காய்கறி அலங்காரத்தில் காட்சியளித்த மகா காளியம்மன் - கண்டு தரிசித்த பக்தர்கள்
காளி திரு நடனம் ஆடியவாறு வீதியுலாவாக சென்று அப்பகுதி பொதுமக்களுக்கு காட்சி அளித்து அருளாசி வழங்கி வந்தார்.
குத்தாலம் காளியம்மன் கோயில் விழா
குத்தாலம் மகா காளியம்மன் ஆலயத்தில் ஒன்பது நாட்கள் நடைபெற்ற திரு காளி நடன விழாவில் பத்தாம் நாள் உற்சவமாக 27 வகை காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டு ஊஞ்சல் உற்சவமானது நடைபெற்றது.
திரு காளி நடனம்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காளியம்மன் கோயில் தெருவில் பிரசித்தி பெற்ற பழமையான மகாகாளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் ஒன்பது நாட்கள் திரு காளி நடன விழா நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் இந்தாண்டு திரு காளி நடன விழா கடந்த ஏப்ரல் 14 -ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து காளி திருநடனம் கடந்த ஏப்ரல் 24 -ம் தேதி துவங்கி கடந்த ஒன்பது நாட்கள் வெகு சிறப்பாக நடைபெற்றது.
அதில் காளி திரு நடனம் ஆடியவாறு வீதியுலாவாக சென்று அப்பகுதி பொதுமக்களுக்கு காட்சி அளித்து அருளாசி வழங்கி வந்தார். முன்னதாக விழா கடந்த 14 -ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்றது. 9 நாளான நேற்று காளியம்மன் கோயிலில் மகா காளியம்மன் பந்தல் காட்சி திருநடன உற்சவத்துடன் நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று பத்தாம் நாளான ஸ்ரீ மகா காளியம்மனுக்கு காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டு ஊஞ்சல் உற்சவமனது நடைபெற்றது.
Onion Exports: வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவிகித வரி விதிப்பு - மத்திய அரசு அதிரடி
காய்கறி அலங்காரத்தில் காளியம்மன்
இதில் சுரைக்காய், கேரட், புடலங்காய், பீக்கங்காய், மிளகாய், பூசணிக்காய், பீட்ரூட், கத்தரிக்காய் தக்காளி உள்ளிட்ட 27 வகை காய்கறிகளால் அம்மன் அலங்கரிக்கப்பட்டிருந்ததை அனைவரும் பக்தி பரவசத்துடன் கண்டு தரிசித்தனர். இந்த ஊஞ்சல் உற்சவத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு காளியம்மனை வழிபட்டு சென்றனர். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை காளியம்மன் கோயில் தெருவாசிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.
தஞ்சாவூர் அருகே களிமேட்டில் அப்பர் சதய விழா தொடக்கம்; அலங்கரிக்கப்பட்ட தேர் வீதியுலா