மேலும் அறிய

முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை நடந்தது எப்படி..? மருமகனை வைத்து ஸ்கெட்ச் போட்ட மஸ்தான் தம்பி..!

முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மஸ்தான் வழக்கில் அவரது சகோதரர் கைது செய்யப்பட்டிருப்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 22.12.2022 அன்று கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் ஹரிஷ் ஷாநவாஜ் (34)  என்பவர் கொடுத்த புகாரில், அவருடைய தந்தை டாக்டர் மஸ்தான் தற்போது தமிழ்நாடு சிறுபான்மை ஆணைத்தின் துணை தலைவராக இருந்ததாகவும் , கடந்த டிசம்பர் 22 தேதி   அன்று அவருடைய சித்தப்பா கொஷே ஆதம்பாஷாவின் மருமகன் இம்ரான் பாஷா என்பவருடன் TN-06-AA 1112 எண்ணுடைய KIA காரில் செங்கல்பட்டு நோக்கி சென்றதாகவும், செங்கல்பட்டு டோல்கேட் தாண்டி செல்லும் போது அவருடைய அப்பாவிற்கு வலிப்பு ஏற்பட்டு மார்பு வலி வந்ததாகவும், உடனே கூடுவாஞ்சேரி தீபம் மருத்துவமனை சிகிச்சைக்கு அழைத்து சென்றதாகவும், மருத்துவர்கள் பதிசோதனை செய்து பார்த்துவிட்டு அவர் வரும் வழியிலேயே மஸ்தான் இறந்துவிட்டதாக கூறியதாகவும்.

முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை நடந்தது எப்படி..? மருமகனை வைத்து ஸ்கெட்ச் போட்ட மஸ்தான் தம்பி..!

மூச்சு திணறல் ஏற்பட்டு

அவரது இறப்பிற்கான காரணம் அறிய பிரேத பரிசோதனை செய்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டி கொடுத்த புகாரினை பெற்று கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் இயற்கைக்கு மாறான இறப்பு என்ற கோணத்தில் வழக்கு பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேற்கண்ட விசாரணையில் டாக்டர் மஸ்தானின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிய வந்ததால் தாம்பரம் காவல் ஆணையாளர் அமல்ராஜ், உத்திரவின் பேரில் கூடுவாஞ்சேரி காவல் உதவி ஆணையாளர் K.ஜெயராஜ் மற்றும் ஆய்வாளர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

தனிப்படையினின் விசாரணையில் சம்பவ தினத்தன்று இறந்து போன டாக்டர் மஸ்தானுடன் வந்த உறவினர் இம்ரான் பாஷா மிது சந்தேகம் இருப்பதாக தெரிய வந்ததாலும் அவருடைய பேச்சில் முரண்பாடு இருந்ததாலும், பிரேத பரிசோதனை செய்த மருத்துவரின் அறிக்கையின்படியும் மஸ்தான்மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்துள்ளார் என தெரியவந்தது. 

நடவடிக்கைகள் தீவிரமாக

சந்தேக மரணம் என பதியப்பட்ட வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு இம்ரான் பாஷாவின் நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது.விசாரணையின் போது இம்ரான் பாஷாவின் வாக்குமூலம் முன்னுக்கு பின் முரணாக இருந்தது. மேலும் சம்பவ தினத்தன்று இறந்து போன மல்தான் அவருடைய வீட்டிலிருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற வழியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததிலும், இம்ரான் பாஷாவின் தொலைபேசி உரையாடல்களை கண்காணித்ததிலும். இம்ரான் பாஷா கூறிய விவரங்கள் பொய்யனவை என்று தெரிந்தது, சம்பவ தினத்தன்று  மஸ்தான் வந்த காரில் இம்ரான் பாஷா தவிர மேலும் இரண்டு நபர்கள் வழியில் சேர்ந்து வந்த விவரம் விசாரணையில் தெரிய வந்தது.

முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை நடந்தது எப்படி..? மருமகனை வைத்து ஸ்கெட்ச் போட்ட மஸ்தான் தம்பி..!

அவ்வப்போது சிறுக சிறுக

எனவே இமரான் பாஷாவை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை மேற்கொண்டதில் இமரான் பாஷா தன்னுடைய சித்தி மகன் தமீம் என்கிற சுல்தான் அகமது மற்றும் அவரது நண்பர்கள் நஷீர், தௌபிக் அகமது, லோகேஷ்வரன் சதித் ஆகியோருடன் சேர்ந்து சதித் திட்டம் தீட்டி டாக்டர் மஸ்தானை கொலை செயததாக ஒப்புக்கொண்டார்.

இமரான் பாஷாவின் வாக்குமூலத்தில் டாக்டர் மஸ்தான் அரசியல் கட்சியில், பொறுப்பில் இருப்பதாலும், மருத்துவமனை நடத்தி வருவதாலும் அவருடன் நல்ல பழக்கம் ஏற்படுத்திக் கொண்டு நம்ப வைத்து அவரிடம் இருந்து அவ்வப்போது சிறுக சிறுக ரூபாய் 15 லட்சம் வரை கடனாக பெற்றுள்ளதாகவும். அதனை திருப்ப கேட்டு டாக்டர் மஸ்தான் தொந்தரவு செய்து வந்ததால் தன்னுடைய சித்தி மகன் சுல்தான் அகமது மற்றும் அவனது நண்பர்கள் நஷீர் தௌபிக் அகமது, லோககேஷ்வரன் ஆகியயோருடன் சேர்ந்து திட்டம் திட்டி பைனானசியரிடம் பணம் பெற போவதாக கூறி நம்ப வைத்து டாக்டர் மஸ்தானை அழைத்து கொண்டு சென்றுள்ளார்.

மற்றவர்களை நம்ப வைத்து

அவ்வாறு செல்லும் போது அவரது காரில் இம்ரானும். தமீம் (எ) சுல்தான் மற்றும் நனீ ஆகியோருடன் செல்லும் போது அவர்களது காரை தொழிக் அகமது மற்றும் லோகேஷ்வரன் ஆகியோரை வேறு ஒரு கரில் பின் தொடத்ந்து வர சொல்லி விட்டு செங்கல்பட்டு நோக்கி அழைத்து சென்று தனியான இடத்தில் காரை நிறுத்தி காரின்பின் சீட்டில் அமர்ந்திருந்த டாக்டர் மஸ்தானின் கைகளை பின்புறமாக இருந்து இழுத்து பிடித்துக் கொள்ள கல்தான் அவரது வாய் மற்றும் முக்கை அழுத்தி பிடித்து மூச்சு திணறல்,ஏற்படுத்தி கொலை செய்ததாகவும். பின்னால் காரில் வந்த தௌபிக் அகமது மற்றும் லோகேஷ்வரன் ஆகியோர் உடந்தையாக இருந்து  அங்கிருந்து தப்பிக்க உதவியதாகவும். பின்னர் டாக்டர் மஸ்தானுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு மாரடைப்பால் இறந்தது விட்டதாக மற்றவர்களை நம்ப வைத்து ஏமாற்றியதை ஒப்புக்கொண்டார்.

தொலைபேசி அழைப்புக்களை தணிக்கை

இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட  இம்ரான் பாஷாவின் தொலைபேசி அழைப்புக்களை தணிக்கை செய்து பார்த்த போது டாக்டர் மஸ்தானை கொலை செய்வதற்கு முன்னும் பின்னும் இம்ரான் பாஷா அவருடைய தொலைேைபசியில் இருந்து, அவருடைய மாமனார் கௌசே ஆதாம்பாஷாவுடன் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளது தெரிய வந்தது. மேலும் கொலை செய்யப்பட்ட மஸ்தானுக்கும் அவருடைய தம்பி  ஆதாம் பாஷாவிற்கும் அவர்களுடைய குடும்ப சொத்தான வீடு சம்பந்தமாக ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது விசாரணையில் தெரியவந்தது, கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு மஸ்தான் அவர்கள் அவரது தம்பி  ஆதாம் பாஷாவின் மருத்துவமனைக்கு சென்று சத்தம் போட்டது விசாரணையில் தெரிந்ததால், கொலை செய்யப்பட்ட மஸ்தானின் தம்பி கௌசே ஆதாம் பாஷாவிற்கு கொலையில் தொடர்பு இருக்க வாய்புள்ளதாக சந்தேகம் இருந்த நிலையில்  இம்ரான் பாஷா, தமீம் (எ) சுல்தான் அகமது, நஷீர், ஆகியவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்யப்பட்டது.

முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை நடந்தது எப்படி..? மருமகனை வைத்து ஸ்கெட்ச் போட்ட மஸ்தான் தம்பி..!

நெருங்கி பழகி , வெளியே காரில்

இம்ரான் பாஷாவிடம் மேற்கொண்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட மஸ்தான், இம்ரான் பஷாவின் மாமனாரும், மஸ்தானுக்கு தம்பியுமான கௌளசே ஆதாம் பாஷாவிற்கு கொடுத்த கடன் ரூபாய் 15 லட்சத்தை திருப்பி கேட்டு அடிக்கடி தொந்தரவு கொடுத்ததாலும், அவர்களது குடும்ப சொத்தான வீட்டை தனது மாமனாருக்கு எழுதி கொடுக்க தடையாக இருந்ததாலும், தனது மாமனாருடன் சேர்ந்து மஸ்தானை கொலை செய்ய திட்டம் போட்டு அதன்படி மஸ்தானுடன் நெருங்கி பழகி அவரை வெளியே காரில் அழைத்து சென்று தனது உறவினர் சுல்தான் அகமது மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டு கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் 12.01.2023 காலை இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட 6 வது நபர்  கௌசே ஆதாம் பாஷாவை கைது செய்து விசாரணை செய்ய, அவரும் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தை பதிவு செய்து, கௌசே ஆதாம்பாஷவை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

தலைப்பு செய்திகள்

15 வயது சிறுமியை அடுத்தடுத்து சீரழித்த 4 பேர் - ஆம்புலன்ஸ் டிரைவர் வரை திடுக்கிடும் பின்னணி
15 வயது சிறுமியை அடுத்தடுத்து சீரழித்த 4 பேர் - ஆம்புலன்ஸ் டிரைவர் வரை திடுக்கிடும் பின்னணி
ஆசை வார்த்தை நம்பி ஆப்ப அடிச்ச காதலி! கடைசியில் கம்பி எண்ணும் கள்ளக்காதல் ஜோடி- நடந்தது என்ன?
ஆசை வார்த்தை நம்பி ஆப்ப அடிச்ச காதலி! கடைசியில் கம்பி எண்ணும் கள்ளக்காதல் ஜோடி- நடந்தது என்ன?
" சிறையில் இருந்து வந்த மறு நாளே கொடூரம் " - நீ எல்லாம் ஒரு பொண்டாட்டியா ? மனைவியை கொன்ற ரவுடி
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
Embed widget