மேலும் அறிய

விழாக்கோலம் பூண்ட சீர்காழி - கொடியேற்றத்துடன் தொடங்கியது சட்டைநாதர் கோயில் சித்திரை பெருவிழா

சீர்காழி சட்டை நாதர் கோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம் இன்றும், நாளை பிரசித்தி பெற்ற திருமுலைப்பால் உற்சவமும் நடைபெற உள்ளது.

பிரசித்தி பெற்ற சீர்காழி சட்டைநாதர் கோயில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியுள்ளது.

சீர்காழி சட்டைநாதர் கோயில் 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான புராதன சிறப்பு வாய்ந்த மிகவும் பழமையான திருநிலை நாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தத் திருக்கோயில் சட்டச் சிக்கல்கள், பில்லி, சூனியம், எதிரிகள் தொல்லைகள் நீங்க இங்கு பூஜையில் பங்கேற்று வழிபட்டுப் பயன்பெறலாம். இக்கோயிலில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 14 வது தலமான இக்கோயில் சோழர் கட்டிடக்கலை அமைப்பைக் கொண்டது. இங்கு பிரம்ம தீர்த்தம் உள்ளிட்ட 22 தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இக்கோயிலில் சுவாமி பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர், சட்டைநாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். 

விழாக்கோலம் பூண்ட சீர்காழி - கொடியேற்றத்துடன் தொடங்கியது சட்டைநாதர் கோயில் சித்திரை பெருவிழா

திருஞானசம்பந்தர் வரலாறு

சீர்காழியில் சிவபாத இருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்து கோயிலில் அம்பாளிடம் ஞானப்பால் அருந்தியதால் ஞானம் பெற்று தனது மூன்றாவது வயதில் தோடுடைய செவியன் என்ற தேவாரத்தின் முதல் பதிகத்தை அருளிய திருஞானசம்பந்தருக்கு இக்கோயில் தனி சன்னதி அமையப் பெற்றுள்ளது. இத்தகைய பல சிறப்புகள் கொண்ட இக்கோயில் பல்வேறு வேண்டுதல்களுடன் நாள்தோறும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் வந்து வழிபாடு செய்து செல்கின்றனர்.

விழாக்கோலம் பூண்ட சீர்காழி - கொடியேற்றத்துடன் தொடங்கியது சட்டைநாதர் கோயில் சித்திரை பெருவிழா

ஆண்டு திருவிழா 

கோயிலின் சித்திரை பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு ரிஷப லக்னத்தில் காலை 8:30 மணிக்கு கோயில் வசந்த மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருள மங்கள வாத்தியங்கள் இசைக்க, வேத மந்திரங்கள் ஓத, தருமபுரம் ஆதீன கட்டளை ஸ்ரீமத் சட்டைநாத தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் கொடி மரத்திற்கு சிவாச்சாரியார்கள் பால், சந்தனம், பன்னீர், இளநீர், தயிர் மற்றும் வாசனை திரவியப் பொடிகள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்து மகாதீப ஆராதனை காட்டினர். தொடர்ந்து காலை சித்திரை பெருவிழா ரிஷப கொடி ஏற்றப்பட்டு, மகா தீபஆராதனை காண்பிக்கப்பட்டது . அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் நமசிவாய கோஷமிட்டு கொடியேற்றத்தை கண்டு தரிசனம் செய்தனர். 

விழாக்கோலம் பூண்ட சீர்காழி - கொடியேற்றத்துடன் தொடங்கியது சட்டைநாதர் கோயில் சித்திரை பெருவிழா

விழாவின் முக்கிய நிகழ்வு 

சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வான பிரம்ம தீர்த்தக்கரையில் திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் ஊட்டியதனை நினைவு கூறும் வகையில் ஒவ்வொறு ஆண்டும் சித்திரை மாதம் நடைபெறும் பிரமோற்சவ விழாவில் 2 -ம் நாள் திருமுலைப்பால் விழா நடைபெறும். இந்தாண்டு உமையம்மை திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கி, இறைவனுடன் காட்சி அளிக்கும் திருமுலைப்பால் விழா நாளை தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் நாளை நடைபெற உள்ளது. தொடர்ந்து அன்று மாலை திருக்கோளக்காவிற்கு திருஞானசம்பந்தர் எழுந்தருளி பதிகம் பாடி பொற்றாலம் பெறும் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து பல்லக்கில் சீர்காழி மீண்டருளும் காட்சியும் நடைபெற உள்ளது. 5-ம் தேதி சகோபரம், 6-ம் தேதி திருக்கல்யாணம் 8-ம் தேதி திருத்தேர் உற்சவம், 13-ம் தேதி தெப்போற்சவம் 23-ம் தேதி முத்து சட்டை நாதர் உற்சவம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி செந்தில் தலைமையிலானோர் செய்திருந்தனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

கோடை வெப்பத்திற்கு ஆன்மீகத் தீர்வு! சீர்காழி ஆலஞ்சேரி அகத்தீஸ்வரர் கோயிலில் நடந்த அதிசயம்!
கோடை வெப்பத்திற்கு ஆன்மீகத் தீர்வு! சீர்காழி ஆலஞ்சேரி அகத்தீஸ்வரர் கோயிலில் நடந்த அதிசயம்!
குபேரனே வழிபட்ட பெருமாள்!… ஒரு நாளில் ஒருமுறை மட்டுமே தரிசனம் கிடைக்கும் அதிசய திருத்தலம்
குபேரனே வழிபட்ட பெருமாள்!… ஒரு நாளில் ஒருமுறை மட்டுமே தரிசனம் கிடைக்கும் அதிசய திருத்தலம்
பட்டினத்தாருக்கும் இந்த விநாயகருக்கும் என்ன தொடர்பு? திருவெண்காட்டில் நடந்த ஆன்மீகப் பெருவிழா!
பட்டினத்தாருக்கும் இந்த விநாயகருக்கும் என்ன தொடர்பு? திருவெண்காட்டில் நடந்த ஆன்மீகப் பெருவிழா!
ஆடி மாத பிறப்பு 2026 எப்போது? அம்மனின் அருள் பெற இந்த மாதத்தில் என்ன செய்ய வேண்டும்? முழு விவரம்!
ஆடி மாத பிறப்பு 2026 எப்போது? அம்மனின் அருள் பெற இந்த மாதத்தில் என்ன செய்ய வேண்டும்? முழு விவரம்!

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Embed widget