நம்ம படம் ரிலீஸ் ஆகுற நாள்தான் பண்டிகை...மகிழ் திருமேனிக்கு அஜித் கொடுத்த மோட்டிவேஷன்
விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்ட போது படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி அஜித் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா ?

விடாமுயற்சி
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் விடாமுயற்சி. அர்ஜூன் , த்ரிஷா , ரெஜினா, ஆரவ் உள்ளிட்டவர்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. தடையற தாக்க , மீகாமன் , தடம் ஆகிய படங்களின் மூலம் தனக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்தியவர் இயக்குநர் மகிழ் திருமேனி. இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் அமைந்தவை. அந்த வகையில் விடாமுயற்சி திரைப்படம் தன்னுடைய வழக்கமான படமாக இருக்காது என இயக்குநர் தெரிவித்துள்ளார் . விடாமுயற்சி படத்தின் ப்ரோமோஷனுக்காக மகிழ் திருமேனி பல நேர்காணல்களில் கலந்துகொண்டு வருகிறார். இதில் படம் பற்றியும் அஜித் உடன் பணியாற்றிய அனுபவம் பற்றியும் அவர் நிறைய பகிர்ந்துகொண்டு வருகிறார்.
விடாமுயற்சி ரிலீஸ் ஆகாதது குறித்து அஜித்
விடாமுயற்சி படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாததை நினைத்து நான் ரொம்ப அப்செட்டாக இருந்தேன். அப்போது அஜித் சார் என்னிடம் 'கவலைப்படாதீங்க மகிழ் பண்டிக்கைக்கு நம்ம வரலேனா என்ன நம்ம படம் ரிலீஸ் ஆகுற நாள் பண்டிகையா மாறும். விடாமுயற்சி டைட்டில் நம்மை சோதனை செய்துபார்க்கிறது. அந்த டைட்டிலுடன் என் பெயரும் இருக்கு . அதனால் அந்த டைட்டிலுக்கு நாம் உண்மையாக இருக்க வேண்டும் " என அஜித் சார் என்னிடம் சொன்னார். மேலும் படத்தைப் பார்த்தபின் என்னையும் படக்குழுவினரையும் அழைத்து இந்த படம் நம் கரியரில் மறக்கமுடையாத படமாக அமையும். நான் எதிர்பார்த்ததை விட படம் நல்லா வந்திருக்கு. இந்த மாதிரியான படங்களைதான் நான் தொடர்ந்து பண்ண வேண்டும் என நினைக்கிறேன் என அஜித் சொன்னதாக மகிழ் திருமேனி தெரிவித்துள்ளார்
சாதாரணமா Flow la பேசுறாரா இல்ல மணிகண்டன் மாதிரி நடுவுல நடுவுல மிமிக்ரி பண்றாரானு தெரியாத அளவுக்கு AK மாதிரியே முரட்டு பேஸ் வாய்ஸ் 🤣#MagizhThirumeni#VidaaMuyarchi
— Prakash Mahadevan (@PrakashMahadev) January 24, 2025
pic.twitter.com/19pSAWAjGx
விடாமுயற்சி படத்தைத் தொடர்ந்து அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்துள்ளார். இப்படத்திலும் த்ரிஷா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளது குறிப்பிடத் தக்கது.





















