மேலும் அறிய

சேலம் மயான கொள்ளை: பக்தர்கள் ஆக்ரோஷமாக ஆடு, கோழிகளை கடித்து நேர்த்திக்கடன்

நோய் நீங்கவும், குழந்தை பாக்கியம், மற்றும் பிணி நீங்க வேண்டி சுடுகாட்டில் படுத்து பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர்.

மயான கொள்ளை என்பது அகிலத்தை காக்கும் அம்மன் கடும்கோபம் அடைந்து உலகில் உள்ள உயிர்களை பலி கொண்டு ஆக்ரோஷத்தில் இருந்தார். அப்போது அங்காள பரமேஸ்வரியின் கோபத்தை சாந்தப்படுத்த சிவன் ருத்ர நடனமாடி அம்மனை சங்கலியால் கட்டிப்போட்டார். அம்மனின் அடங்காத கோபத்தை கட்டுப்படுத்திய சிவன் ஆண்டுதோறும் மஹாசிவராத்திரி விழாவிற்கு அடுத்து வரும் அம்மாவசை தினத்தில் அம்மனின் கட்டு அவிழ்க்கப்பட்டு உயிர் பலி வாங்க அனுமதி அளித்தார். இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக அம்மாவசை தினத்தில் மயான கொள்ளை விழா நாடு முழுவதும் வெகு விமர்சியாகவும், கோலாகலமாகவும், நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் மயான கொள்ளை நிகழ்ச்சி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வந்தாலும் சேலத்தில் பல நூறு ஆண்டுகாலமாக மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த மயான கொள்ளை நிகழச்சி மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். மயான கொள்ளைக்காக பக்தர்கள் பதினைந்து தினங்களுக்கு முன்னரே விரதம் இருந்து மஹா சிவராத்தி தினந்தில் அங்கால அம்மனுக்கு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர்.

சேலம் மயான கொள்ளை: பக்தர்கள் ஆக்ரோஷமாக ஆடு, கோழிகளை கடித்து நேர்த்திக்கடன்

 இதனை தொடர்ந்து மஹா சிவராத்திரியின் மறுநாள் மயான கொள்ளை நிகழ்ச்சிக்கு அம்மனுக்கு பல்வேறு விதமான மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு ஊர்வலமாக எடுத்துவரும் போது விரதம் இருக்கும் பக்தர்கள்  அங்காளம்மன், பெரியண்ணன், முனியப்பன், கருப்பண்ணன் உள்ளிட்ட காவல் தெய்வங்களை சிறப்பிக்கும் வகையில் அவர்களை போல பக்தர்கள் காளி வேடமணிந்து வண்ணங்களை முகத்தில் பூசி மயில் தோகையை கட்டி, நடனமாடியபடி, சுடுகாடு நோக்கி சென்று நேர்த்திகடன் செலுத்துவர். அப்போது பக்தர்கள் உயிருடன் உள்ள கோழி, ஆடுகளை வாயில் கடித்துக்கொண்டு ஓடிவருவார்கள் ரத்தம் சிந்த வரும்போது சுடுகாட்டின் வளாகத்தில் காத்திருக்கும் பக்தர்கள் அம்மன் வரும்போது வழிகள் தோறும் படுத்து கொள்ளவார்கள். இந்த நிலையில் பக்தர்களை அம்மன் தாண்டி சென்றால் நோய், பில்லி, பிணி, என சகலமும் நீங்கும் எனபது ஐதீகம். பக்தர்களை தாண்டி சென்ற அம்மன் வேடமணிந்த பக்தர்கள் சுடுகாட்டில் சூறை ஆடி விரதத்தை முடிப்பார்கள்.‌ இந்த நிகழ்ச்சியை காண சேலம் மற்றும் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து மயான கொள்ளை நிகழ்ச்சியை கண்டு மகிழ்வார்கள். சேலம் மாநகர மணக்காடு, கிச்சிபாளையம், பொன்னம்மாபேட்டை, அம்மாபேட்டை, ஜான்சன் பேட்டை, அஸ்தம்பட்டி, நான்கு ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் இருந்து பக்தர்கள் வேடமிட்டு ஜான்சன் பேட்டை மயானத்திற்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

சேலம் மயான கொள்ளை: பக்தர்கள் ஆக்ரோஷமாக ஆடு, கோழிகளை கடித்து நேர்த்திக்கடன்

இது குறித்து பக்தர்கள கூறும்போது, பல ஆண்டுகாலமாக இந்த மயான கொள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ளதாகவும், அம்மன் வரும்போது படுத்துக்கொண்டால் தீராத நோய் நீங்கும், என்றும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம், திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்றும் தெரிவித்தனர். மேலும் அவர்கள்  கூறும்போது இந்த மயான கொள்ளை நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் குடும்பம் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் மேலும் பில்லி, பிணி பிடித்தவர்கள் இங்கே கலந்து கொண்டால் நீங்கி விடும் எனவும் தெரிவித்தார்.

மேலும் அசம்பாவிதங்களை தடுப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

தலைப்பு செய்திகள்

"காவிரி பொங்கி வரணும்!" - கண்ணீரும் பக்தியுமாக ஆடிப்பெருக்கை கொண்டாடிய மயிலாடுதுறை மக்கள்.
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
கும்பகோணம் அருகே நூதன அக்னி ஆணி தீமிதி திருவிழா: நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
கும்பகோணம் அருகே நூதன அக்னி ஆணி தீமிதி திருவிழா: நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
அனல் பறந்த தீக்குண்டம்... சிலிர்க்க வைத்த பக்தி! மாமாகுடி மாரியம்மன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!
அனல் பறந்த தீக்குண்டம்... சிலிர்க்க வைத்த பக்தி! மாமாகுடி மாரியம்மன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget