IND vs AUS: இந்தியாவுக்கு இப்படி ஒரு பெருமையா? 142 வருஷ சிட்னி மைதான வரலாறு இதுதான்!
இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை மறுநாள் தொடங்குகிறது. சிட்னி மைதானம் குறித்து கீழே காணலாம்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த தொடரில் தற்போது வரை இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தற்போது முன்னிலையில் உள்ளது.
சிட்னி மைதானம்:
இந்த நிலையில், இந்த தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற உள்ளது. உலகின் மிகவும் பழமையான மைதானங்களில் சிட்னி மைதானமும் ஒன்றாகும். சிட்னி மைதானத்தில் இதுவரை நடைபெற்ற டெஸ்ட் போட்டிகள் பற்றி கீழே காணலாம்.
சிட்னியில் இதுவரை மொத்தம் 114 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளது. இந்த மைதானத்தில் முதன்முறையாக 1882ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடந்தது. பொதுவாக ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவில் நடக்கும் டெஸ்ட் போட்டிகள் பெரும்பாலும் சிட்னியிலே தொடங்கும்.
நிலவரம் எப்படி?
சிட்னி மைதானத்தில் இதுவரை நடந்த டெஸ்ட் போட்டிகளில் முதலில் ஆடிய அணி 47 முறை வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது பேட் செய்த அணி 43 முறை வெற்றி பெற்றுள்ளது. இந்த மைதானத்தில் முதல் இன்னிங்சில் ஒரு அணி எடுக்கும் சராசரி ரன் 318 ரன்கள் ஆகும். இரண்டாவது இன்னிங்சில் ஒரு அணி எடுக்கும் சராசரி ரன்கள் 311 ஆகும்.
3வது இன்னிங்சில் 249 ரன்களும், 4வது இன்னிங்சில் 169 ரன்களும் சராசரியாக எடுக்கப்படுகிறது. இந்த போட்டியில் இந்த மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த அணி என்ற பெருமையை இந்தியா வைத்துள்ளது.
42 ரன்னில் ஆல் அவுட்டான ஆஸ்திரேலியா:
இந்த மைதானத்தில் சச்சின் டெண்டுல்கரின் இரட்டை சதம், லட்சுமணனினன் சதம் உள்பட இந்திய அணி 705 ரன்களை குவித்தது. 2004 எடுத்த அந்த ரன் 20 ஆண்டுகளாக எந்த அணியாலும் முறியடிக்கப்படவில்லை. இந்த மைதானத்தில் குறைந்த ரன்கள் எடுத்த அணி என்ற மோசமான சாதனையை ஆஸ்திரேலியா தன்வசம் வைத்துள்ளது. 1888ம் ஆண்டு நடந்த போட்டியில் 42 ரன்களுக்கு இதே மைதானத்தில் ஆல் அவுட்டாகியது ஆஸ்திரேலியா.
இந்த மைதானத்தில் அதிக ரன் எடுத்தவர் என்ற பெருமையை ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் பாண்டிங் வைத்துள்ளார். அவர் 16 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1480 ரன்கள் வைத்துள்ளார். புஜாரா இந்த மைதானத்தில் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 320 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 193 ரன்கள் விளாசியுள்ளார். இந்த மைதானத்தில் வார்னே அதிகபட்சமாக 64 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். நாதன் லயன் 48 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்த மைதானத்தில் இந்திய அணியின் கடந்த கால செயல்பாடுகள் ஓரளவு திருப்திகரமாக இருப்பதால் பழைய தோல்வியை மறந்து இயல்பான ஆட்டத்தை இந்தியா வெளிப்படுத்தினாலே இந்த போட்டியில் இந்தியா மீண்டு வர முடியும்.