிற்கும் உங்களுக்கு  இதோ நான் காப்பாத்த வந்து விட்டேன் என்று சனி பகவான் கும்பத்தில் அமர்ந்து  உங்களுடைய  எண்ணங்களை நிறைவேற்றுகிறார். கெட்டவன் எட்டில் வீற்றிடும் ராஜயோகம்  என்ற பழமொழி  சனிபகவான் துஷ்டனமான ஆறாம் இடத்தில் அமர்வது  உங்களுக்கு ராஜயோகத்தை கொண்டு வந்து சேர்க்கப் போகிறது.  புதிய மனை வாங்குவீர்கள்,  வீடு கட்டுவீர்கள்.  பழைய வாகனம் கொடுத்து புதிய வாகனத்தை மாற்ற போகிறீர்கள்.  வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கப் போகிறது.  திருமணம் கைகூடி வரப்போகிறது.  பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக அமையட்டும் .  இந்த சனி வக்கிர நிவர்த்தி உங்களுக்கு ராஜயோகத்தை கொண்டு வரப் போகிறது. வெற்றி வெற்றி !!! 

அதிர்ஷ்டமான  நிறம் :  மஞ்சள் 

அதிர்ஷ்டமான எண் : 2, 6

சிவணங்க வேண்டிய தெய்வம்  : ஆஞ்சநேயர் வழிபாடு 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
Embed widget