மந்தவெளி திரௌபதி அம்மன் ஆலய தீமிதி உற்சவம்; தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மந்தவெளி திரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து தங்களின் வேண்டுதலைகளை நிறைவேற்றினர்.
திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மந்தவெளி திரௌபதி அம்மன் ஆலய ஆண்டு தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் தீ மிதித்து தங்களின் வேண்டுதலைகளை நிறைவேற்றி வழிபாடு செய்தனர்.
மந்தவெளி திரௌபதி அம்மன் ஆலய ஆண்டு தீமிதி திருவிழா
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாவடுதுறை மந்தவெளியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பழமையான திருக்கைலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான புகழ்பெற்ற திரௌபதி அம்மன் ஆலயம். இவ்வாலயத்தில் பக்தர்கள் வேண்டும் அனைத்து வரங்களையும் அம்மன் அருள்வதாக நம்பிக்கை. மேலும் இப்பகுதி மக்கள் குல தெய்வமான இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் ஆண்டு திருவிழாவான தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு தீமிதி திருவிழாவானது கடந்த 19 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
Purattasi 2024: புண்ணியம் தரும் புரட்டாசி மாதம் எப்போது பிறக்கிறது? எந்த நாளில் என்ன சிறப்புகள்?
காவிரி ஆற்றங்கரையில் இருந்து புறப்பட்ட சக்தி கரகம்
அதனை அடுத்து வீஷ்மர் பிறப்பு, தர்ம பிரபு, கிருஷ்ணர் பிறப்பு, மகாபாரத சொற்பொழிவு, நாடகங்கள் உள்ளிட்ட ஏராளமான நிகழ்வுகள் நடைபெற்று வந்தன. அதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நேற்றிரவு கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக காப்பு கட்டிக்கொண்டு விரதம் இருந்த பக்தர்கள் திருவாவடுதுறை காவிரி ஆற்றங்கரையில் இருந்து சக்தி கரக புறப்பாடு செய்யப்பட்டு, சக்தி கரகம் முன்னே செல்ல மேள தாள மங்கல வாத்தியங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோயிலை வந்தடைந்தனர்.
தீக்குண்டத்தில் இறங்கிய பக்தர்கள்
பின்னர் கோயிலின் முன்பு அமைக்கப்பட்டு இருந்த தீக்குண்டத்தில் விரதம் இருந்த பக்தர்கள், தங்களில் பல்வேறு வேண்டுதல்கள் நிறைவேறியதை அடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை பக்தர்கள் செலுத்தினர். இந்நிகழ்வில் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதி திருவிழாவை கண்டு தரிசனம் செய்தனர். துரோபதி அம்மன் புஷ்ப அலங்காரத்தில் எழுந்து அருள் பாலித்து பக்தர்களுக்கு காட்சி தந்தார்.