மேலும் அறிய

சங்காரண்யேஸ்வரர் கோயிலில் லட்சதீப வழிபாடு; ஒளி ஓவியமாக காட்சி அளித்த ஆலயம்..!

கோச்சங்க சோழனால் கட்டப்பட்டதும், சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள பழமை வாய்ந்ததுமான தலைச்சங்காடு சங்காரண்யேஸ்வரர் கோயிலில்  கார்த்திகை ஞாயிறை முன்னிட்டு லட்சதீபம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பூம்புகார் அருகே தலச்சங்காட்டில் அமைந்துள்ள பழமை வாய்ந்த சங்காரண்யேஸ்வரர் ஆலயம். கோட்செங்க சோழனால் கட்டப்பட்ட மாட கோயில்களில் ஒன்றானதும், தேவாரம் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 45 -ஆவது ஆலயமான இந்த கோயில் பற்றி சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள பெருமை மிகுந்ததாகும். புராண காலத்தில் மகாவிஷ்ணு கையில் ஏந்தி உள்ள பாஞ்சசன்ய சங்கை இங்கு இறைவனை வேண்டி பெற்றதாக தல புராணம் கூறுகிறது. இந்த ஆலயத்தின் வடிவமைப்பு சங்கை போன்று அமைய பெற்றது. சோழர் காலத்தைச் சார்ந்த பழமையான 10 கல்வெட்டுகள் இந்த ஆலயத்தில் அமைந்துள்ளன.

சங்காரண்யேஸ்வரர் கோயிலில் லட்சதீப வழிபாடு; ஒளி ஓவியமாக காட்சி அளித்த ஆலயம்..!

இத்தகைய சிறப்பு மிக்க இந்த கோயிலில் நேற்று கார்த்திகை இரண்டாவது ஞாயிறை முன்னிட்டு கிராம மக்கள் சார்பில் லட்சதீபம் ஏற்றும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. சிவன், அம்பாள், முருகன், விஷ்ணு தேர் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களை ரங்கோலி கோலம் இட்டு, உலக நன்மை வேண்டி அவற்றில் தீபங்களை ஏற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர். இதன் காரணமாக பழமையான இந்த ஆலயம் தீப ஒளி வெள்ளத்தில் ஒளி ஓவியமாக காட்சி அளித்தது.

சங்காரண்யேஸ்வரர் கோயிலில் லட்சதீப வழிபாடு; ஒளி ஓவியமாக காட்சி அளித்த ஆலயம்..!

தொடர்ந்து, கைலாய வாத்தியங்கள் முழங்க சுவாமி மற்றும் அம்பாளுக்கு தீபாராதனையும் சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

சிறப்புலி நாயனார் வாழ்க்கையில்  ஆயிரம் பேருக்கு அன்னதானம் அளிக்கும் போது இறைவன் நடத்திய திருவிளையாடல் கதையினை உணர்த்தும் வகையில் நடைபெற்ற ஆயிரம் பேருக்கு அன்னதான நிகழ்ச்சி. 

மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூரில் பழமை வாய்ந்த வாள் நெடுங்கண்ணி சமேத தான்தோன்றீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. 64 நாயன்மார்களில் ஒருவரான சிறப்புலி நாயனார் ஆக்கூரில் வசித்து வந்தார். சிறந்த சிவ பக்தரான இவர் தினமும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கி வந்தார். சிறப்புலி நாயனாரின் பெருமையை உலகுக்கு உணர்த்த விரும்பிய இறைவன் நடத்திய திருவிளையாடல் காரணமாக ஒரு நாள் ஆயிரம் பேருக்கு ஒருவர் குறைவாக 999 பேர் உணவு அருந்த வந்தனர். அப்போது ஆயிரத்தில் ஒருவராக இறைவன் உணவு அருந்தி நாயனாருக்கு காட்சியளித்தார். 

சங்காரண்யேஸ்வரர் கோயிலில் லட்சதீப வழிபாடு; ஒளி ஓவியமாக காட்சி அளித்த ஆலயம்..!

இப்புராண நிகழ்வு ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் சிறப்புலி நாயனார் பூஜையும், ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அந்த வகையில் இன்று ஆயிரத்தில் ஒருவர் சிறப்புலி நாயனார் உடன் வீதி உலா செல்லும் காட்சியும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி ஆலயத்தில் நடைபெற்றது. இதில் வாள் நெடுங்கண்ணி அம்மன் மற்றும்  தான்தோன்றீஸ்வரருக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், திரவிய பொடி உள்ளிட்ட 16 வகை பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. 

சங்காரண்யேஸ்வரர் கோயிலில் லட்சதீப வழிபாடு; ஒளி ஓவியமாக காட்சி அளித்த ஆலயம்..!

நின்ற கோலத்தில் உள்ள ஆயிரத்தில் ஒருவர் உற்சவர் சிறப்புலி நாயனாருடன் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.  முன்னதாக ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தர்மபுரம் ஆதீன கட்டளை தம்புரான் சுவாமிகள் உள்ளிட்ட சிவனடியார் கூட்டத்தினர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு பெருமிதம்!
IND vs AUS: ரஞ்சி வீரர்கள் எதுக்கு இருக்காங்க? இனியாவது வாய்ப்புத் தருமா பிசிசிஐ?
IND vs AUS: ரஞ்சி வீரர்கள் எதுக்கு இருக்காங்க? இனியாவது வாய்ப்புத் தருமா பிசிசிஐ?
சூப்பர்ஸ்டார்னா சும்மாவா? ப்ரெஞ்சு படத்துலயே ரஜினிதான் மாஸ் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
சூப்பர்ஸ்டார்னா சும்மாவா? ப்ரெஞ்சு படத்துலயே ரஜினிதான் மாஸ் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
Embed widget