Sabarimala Temple: மகர விளக்கு பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு நிறைவு
ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. புத்தாண்டின் முதல் நாள் தரிசனத்திற்காக பம்பை முதல் சன்னிதானம் வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.
கடந்த திங்கள்கிழமை நடை திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு விழாவையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோவில் நடை திறக்கப்பட்ட நாளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். இருப்பினும், இரண்டு மாத கால வருடாந்திர யாத்திரை சீசனின் இரண்டாம் கட்டத்திற்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், ஐயப்பனை தரிசனம் செய்வதற்கு மக்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
சபரிமலை மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு மலைக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கூட்ட நெரிசலைக் கண்ட திருவிதாங்கூர் தேவசம் போர்டு வனப் பாதை வழியாக பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு சிறப்பு பாஸ் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. விர்ச்சுவல் வரிசை முறை மற்றும் ஸ்பாட் புக்கிங் ஆகியவற்றைப் பயன்படுத்தி பம்பா வழியாக வரும் பக்தர்கள் தரிசனத்திற்காக நீண்ட நேரம் காத்திருக்கும் நேரத்தைத் தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டது. முன்னதாக, வனப்பாதை வழியாக வரும் 5,000 பக்தர்களுக்கு சிறப்பு பாஸ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், வனப் பாதை வழியாக வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்தது. டிசம்பர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் கோவில் மூடப்பட்டதால் கூட்டம் கணிசமாக அதிகரித்தது.
‘போராட்டம்லாம் இல்லை; புது ரூட் எடுப்போம்’ - அண்ணா பல்கலை விவகாரத்தில் டைம் கேட்கும் விஜய்!
கடந்த மாதம் 26-ந் தேதி மண்டல பூஜை நடைபெற்று முடிந்தது. மண்டல பூஜை சீசனில் 41 நாட்களில் 32.49 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். நடப்பு சீசனையொட்டி ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 70 ஆயிரம் பக்தர்களுக்கும், உடனடி தரிசன முன்பதிவின் படி தினசரி 10 ஆயிரம் பக்தர்களுக்கும் தரிசன அனுமதி அளிக்கப்பட்டது.
இந்தநிலையில், மண்டல பூஜை நாட்கள் நெருங்க, நெருங்க பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வந்தது. இதையடுத்து உடனடி தரிசன முன்பதிவு மூலம் கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் கடந்த மண்டல சீசனில் ஒரே நாளில் அதிகப்படியாக 1 லட்சத்து 6 ஆயிரம் பக்தர்கள் வரை சிரமம் இன்றி தரிசனம் செய்தனர்.
இந்தநிலையில் மகரவிளக்கு சீசன் தொடங்கியதையடுத்து சபரிமலைக்கு ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். நேற்று (புதன்கிழமை) ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. புத்தாண்டின் முதல் நாள் தரிசனத்திற்காக பம்பை முதல் சன்னிதானம் வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.
மகர விளக்கு பூஜை வருகிற 14-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் 15-ந் தேதி வரை ஆன்லைன் முன்பதிவு நிறைவடைந்துள்ளது. இந்தநிலையில் உடனடி தரிசன முன்பதிவின்படி தரிசனத்திற்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் தரிசன அனுமதி வழங்கப்படும் என்றும் அதற்கு ஏதுவாக பம்பையில் உடனடி தரிசன முன்பதிவுக்கான கவுண்ட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இருப்பதாகவும் திருவிதாங்கூர் தேவஸ்தான நிர்வாகத்தின் சார்பில் கூறப்படுகிறது.