மேலும் அறிய

Vinayagar Chaturthi : உசிலம்பட்டியில் ஒரே ஒரு லட்டு : ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்த வாவ் சம்பவம்..

உசிலம்பட்டி அருகே விநாயகர் சிலையில் வைத்து பூஜை செய்த ஒரே ஒரு லட்டு - 1 லட்சத்து 51 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

விநாயகர் சிலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட ஒரே ஒரு லட்டு 1 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்கும் முன் ஏலம் எடுத்த மறுநொடியே லட்டு, பூந்தியாகி அனைவராலும் உண்ணப்பட்டது. இந்த நிகழ்வு நெகிழ்ச்சியின் உச்சமாக அனைவராலும் பேசப்படுகிறது.

மதுரையில் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சி

Vinayagar Chaturthi 2024 ; கடந்த சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த விநாயகர் சதுர்த்தியில் மதுரை மாவட்டம் முழுவதும் கடந்த சனிக்கிழமை அன்று, அரை அடி முதல் 15 அடி வரை விநாயகர் சிலைகளை வாங்கி வைத்து வழிபட்டனர். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் முக்குறுணி விநாயகருக்கு 18 படி அரிசியில் மெகா சைஸ் கொழுக்கட்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் மதுரை உசிலம்பட்டி அருகே விநாயகர் சிலையில் வைத்து பூஜை செய்த ஒரே ஒரு லட்டு - 1 லட்சத்து 51 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

- மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழாவில், தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை நடைபெற்றது !

விநாயகர் லட்டு கிராம மக்கள் சார்பில் ஏலமாக விடப்பட்டது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மலைப்பட்டி கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதூர்த்தி விழாவை வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டும் விநாயகர் சதூர்த்தியை  முன்னிட்டு இக் கிராமத்தில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த ஆண்டு விநாயகர் கையில் லட்டு இருக்கும் அமைப்பிற்காக ஒரிஜினல் லட்டை கையில் வைத்து பூஜைகள் நடைபெற்றன. சிலையை எடுத்து அருகில் உள்ள கண்மாய் பகுதியில் கரைக்க ஊர்வலமாக எடுத்து செல்லும் முன், சிலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட லட்டு கிராம மக்கள் சார்பில் ஏலமாக விடப்பட்டது.

ஏலம் எடுத்தவருக்கு சிறப்பு சலுகை

இந்த ஏலத்தில் அதே ஊரைச் சேர்ந்த மூக்கன் என்பவர் இந்த ஒரே ஒரு லட்டை 1 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்த கிராம மக்கள் இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இதே போன்று விநாயகர் சிலையில் வைத்து பூஜை செய்யப்படும் லட்டு ஏலம் விடப்படும் எனவும், இந்த ஆண்டு ஏலம் எடுத்த மூக்கனுக்கு அடுத்த ஆண்டு ஏல தொகை கட்டும் போது 1 பவுன் தங்க மோதிரம், 10 வேட்டி, சட்டை, 5 சேலைகள் பரிசாக வழங்கப்படும் என கிராம மக்கள் அறிவித்துள்ளதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விநாயகர் சிலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட ஒரே ஒரு லட்டு 1 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்கும் முன் ஏலம் எடுத்த மறுநொடியே லட்டு, பூந்தியாகி அனைவராலும் உண்ணப்பட்டது. இந்த நிகழ்வு நெகிழ்ச்சியின் உச்சமாக அனைவராலும் பேசப்படுகிறது.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மேல ஏறி வாறோம்! டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் வங்கதேசம் கிடுகிடு உயர்வு! முதலிடத்தில் யாரு தெரியுமா?

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Govt Business Loan: 59 நிமிடங்களில் கையில் பணம், 15% மானியம் - மத்திய அரசின் தொழில் கடன்கள் பற்றி தெரியுமா?

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
ABP Premium

வீடியோ

அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா
Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
Embed widget