மேலும் அறிய

Isha Mahashivratri 2024: கோவை ஈஷா யோக மைய மஹாசிவாரத்திரி விழா; நெல்லை, குமரியில் நேரலைக்கு ஏற்பாடு

கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவாரத்திரி நடக்கும் அதே வேளையில், மற்ற ஊர் மக்களும் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் மொத்தம் 36 இடங்களில் மஹாசிவராத்திரி நேரலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மஹாசிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா யோக மையத்தில் இருந்து புறப்பட்ட ஆதியோகி ரதம் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியில் பிப் 8 ஆம் தேதி தொடங்கி மார்ச் 5 ஆம் தேதி வரை வலம் வர இருக்கிறது. மேலும், கோவை ஈஷா யோக மையத்தில்  நடைபெற இருக்கும் மஹாசிவராத்திரி விழா தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தென்மாவட்ட பகுதிகளில் நேரலையாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று  நெல்லையில் பத்திரிகையாளரை சந்தித்த ஈஷா தன்னார்வலர் இளங்கோவன் கூறும் பொழுது,
 
கோவை ஈஷா யோக மையத்தில் மார்ச் 8 ஆம் தேதி, மஹா சிவராத்திரி விழா  30 ஆவது ஆண்டாக  மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி, தென் கயிலாய பக்தி பேரவை சார்பில், மஹாசிவராத்திரி விழாவிற்கு பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக ஆண்டுதோறும் ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.  அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ரத யாத்திரை கோவையில் உள்ள ஆதியோகி முன்பு கடந்த ஜனவரி 5 ஆம் தேதி தொடங்கியது. 4 ஆதியோகி ரதங்களை உள்ளடக்கிய இந்த யாத்திரையை பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் தொடங்கி வைத்தார். அங்கிருந்து புறப்பட்ட ஒரு ரதம் பிப் 14 ஆம் தேதி முதல் மார்ச் 5 ஆம் தேதி வரை தூத்துக்குடி, கூடங்குளம், நாகர்கோவில் ஆகிய பகுதிகளிலும்,  கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெள்ளிச்சந்தை, நட்டாலம், புதுக்கடை, மார்த்தண்டம், மேலப்புறம்  ஆகிய பகுதிகளிலும் வலம் வர இருக்கிறது. முன்னதாக இந்த ரதம் பிப் 8 ஆம் தேதி முதல் பிப் 13 ஆம் தேதி வரை தென்காசி, திருநெல்வேலி மற்றும் கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.  மேலும் திட்டமிட்ட படி அனைத்து பகுதிகளுக்கு வருகை தந்த பின்னர் இறுதியாக மார்ச் 8 ஆம் தேதி, மஹா சிவராத்திரி நாளன்று கோவை ஈஷா யோக மையத்தை இந்த ரதங்கள் சென்றடைய உள்ளன. கோவைக்கு நேரில் வந்து தரிசிக்க முடியாத மக்கள் அவர்கள் இருக்கும் இடத்தின் அருகிலேயே ஆதியோகியை தரிசித்து அருள் பெறுவதற்கு இந்த ரத யாத்திரை வாய்ப்பாக அமைந்துள்ளது.
 
மேலும் கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவாரத்திரி நடக்கும் அதே வேளையில், மற்ற ஊர் மக்களும் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் மொத்தம் 36 இடங்களில் மஹா சிவராத்திரி நேரலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில்  திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியை சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஈஷாவின் மஹாசிவராத்திரி நேரலை செய்யப்பட உள்ளது. அந்த வகையில் திருநெல்வேலியில் சேரன்மகாதேவி ரோட்டில் அமைந்துள்ள ஜெயம் மஹால், தூத்துக்குடியில் வி.இ ரோட்டில் அமைந்துள்ள அழகர் மஹால், கன்னியாகுமரி வெள்ளிச்சந்தை பகுதியில் அமைந்துள்ள ஆதித்யா மெட்ரிக் மேல்நிலை பள்ளி ஆகிய இடங்களில் நேரலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, காரைக்குடி, கூடங்குளம், நாகர்கோவில், சாத்தூர் உள்ளிட்ட இடங்களிலும் நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்வு நடக்கும்  அனைத்து இடங்களிலும்  பங்கேற்கும் மக்களுக்கு மஹா அன்னதானமும் வழங்கப்பட இருக்கிறது. இதில் பொதுமக்கள் அனைவரும் இலவசமாக பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

விடிஞ்சா தீபாவளி, பூக்கள் வாங்க குவியும் மக்கள்... மதுரையில் மல்லிகைப் பூ விலை என்ன?
விடிஞ்சா தீபாவளி, பூக்கள் வாங்க குவியும் மக்கள்... மதுரையில் மல்லிகைப் பூ விலை என்ன?
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
TN Rains: மக்களே.. வங்கக்கடலில் புதிய புயலா? எப்போது? விடாமல் பெய்யப்போகும் மழை!
TN Rains: மக்களே.. வங்கக்கடலில் புதிய புயலா? எப்போது? விடாமல் பெய்யப்போகும் மழை!
Smriti Mandhana Marriage: ஸ்மிரிதி மந்தனாவிற்கு கல்யாணம்... மாப்பிள்ளை யாருப்பா? எப்போ டும் டும்?
Smriti Mandhana Marriage: ஸ்மிரிதி மந்தனாவிற்கு கல்யாணம்... மாப்பிள்ளை யாருப்பா? எப்போ டும் டும்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தேங்கி நிற்கும் கழிவுநீர்! ஜெபம் செய்த மக்கள்! அதிகாரிகளுக்கு வைத்த REQUEST
ராமதாஸ், அன்புமணி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்! களத்தில் இறங்கிய POLICE
Land issue CCTV|சிறுநீர் கழித்த மர்ம நபர்கள்தட்டிக்கேட்ட காவலாளி மீது தாக்குதல்நில உரிமையாளர் புகார்
விஜய் போட்டியிடும் தொகுதி! V-ல் ஆரம்பிக்கும் 9 இடங்கள்! ஜோசியர் கொடுத்த ஐடியா
கடலை மிட்டாய் to அர்ஜூனா விருது! ரியல் பைசன் காளமாடன்! யார் இந்த மணத்தி கணேசன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விடிஞ்சா தீபாவளி, பூக்கள் வாங்க குவியும் மக்கள்... மதுரையில் மல்லிகைப் பூ விலை என்ன?
விடிஞ்சா தீபாவளி, பூக்கள் வாங்க குவியும் மக்கள்... மதுரையில் மல்லிகைப் பூ விலை என்ன?
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
TN Rains: மக்களே.. வங்கக்கடலில் புதிய புயலா? எப்போது? விடாமல் பெய்யப்போகும் மழை!
TN Rains: மக்களே.. வங்கக்கடலில் புதிய புயலா? எப்போது? விடாமல் பெய்யப்போகும் மழை!
Smriti Mandhana Marriage: ஸ்மிரிதி மந்தனாவிற்கு கல்யாணம்... மாப்பிள்ளை யாருப்பா? எப்போ டும் டும்?
Smriti Mandhana Marriage: ஸ்மிரிதி மந்தனாவிற்கு கல்யாணம்... மாப்பிள்ளை யாருப்பா? எப்போ டும் டும்?
Dhoni Replacement: தோனிக்கு பதில் இனி இவர்தான்.. சிஎஸ்கே-வின் புதிய விக்கெட் கீப்பர் ரெடி?
Dhoni Replacement: தோனிக்கு பதில் இனி இவர்தான்.. சிஎஸ்கே-வின் புதிய விக்கெட் கீப்பர் ரெடி?
Diwali Wishes 2025: போடு வெடிய... தீபாவளி திருநாளில் இந்த வாழ்த்துகளை அனுப்பி ஃபயர் விடுங்க..!
Diwali Wishes 2025: போடு வெடிய... தீபாவளி திருநாளில் இந்த வாழ்த்துகளை அனுப்பி ஃபயர் விடுங்க..!
IND vs AUS: மாஸ் காட்டிய ஆஸி.. இந்தியா பவுலிங் தூசி..! வெற்றியுடன் தொடங்கிய கங்காரு பாய்ஸ்!
IND vs AUS: மாஸ் காட்டிய ஆஸி.. இந்தியா பவுலிங் தூசி..! வெற்றியுடன் தொடங்கிய கங்காரு பாய்ஸ்!
Shreyas Iyer: வெளிநாட்டு மண்ணில் சோடை போகும் ஸ்ரேயாஸ்.. உள்ளூர்லதான் வீராப்பா?
Shreyas Iyer: வெளிநாட்டு மண்ணில் சோடை போகும் ஸ்ரேயாஸ்.. உள்ளூர்லதான் வீராப்பா?
Embed widget