மேலும் அறிய

மயிலாடுதுறையில் மீண்டும் பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சி

திருவாவடுதுறை ஆதீனத்தில் வருகின்ற 28 -ம் தேதி ஆதீன கர்த்தரை பல்லக்கில் சுமக்கும் பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே பழமை வாய்ந்த திருவாவடுதுறை ஆதீனம்  அமைந்துள்ளது. திருவாவடுதுறை ஆதீனத்தை 14 -ஆம் நூற்றாண்டில் தோற்றுவித்த ஆதீன குருமுதல்வர் நமசிவாய மூர்த்தி சுவாமிகளின் குருபூஜை ஆண்டுதோறும் தை மாதத்தில் நமசிவாயமூர்த்திகள் மகரத்தலைநாள் குருபூஜை என 10 நாள்கள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு குருபூஜை கடந்த 19 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பத்தாம் நாளான, குருபூஜை விழா, மாகேஸ்வர பூஜை ஆகியன நடைபெறும். அதனை தொடர்ந்து ஆதீன கர்த்தரை பல்லக்கில் சுமக்கும் பட்டணப் பிரவேசம் நிகழ்ச்சி வருகின்ற 28 -ம் தேதி இரவு நடைபெற உள்ளது.


மயிலாடுதுறையில் மீண்டும் பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சி

இந்நிலையில் கடந்த ஆண்டு பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சி நடத்த திராவிடர் கழகத்தினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். நவீன யுகத்தில் பட்டணப்பிரவேசம் என்ற பெயரில் மனிதனை மனிதன் சுமக்கும் நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என்று கூறி திருவாவடுதுறை ஆதீன நுழைவு வாயிலின் முன்பு திராவிடர் கழக மாநிலப் பொதுச்செயலாளர்கள் துரை. சந்திரசேகரன், ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை தமிழ் புலிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழர் வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சியினர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அப்போதைய மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங், காவலர்கள் கலைந்துபோகச் சொல்லி தொடர்ந்து வலியுறுத்தினர். 


மயிலாடுதுறையில் மீண்டும் பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சி

அதற்கு, திராவிடர் கழகத்தினர் உடன்படாததால், கைதுசெய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். பின்னர், ஆதீனத் திருமடத்தில் திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் ஸ்ரீகோமுக்தீஸ்வர சுவாமி திருக்கோயிலில் தரிசனம் மேற்கொண்டார். ஸ்ரீநமசிவாய மூர்த்திகள் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து குருமகா சந்நிதானம் சிவிகாரோஹணம் செய்தருளி பட்டணப்பிரவேசம் எழுந்தருளினார். இதில், சூரியனார்கோயில் கோயில் ஆதீனம் 28 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதேபோன்று மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த  தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் அமைந்துள்ளது. சைவத்தையும், தமிழையும் வளர்க்கும்  ஆதீனத்தில், ஆண்டுதோறும் ஸ்ரீ ஞானபுரீஸ்வரசுவாமி கோயில் பெருவிழா, குருபூஜைவிழா, பட்டணப் பிரவேசம் விழா ஆகிய மூன்றும், வைகாசி மாதம் 11 நாட்கள் கொண்டாடப்படும். 



மயிலாடுதுறையில் மீண்டும் பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சி

இதில் 11 ம் திருநாள் அன்று  ஆதீனத்தை தோற்றுவித்த ஸ்ரீலஸ்ரீ குருஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் குருபூஜை விழா மற்றும் பட்டணப் பிரவேசம் நிகழ்ச்சியும் பாரம்பரியமாக நடப்பது வழக்கம். இவ்விழாவில் குருமகா சன்னிதானத்தை  பல்லக்கில் அமரவைத்து பக்தர்கள் தூக்கி சென்று ஆதீன திருடத்தின் நான்கு வீதிகளில் சுற்றி பட்டிணப் பிரவேசம் வலம் வருவது நடைமுறை. இந்நிலையில், மனிதனை மனிதன் தூக்கிசெல்லும் பல்லக்கு நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க வேண்டுமென்று சில அமைப்புகள் கோரிக்கை விடுத்தை அடுத்து கடந்த ஆண்டு மே மாதம் பல்லக்குதூக்கும் (பட்டிணப் பிரவேசம்) நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை அப்போதைய கோட்டாட்சியர் பாலாஜி தடைவிதித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த இந்து அமைப்பினர், பக்தர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் மதவழிபாட்டு முறைகளுக்கு அரசு தடைவிதிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டசபையில் கவனஈர்ப்பு தீர்மானமும் கொண்டுவரப்பட்டது.


மயிலாடுதுறையில் மீண்டும் பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சி

பல்வேறு ஆதீனங்கள் முதல்வரை சந்தித்து பட்டிணப் பிரவேசம் தடையை நீக்க கோரிக்கை வைத்த நிலையில், பல்லக்கு தூக்கும் நிகழ்விற்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கி கொள்வதாக கடந்த ஆண்டு மே 7-ம் தேதி மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி ஆணைபிறப்பித்தார். இதனால், பட்டிணப் பிரவேசம் நிகழ்வு தமிழகம் முழுவதும் பிரபலமானது. வழக்கமாக கடந்த காலங்களை ஆதீனத்தை சுற்றியுள்ள  மக்கள் மட்டுமே குறைவாக கலந்துகொண்ட நிலையில், கடந்த ஆண்டு பட்டிணப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் வருகை தந்தனர் உலகளவில் பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சி பிரபலம் அடைந்தது.


மயிலாடுதுறையில் மீண்டும் பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சி

பட்டிணப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு எதிர்ப்புகள் நிலவிய நிலையில், டிஐஜி தலைமையில் 2 எஸ்.பி.க்கள் உட்பட 600 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பல்வேறு தடைகளை கடந்து  பட்டிணப் பிரவேசம் விழா கோலாகலமாக நடைபெற்றது.  அதில் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்  திருஆபாரணங்கள் அணிந்துகொண்டு திருக்கூட்ட அடியவர்கள் புடைசூழ பல்லக்கில் எழுந்தருளினார். தொடர்ந்து பக்தர்கள் பல்லக்கினை நான்கு கோடி நாட்டாமை தலைமையில் 70 பேர் தோளில் சுமந்த ஆதீனத்தை சுற்றி நான்கு  வீதிகளில் வலம் வந்தனர்.  இவ்விழாவில்  சைவ ஆதீனங்களான சூரியனார் கோயில் ஆதீனம், மதுரை ஆதீனம், தொண்டை மண்டல ஆதீனம், செங்கோல் ஆதீனம், உள்ளிட்ட பல்வேறு ஆதீனங்கள்  மற்றும்  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த நிர்வாகி எச்.ராஜா,  பாஜக மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட 3000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து குருபூஜை மடத்தில் வழிபாடு மேற்கொண்டு ஞானகொலுக்காட்சியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். 


மயிலாடுதுறையில் மீண்டும் பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சி

இந்த சூழலில் வரும் 28 -ம் தேதி திருவாவடுதுறை ஆதீனத்தில் நடைபெற உள்ள பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு கடந்த காலங்களில் எதிர்ப்பு தெரிவித்த திராவிடர் கழகத்தினர் இதுவரை எந்த ஒரு எதிர்ப்பையும் பதிவு செய்யவில்லை, மேலும் இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட திராவிடர் கழகத்தினரிடம் கேட்ட போது தங்களுக்கு இதுநாள் வரை மேலிடத்தில் இருந்து எந்த தகவலும் வரவில்லை என்றும், இனி அங்கிருந்து தகவல்கள் வந்தால் மட்டும் பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என்றனர். 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

பிள்ளையார்பட்டி விநாயகர் சதுர்த்தி: தந்தத்தால் சூரனை வதம் செய்த கற்பக விநாயகர்!
பிள்ளையார்பட்டி விநாயகர் சதுர்த்தி: தந்தத்தால் சூரனை வதம் செய்த கற்பக விநாயகர்!
மதுரை காலாண்டுத் தேர்வு மாற்றம்: செப்.18-25ல் தேர்வுகள்! கும்பாபிஷேகம் காரணம்
மதுரை காலாண்டுத் தேர்வு மாற்றம்: செப்.18-25ல் தேர்வுகள்! கும்பாபிஷேகம் காரணம்
Vinayagar Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி வழிபாடு.. பூஜையில் இடம்பெற வேண்டிய பொருட்கள் என்னென்ன?
Vinayagar Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி வழிபாடு.. பூஜையில் இடம்பெற வேண்டிய பொருட்கள் என்னென்ன?
மதுரை மீனாட்சி குடமுழுக்கு: வைகை ஆற்றில் புனித நீர் சங்கிரஹணம் - பக்தர்கள் பரவசம்!
மதுரை மீனாட்சி குடமுழுக்கு: வைகை ஆற்றில் புனித நீர் சங்கிரஹணம் - பக்தர்கள் பரவசம்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Ajith:
Vijay Ajith: "மகிழ்ச்சியா இருக்கு.." லண்டனில் நடக்கப்போகும் விஜய் - அஜித் சந்திப்பு! ஏகே என்ன சொன்னார் தெரியுமா?
Modi Pezeshkian Meet: போருக்கு நடுவே இந்தியா வந்த ஈரான் அதிபர் பெஷெஷ்கியன்; பிரதமர் மோடியுடன் விவாதித்தது என்ன.?
போருக்கு நடுவே இந்தியா வந்த ஈரான் அதிபர் பெஷெஷ்கியன்; பிரதமர் மோடியுடன் விவாதித்தது என்ன.?
Xi Jinping India Visit: 7 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா வரும் ஷி ஜின்பிங்; பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை; எகிறும் எதிர்பார்ப்பு
7 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா வரும் ஷி ஜின்பிங்; பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை; எகிறும் எதிர்பார்ப்பு
Thirumavalavan: திமுக-வை திடீரென திட்டித் தீர்த்த திருமா.. ஓ.. இதுதான் காரணமா?
Thirumavalavan: திமுக-வை திடீரென திட்டித் தீர்த்த திருமா.. ஓ.. இதுதான் காரணமா?
Omni Bus Ticket: யார் ஆட்சிக்கு வந்தாலும் இவங்க அநியாயம் நிக்காது போல? ஆம்னி பஸ்களின் தொடரும் கட்டண கொள்ளை!
Omni Bus Ticket: யார் ஆட்சிக்கு வந்தாலும் இவங்க அநியாயம் நிக்காது போல? ஆம்னி பஸ்களின் தொடரும் கட்டண கொள்ளை!
Suriya: நெட்ஃப்ளிக்ஸ் இதெல்லாம் நியாயமா? கிளாரிட்டியே இல்லாம ஒளிபரப்பாகிய விஸ்வநாத் அன் சன்ஸ்!
Suriya: நெட்ஃப்ளிக்ஸ் இதெல்லாம் நியாயமா? கிளாரிட்டியே இல்லாம ஒளிபரப்பாகிய விஸ்வநாத் அன் சன்ஸ்!
Modi Putin Meet: கைகுலுக்கி, கட்டித்தழுவி.! பிரதமர் மோடியும் விளாடிமிர் புதினும் சந்திப்பு; ஆலோசித்தது என்ன.?
கைகுலுக்கி, கட்டித்தழுவி.! பிரதமர் மோடியும் விளாடிமிர் புதினும் சந்திப்பு; ஆலோசித்தது என்ன.?
Gold Silver Rate Sep.11th: ஐயோ, போச்சே.! காலையில மகிழ்ச்சி கொடுத்து மாலையில கவுத்துவிட்ட தங்கம்.! இவ்ளோ கூடிடுச்சே.!
ஐயோ, போச்சே.! காலையில மகிழ்ச்சி கொடுத்து மாலையில கவுத்துவிட்ட தங்கம்.! இவ்ளோ கூடிடுச்சே.!
Embed widget