சீர்காழி புற்றடி மாரியம்மன் கோயிலில் ஒரே நாளில் நான்கு வித வழிபாடு - பரவசத்தில் பக்தர்கள்
பிரசித்தி பெற்ற சீர்காழி புற்றடி மாரியம்மன் கோயில் ஆண்டு உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
பிரசித்தி பெற்ற சீர்காழி புற்றடி மாரியம்மன் கோயில் ஆண்டு உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற புற்றடி மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மாரியம்மனிடம் வேண்டிய வரங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம் என்பதால் இங்கு நாள்தோறும் ஏராளமானோர் வந்து வழிபாடு செய்து செல்கின்றனர்.
Ayodhya Ram Mandir: ’ நான் செய்த சிலை இது இல்லை’ - குழந்தை ராமர் சிலையை வடிவமைத்த அருண் யோகிராஜ்..
இக்கோயிலில் ஆண்டு உற்சவ திருவிழா ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் வெள்ளிக்கிழமை அன்று காப்பு கட்டி, கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறும். அந்த வகையில் இந்தாண்டு உற்சவம் கடந்த ஜனவரி 19 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் சுவாமி விதியுலா நடைபெற்று வந்தது. இரண்டாவது வெள்ளிக்கிழமையான நேற்று இரவு முக்கிய நிகழ்வான தீமிதி உற்சவம் நடைபெற்றது. தீமிதி உற்சவத்தை முன்னிட்டு விரதம் இருந்த பல்வேறு பகுதிகளை சேர்ந்த 500 -க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டிக்கொண்டு சக்தி கரம் முன்னே செல்ல ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர்.
நெல்லையில் தொடங்கிய பறவைகள் கணக்கெடுக்கும் பணி..கண்ணில் தென்படுகிற பறவைகளை க்ளிக் செய்த வனத்துறை
பின்னர் கோயிலுக்கு எதிரே அமைக்கப்பட்டிருந்த தீக்குழி எதிரே அம்மன் எழுந்தருளினார். தொடர்ந்து கோயில் கரகம் எடுத்தவர் பூக்குழியில் முதலில் இறங்க, அவரை தொடர்ந்து 500 -க்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தீக்குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். பின்னர் புற்றடி மாரியம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இவ்விழாவில் மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் இன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புற்றடி மாரியம்மனை வழிபட்டனர்.
Lok Sabha Election 2024: நாடாளுமன்ற தேர்தல் - தமிழ்நாட்டை குறிவைக்கும் பாஜக, பொறுப்பாளர்கள் நியமனம்
தீமிதி திருவிழா முன்னிட்டு காலையில் தேர் திருவிழாவும், தொடர்ந்து பக்தர்கள் அலகு காவடி மற்றும் பால்குடம் எடுத்து வந்து புற்றடி மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். அதனை தொடர்ந்து முன்னதாக தேர் திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோயிலை சுற்றி உள்ள நான்கு வீதிகளின் வழியாக பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் அலகு காவடி மற்றும் பால்குடம் எடுத்து வந்து மாரியம்மனுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்து வழிபட்டனர்.
தமிழ்நாட்டில் 11 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு