தீச்சட்டி ஏந்தி அங்கப்பிரதட்சணம் செய்து வினோத வழிபாட்டில் ஈடுபட்ட கிறிஸ்தவர்கள் - எங்கே தெரியுமா?
இங்கு நோய் தீர வேண்டியும், குழந்தை வரம், திருமண வரம், கடன் தொல்லை உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றும் என்பது ஐதீகம்.
மயிலாடுதுறை அருகே நூற்றாண்டுகள் பழமையான புனித அந்தோணியார் ஆலயத்தில் கிறிஸ்தவர்கள் தீச்சட்டி ஏந்தி அங்கப்பிரதட்சணம் செய்து வினோத வழிபாட்டில் ஈடுபட்டனர்.
கஞ்சா நகரம் புனித அந்தோனியார் ஆலயம்
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோயில் ஒன்றியம் மேலையூரை அடுத்த கஞ்சா நகரம் கிராமத்தில் அமைந்துள்ள 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித அந்தோனியார் ஆலயம். இங்கு நோய் தீர வேண்டியும், குழந்தை வரம், திருமண வரம், கடன் தொல்லை உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றும் என்பது ஐதீகம். ஆகையால் ஏராளமான வேண்டுதல்களுடன் தங்களின் காரியங்கள் வெற்றி பெற வேண்டி கடந்த 50 ஆண்டுகளாக பக்தர்கள் வினோத வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்து மதம் போன்ற வழிபாடு
இந்து மத வழிபாடு போன்று இந்த கஞ்சா நகரம் புனித அந்தோணியார் ஆலயத்தில், ஆலயத்திற்கு எதிரே உள்ள ஊர் பொது குளத்தில் பக்தர்கள் நீராடி விட்டு 500 மீட்டர் தொலைவில் உள்ள அந்தோனியார் ஆலயத்திற்கு அங்கப் பிரதட்சணம் செய்தும், முட்டி போட்டு கையில் மெழுகுவர்த்தியை ஏந்தி தீபம் அணையாமல் ஆலயம் வரை முட்டியால் நடந்தும், தீச்சட்டிகளை கையில் ஏந்தியும் சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம்.
விழாவில் கலந்து கொண்ட திரளான பக்தர்கள்
அந்த வகையில் இந்தாண்டு விழாவை அடுத்து ஏராளமான பக்தர்கள் நூதன முறையில் கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அங்கப் பிரதட்சணம் செய்தும், முட்டி போட்டு கையில் மெழுகுவர்த்தியை ஏந்தி தீபம் அணையாமல் ஆலயம் வரை முட்டியால் நடந்தும், தீச்சட்டிகளை கையில் ஏந்தியும் சிறப்பு வழிபாடு வழிபாட்டில் ஈடுபட்டனர். தொடர்ந்து புனித அந்தோனியார் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி பூஜை செய்யப்பட்டது. இதில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
டிசம்பர் 31 வரை 98.2% ரூ.2000 நோட்டுகள் வந்துடுச்சி; அப்போ மீதி? - ரிசர்வ் வங்கி சொன்ன முக்கிய தகவல்