பழனி கோயிலில் அந்தரத்தில் தொங்கியபடி பறவைக்காவடி எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
பழனி முருகன் கோயிலுக்கு வால்பாறையை சேர்ந்த பக்தர்கள் அந்தரத்தில் தொங்கியபடி பறவைக்காவடி எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில் மொட்டை எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் என பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன்கள் செலுத்தி வருகின்றனர். தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படும் முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது. இந்த அறுபடை வீடுகளில் மூன்றாம் படை திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயிலாகும்.
இப்படி பல்வேறு புகழ்பெற்ற பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். தைப்பூசத் திருவிழா நிறைவு பெற்று அடுத்த மாதம் பங்குனி உத்திரத் திருவிழா தொடங்க உள்ள நிலையில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த பக்தர்கள் 47வது ஆண்டாக பழனிக்கு மயில்காவடி, பால்காவடி எடுத்து பாத யாத்திரையாக வந்திருந்தனர்.
TN Assembly: காவிரி விவகாரம்.. சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த எடப்பாடி பழனிசாமி..
இவர்கள் சண்முக நதியில் புனித நீராடி, உடல் முழுவதும் அலகு குத்தி அந்தரத்தில் தொங்கியபடி பிரம்மாண்டமான பறவை காவடி எடுத்து வந்தனர். உடல் முழுவதும் அலகு குத்தி, அலங்கரிக்கப்பட்ட ராட்சத கிரேனில் தொங்கியபடியே வந்த பக்தர்கள் கிரிவலம் சுற்றி அருள்மிகு பாதவிநாயகர் கோயிலில் நேர்த்திக்கடனை நிறைவு செய்தனர். உடல் முழுவதும் அலகு குத்தி பக்தர்கள் வலம் வந்தது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது .