தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடுகள் தீவிரம்
நாளை மறு நாள் நடைபெறவிருக்கும் விநாயகர் சதுர்த்தி திருவிழாவில் தேனி , திண்டுக்கல் மாவட்டங்களில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோயில்கள், முக்கிய இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தப்படும். பின்னர் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். இதில், தேனி, திண்டுக்கல் மாவட்டத்தின் பல பகுதிகளில் விநாயகர் சிலைகளை வைக்க இந்து அமைப்பினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
இதற்காக தேனி, திண்டுக்கல் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் விநாயகர் சிலைகள் தயாரித்து கொண்டு வரப்படுகின்றன. அதேநேரம் விதிகளை கடைபிடித்து விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்த வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
Hardik Pandya: போர் கண்ட சிங்கம்.. யார் கண்டு அஞ்சும்?? ஹர்திக் பாண்ட்யாவின் வைரல் ட்வீட்
இதையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், காவல் துணை கண்காணிப்பாளர்கள், வட்டாட்சியர்கள் தலைமையில் இந்து அமைப்பினருடன் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதில் ஆர்.டி.ஓ. விடம் முறையாக விண்ணப்பித்து அனுமதி பெற்ற பின்னரே சிலை வைக்க வேண்டும். அனுமதி இல்லாமல் சிலை வைத்தால் பறிமுதல் செய்வதோடு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
Soya Tikka : பிரியாணிக்கு மட்டுமா சோயா மீல் மேக்கர்? காரசாரமா சோயா டிக்கா ரெசிப்பி இதோ
மேலும், மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ள இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலை வைக்க அனுமதி கேட்டு வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 1,350 இடங்களில் சிலை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே போல தேனி மாவட்டம் முழுவதும் 137 சிலைகள் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இரு மாவட்ட காவல் கண்கானிப்பாளர்கள் தலைமையிலான போலீசார் விநாயகர் சதுர்த்தி திருவிழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்