Soya Tikka : பிரியாணிக்கு மட்டுமா சோயா மீல் மேக்கர்? காரசாரமா சோயா டிக்கா ரெசிப்பி இதோ..
சோயா உடல் உறுப்புகளை சுற்றி கொழுப்பு படிவதை தடுத்து ஆரோக்கியமான எடையை நிர்வகிப்பதோடு, தசை வளர்ச்சிக்கும் உதவுகிறது.
ஆரோக்கியமான மற்றும் சுவையான உணவை நாம் உண்ண வேண்டும் என்றால்,இந்த சோயா டிக்கா ரெசிபியை கண்டிப்பாக செய்து பார்க்க வேண்டியது அவசியம். இந்த உணவுப் பொருள் பஞ்சாப் மாநில முறையில் தயாரிக்கப்படும் சத்து நிறைந்த ஒரு உணவுப் பொருளாகும்.
சோயா பீன்ஸ் என்று அழைக்கப்படும் ஒருவகை பீன்ஸில் இருந்து இந்த சோயாவானது தயாரிக்கப்படுகிறது.
சோயாவானது உலகம் முழுவதிலும் பரவலாக கிடைக்கக்கூடிய ஒரு தானிய வகையாகும். இந்த சோயா பீன்ஸில் இருந்து அப்படியே பயிராக சமைக்கக்கூடிய சோயா விதை இந்த விதையை பிழிந்து எடுக்கப்படும் சோயா எண்ணெய், மற்றும் எண்ணெய் தயாரிப்பின்போது கிடைக்கின்ற சோயா புண்ணாக்கு என்று கிடைப்பதோடு மட்டுமல்லாது சோயா பால் இதுவும் இந்த விதைகளின் மூலம் கிடைக்கிறது. இந்த சோயா மையானது இறைச்சியை போன்று இழுபடும் தன்மையுடன் கூடியதாக இருக்கிறது.
இந்த சோயா பீன்ஸில் சோயா எண்ணெய் எடுத்ததற்குப் பிறகு கிடைக்கும் இந்த சோயாவானது சைவ பிரியர்களுக்கு அசைவத்தின் உணவு வகையான இறைச்சியை மெல்லுவதைப் போன்ற ஒரு இழுபடும்தன்மையை தரக்கூடிய ஒரு சக்தி நிறைந்த உணவு பதார்த்தமாகும்.
இந்த சோயாவானது மதிப்பு கூட்டப்பட்டு சோயா புண்ணாக்கு சமைப்பதற்காக பயன்படுகிறது. இதே போலவே இந்த சோயா எண்ணெய் ஆனது விலை மிகுந்ததாக உலகம் முழுவதும் அறியப்படுகிறது அதைப்போலவே இந்த சோயா பால் ஆனது உடனடி சக்திக்கு அனைவருக்கும் எடுத்துக் கொள்ளக்கூடியதாக இருக்கிறது
புரதம்,செரிமானமாக கூடிய தேவையான கொழுப்புகள், கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம்,வைட்டமின் சி மற்றும் ஃபோலேட் மற்றும் தியாமின் போன்ற சத்துக்களும் இதில் அடங்கியுள்ளது.
இதற்கு தேவைப்படும் பொருட்களை முதலில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் அது என்னவென்று கீழே விரிவாக தரப்பட்டுள்ளது.
சோயா டிக்கா தயாரிக்க தேவையான பொருட்கள்
200 கிராம் சோயா துண்டுகள்,
2 சின்ன வெங்காயம்,
1 பச்சை குடைமிளகாய்,
1 கப் தயிர்,
1 தேக்கரண்டி இஞ்சி-பூண்டு விழுது
1 தேக்கரண்டி கருப்பு மிளகு தூள்
1 தேக்கரண்டடி உப்பு
1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்
1 டீஸ்பூன் தந்தூரி மசாலா2-3 பச்சை மிளகாய் (நறுக்கியது) மற்றும் எண்ணெய்
முதலில், நீங்கள் சோயா துண்டுகளை குறைந்தது 5-6 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். அவை முடிந்ததும், அவற்றிலிருந்து அனைத்து தண்ணீரையும் வெளியேற்றவும். ஒதுக்கி வைக்கவும்.
2. அடுத்த கட்டமாக இந்த சோயா துண்டுகளை ஒரு சிறிய கலவை கிண்ணத்தை எடுத்து, சிவப்பு மிளகாய் தூள், கருப்பு மிளகு தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு மற்றும் சிறிது தயிர் சேர்த்து நன்கு பூசவும்.
இப்போது கிண்ணத்தில் சோயா துண்டுகளை சேர்த்து சில நிமிடங்கள் ஊர வைக்கவும்.
ஒரு கிரில் கடாயில் எண்ணெயை சூடாக்கி, சோயா துண்டுகளை சமைக்கவும். எல்லா பக்கங்களிலும் இருந்து நன்றாக சமைக்கவும். சோயாவை சமைத்து சத்து நிறைந்த இந்த உணவு பதார்த்தத்தை சிற்றுண்டி வகையாகவும் மற்றும் சோறு மற்றும் ஏனைய உணவு வகைகளுடன் தொடுகறியாக பயன்படுத்திக் கொள்ளலாம். இத்தகைய சோயா டிக்காவை சாப்பிடுவதினால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்த்தல், உடல் எடையை குறைக்க விருப்பம் உள்ளவர்கள் கண்டிப்பாக சோயா எடுத்துக் கொள்வது அவசியம். ஆய்வின்படி சாப்பிடுவதால் உடல் உறுப்புகளை சுற்றி கொழுப்பு படிவதை தடுக்கிறது. மேலும் ஆரோக்கியமான எடையை நிர்வகிப்பதோடு, தசை வளர்ச்சிக்கும் உதவுகிறது. ஆகவே இந்த சோயா டிக்காவை சாப்பிட்டு நம் உடல்நிலை உறுதி செய்வோம்