மேலும் அறிய

Masthan Murder Case: முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை வழக்கில் புதிய திருப்பம்... சகோதரரை அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை வழக்கில் புதிய திருப்பமாக அவரது சகோதரரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அதிமுக முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை வழக்கில் அதிரடி திருப்பமாக அவரது சகோதரர் கௌஷே ஆதம்பாஷாவை போலீசார் கைது செய்துள்ளனர். 

சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்த மஸ்தான் தஸ்தகீர் அதிமுகவில் கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை ராஜ்யசபா உறுப்பினராக  இருந்தார். இதன்பின் அக்கட்சியில் விலகிய அவர் திமுகவில் இணைந்து மாநில சிறுபான்மையினர் நல செயலாளராக இருந்து வந்தார்.

இதனிடையே சென்னை ஊரப்பாக்கம் பகுதியில் கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி காரில் சென்றுக் கொண்டிருந்தபோது  நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும்,உடனடியாக அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் வரும் வழியிலேயே மஸ்தான் இறந்துவிட்டதாகவும் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் தனது தந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது உடலை பிரேத பரிசோதனை செய்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் மஸ்தானின் மகன் ஹரிஸ் நவாஸ் புகாரளித்தார். 

இதனையடுத்து இயற்கைக்கு மாறான மர்ணம் என வழக்குப்பதிவு செய்த போலீசார் தாம்பரம் காவல் ஆணையர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். பிரேத பரிசோதனை செய்ததில் மஸ்தான் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தது தெரியவந்தது.அன்றைய தினம் மஸ்தானுடன் காரில் சென்ற அவரது மஸ்தான் தம்பியின் மருமகன் இம்ரான் பாஷா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். 

இதில் மஸ்தானிடம் வாங்கிய ரூ.15 லட்சம் கடனுக்காக உறவினர் தமீம் என்கிற சுல்தான் அஹமது, நண்பர்கள் நஷீர், தவுபீக் அகமது, லோகேஷ்வரன் ஆகியோரோடு இணைந்து அவரை கொலை செய்தது தெரிய வந்தது. 

முன்னாள் எம்.பி. மஸ்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவரது மரணம் தொடர்பாக மேற்கொண்ட விசாரணையில் அவரது உயிரிழப்பு இயற்கைக்கு மாறானது என்று தெரியவந்தது. இதையடுத்து, அவரது மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசாருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது.

இந்த நிலையில், கொடுத்த கடனை திருப்பிக் கேட்டதற்காக மஸ்தான் கொலை செய்யப்பட்டதை கண்டுபிடித்த போலீசார்  உயிரிழந்த மஸ்தானின் சகோதரர் இம்ரான்பாஷாவை கைது செய்தனர். இதனையடுத்து இம்ரான்பாஷா உட்பட அனைவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இம்ரான்பாஷாவின் தொலைபேசி அழைப்புகளை ஆய்வு செய்ததில் ஏற்கனவே மஸ்தானுக்கும், அவர் சகோதரர் கௌஷே ஆதம்பாஷாவுக்கு சொத்து காரணமாக முன்விரோதம் இருந்ததும், மஸ்தான் கொலையில் அவருக்கும் பங்கு இருப்பதும் தெரிய வந்தது. 

இதனையடுத்து கௌஷே ஆதம்பாஷாவை விசாரித்ததில், மஸ்தான் கொலையில் தொடர்பு இருக்கும் உண்மையை ஒப்புக்கொண்டதால் அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். 

தலைப்பு செய்திகள்

தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Ather Konarc: ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
Toyota Hyryder CNG on EMI: மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
Embed widget