மேலும் அறிய

Manipur Issue: கேள்விக்கு சம்மந்தமே இல்லாத பதில்..! பிரதமர் மோடி.. மன்னிப்பு கேட்ட மணிப்பூர் முதலமைச்சர்

Manipur Issue: மணிப்பூரில் தொடரும் சூழல் தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் பிரைன் சிங் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

Manipur Issue: பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்லாதது தொடர்பான காங்கிரஸின் கேள்விக்கு, அம்மாநில முதலமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

மன்னிப்பு கோரிய மணிப்பூர் முதலமைச்சர்:

ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக மணிப்பூரில் நிகழ்ந்து வரும் வன்முறை தொடர்பாக, அம்மாநில முதலமைச்சர் பிரைன் சிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “இந்த ஆண்டு முழுவதும் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. கடந்த மே 3 முதல் இன்று வரை என்ன நடக்கிறதோ அதற்காக மாநில மக்களிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன். பலர் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தனர். பலர் தங்கள் வீட்டை விட்டு வெளியேறினர். அதற்காக நான் வருந்துகிறேன், மன்னிப்பு கேட்கிறேன். ஆனால் இப்போது, ​​கடந்த மூன்று முதல் நான்கு மாதங்களாக அமைதியை நோக்கி முன்னேறி வருவதைக் கண்டு, 2025ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பும் என நம்புகிறேன்” என பிரைன் சிங் நம்பிக்கை தெரிவித்தார். 

பொதுமக்களுக்கு கோரிக்கை

தொடர்ந்து பேசுகையில், “மாநிலத்தில் உள்ள அனைத்து சமூகத்தினருக்கும் நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். என்ன நடந்ததோ அது நடந்து விட்டது. நீங்கள் கடந்த கால தவறுகளை மன்னித்து மறந்துவிட வேண்டும், மேலும் அமைதியான மற்றும் வளமான மணிப்பூரை நோக்கி புதிய வாழ்க்கையைத் தொடங்க வேண்டும்" என்று முதலமைச்சர் பிரைன் சிங் வலியுறுத்தினார்.

பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்லாதது ஏன்?

மணிப்பூர் முதலமைச்சரின் பேட்டியை குறிப்பிட்டு, பிரதமர் மோடி இதுநாள் வரை அங்கு செல்லாதது ஏன்? என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பினார். இதுதொடர்பான பதிவில், “பிரதமர் மோடியால் ஏன் மணிப்பூருக்குச் சென்று, முதலமைச்சர் சொன்னதை பொதுமக்களிடம் சொல்ல முடியவில்லை? 2023 ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி முதல் அவர் நாடு மற்றும் உலகத்தை சுற்றி வந்தாலும், மணிப்பூர் மாநிலத்திற்கு வருவதை வேண்டுமென்றே தவிர்த்துவிட்டார். மணிப்பூர் மக்களால் இந்த புறக்கணிப்பை புரிந்து கொள்ள முடியவில்லை” என பதிவிட்டு இருந்தார்.

”காங்கிரஸ் தான் காரணம்” - பிரைன் சிங்

காங்கிரஸ் குற்றச்சாட்டிற்கு டிவிட்டரில் பதிலளித்த பிரைன் சிங், “மணிப்பூரில் பர்மிய அகதிகளை மீண்டும் மீண்டும் குடியமர்த்தியது மற்றும் மாநிலத்தில் மியான்மரை தளமாகக் கொண்ட போராளிகளுடன் SoO ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது போன்ற காங்கிரஸ் செய்த கடந்தகால பாவங்களால் இன்று மணிப்பூர் கொந்தளிப்பில் உள்ளது என்பதை நீங்கள் உட்பட அனைவரும் அறிவீர்கள். ப. சிதம்பரம் இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருந்தபோது இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 1992-97 காலகட்டத்தில் மணிப்பூரில் நாகா-குகி மோதலால் சுமார் 1,300 பேர் இறந்தனர். அப்போதைய பிரதமர் பி.வி. நரசிம்ஹா ராவ் மணிப்பூர் வந்தாரா? 1997-98களில் குகி மற்றும் பைட் மோதல்களால் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அப்போதைய பிரதமர் ஐ.கே. குஜ்ரால் மணிப்பூர் வந்து மன்னிப்பு கேட்டாரா?” என விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியாவில் நிகழும் பல மோசமான சம்பவங்களுக்கு கடந்த கால காங்கிரஸ் ஆட்சியாளர்கள் எடுத்த முடிவே காரணம் என பிரதமர் மோடி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். அதேபாணியில், மணிப்பூர் பிரச்னைக்க்கும் காங்கிரஸ் தான் காரணம் என முதலமைச்சர் பிரைன் சிங் கூறியுள்ளார். அதேநேரம், மத்தியில் கடந்த 10 ஆண்டுகளாகவும், மணிப்பூரில் கடந்த 2017ம் ஆண்டு முதலும் பாஜக ஆட்சி தான் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Ather Konarc: ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
Embed widget