TN Assembly: சாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல.. தமிழ்நாடு முதலமைச்சர் திட்டவட்டம்..
சாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சாதி வாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல என தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
2024-ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் பிப்ரவரி 12-ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் காலை தொடங்கியது. அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, “பிப்ரவரி 15-ஆம் தேதி ஆளுநர் உரையின் மீதான விவாதம் நடைபெறும். பிப்ரவரி 16-ஆம் தேதி சட்டப்பேரவைக்கு விடுமுறை, தொடர்ந்து பிப்ரவரி 19-ஆம் தேதி 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. 20-ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். பிப்ரவரி 21-ஆம் தேதி இரண்டு வேளைகளாக பொது பட்ஜெட் மீது விவாதம் நடைபெறும். 22-ஆம் தேதி முதலமைச்சர் பதிலுரையுடன் சட்டப்பேரவை நிறைவு பெறும்” என தெரிவித்தார்.
அதன்படி இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தொடர்பாக விவாதம் நடைபெற்றது. பின் சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு குறித்து பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அப்போது பேசிய தமிழ்நாடு முதலமைச்சர், சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தெரிவித்து பாமக தலைவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ஜிகே மணி உள்ளிட்ட பாமகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் தன்னை நேரடியாக சந்தித்து பலமுறை கோரிக்கை வைத்துள்ளதாகவும், சாதி வாரி கணக்கெடுப்பு கொள்கைக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல எனவும் உங்களுக்கு சாதகமாகவே நடந்து வருவதாகவும் இந்த விளக்கத்திற்கு பின் நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் அதற்கு எதுவும் கூற முடியாது என்றும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து பாமக வெளிநடப்பு செய்தது.