500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு - எங்கே தெரியுமா?
சீர்காழியில் பழமை வாய்ந்த புற்றடி மாரியம்மன் கோயில் தை மாத உற்சவத்தை முன்னிட்டு 500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடங்கள் காவடிகள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பழமை வாய்ந்த புற்றடி மாரியம்மன் கோயில் தை மாத உற்சவத்தை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடங்கள் காவடிகள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்தனர்.
நூற்றாண்டுகள் பழமை புற்றடி மாரியம்மன் கோயில்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நூற்றாண்கள் பழமை வாய்ந்த அருள்மிகு புற்றடி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. பிரகாரத்தில் பேச்சியம்மன், துர்க்கை, நாகர், ஆஞ்சநேயர், ஐயப்பன் ஆகிய சுவாமிகள் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி அருள்பாலித்து வருகின்றனர். இத்தலத்தில் திருமண வரம், குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பல்வேறு வேண்டுதலை முன்வைக்கும் பக்தர்கள் அவை நிறைவேறியதும் அம்பாளுக்கு மாவிளக்கு இட்டு நேர்த்திக்கடன் செலுத்தி தீ மிதிப்பது வழக்கம். ஆண்டுதோறும் இங்கு தை மாதம் நடைபெறும் தீமிதி விழாவில் பிரார்த்தனை நிறைவேறிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து தீமிதி திருவிழா அவை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
நம்ம படம் ரிலீஸ் ஆகுற நாள்தான் பண்டிகை...மகிழ் திருமேனிக்கு அஜித் கொடுத்த மோட்டிவேஷன்
தை மாத உற்சவம்
இந்நிலையில் இந்தாண்டு ஆண்டு, ஆண்டு திருவிழாவான தைமாத உற்சவ திருவிழா 10 நாட்கள் நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு கடந்த தை மாதம் முதல் வெள்ளி கிழமை கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இன்று எட்டாம் நாள் உற்சவமாக பால் குடம் மற்றும் காவடிகள் ஊர்வலம் நடைபெற்றது.
எனக்கு வேற வழி தெரில ஆத்தா! கும்பமேளாவில் ஆர்சிபி ரசிகர் செய்த செயல்.. நீங்களே பாருங்க
பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்
முன்னதாக 500 -க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால் குடங்கள், அலகு காவடியுடன் சட்டைநாதர் கோயில் இருந்து சீர்காழி நகரின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாள மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக வந்து கோயிலை வந்தடைந்தனர். பின்னர் பக்தர்கள் கொண்டுவந்த பாலை கொண்டு புற்றடி மாரியம்மனுக்கு பாலபிஷேகம் செய்து வழிபட்டனர். மேலும் இந்த பால்குட ஊர்வலத்தின் போது புற்றடி மாரியம்மன் சிறிய தேரில் எழுந்தருள பக்தர்கள் தேரை பக்தி பரவசம் பொங்க வடம்பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

