கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் 26 வரை பக்தர்கள் மூலவர் தரிசனம் செய்ய அனுமதி இல்லை
23-ந் தேதி மாலை 3 மணி வரை மட்டுமே மூலவரை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.26-ந் தேதி வரை பக்தர்கள் மூலவர் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் அறிவிப்பு.
![கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் 26 வரை பக்தர்கள் மூலவர் தரிசனம் செய்ய அனுமதி இல்லை Palani: Devotees are not allowed to have darshan of Murugan at Palani Murugan Temple till 26th due to Kumbabhishekam. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் 26 வரை பக்தர்கள் மூலவர் தரிசனம் செய்ய அனுமதி இல்லை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/29/7d7ecf2ca419464c6535a641b0ded0fa1667033524650113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பழனி முருகன் கோவில் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில், வருகிற 27-ந்தேதி பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு 23-ந்தேதி மாலையில் முதற்கால யாகசாலை பூஜை தொடங்குகிறது. அப்போது சுவாமியை கலசத்தில் ஆவாஹணம் செய்து யாகசாலையில் எழுந்தருள்வார். அதைத்தொடர்ந்து கருவறையில் திருப்பணிகள் நடைபெறும். இதனால் 23-ந் தேதி மாலை 3 மணி வரை மட்டுமே மூலவரை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.
முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை நடந்தது எப்படி..? மருமகனை வைத்து ஸ்கெட்ச் போட்ட மஸ்தான் தம்பி..!
அதையடுத்து 26-ந் தேதி வரை பக்தர்கள் மூலவர் தரிசனம் செய்ய அனுமதி இல்லை. அதேவேளையில் யாகசாலையில் எழுந்தருளும் சுவாமியை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 27-ந்தேதி கும்பாபிஷேகம் முடிவடைந்து மகாதீபாராதனைக்கு பிறகு பக்தர்கள் வழக்கம்போல் தரிசனம் செய்யலாம். மேலும் கும்பாபிஷேகத்துக்கு நன்கொடை செலுத்த விரும்பும் பக்தர்கள், இந்தியன் வங்கி பழனி கிளை கணக்கு எண் 899971944 (IFSC code:IDIB000P014) என்ற கணக்கில் நன்கொடை செலுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)