மேலும் அறிய

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரோட்டம் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க வெகுவிமர்சையாக தொடங்கவுள்ளது !

இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை நான்கு மாசி வீதிகளிலும் தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா - திருக்கல்யாணத்தை தொடர்ந்து நாளை காலை திருத்தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க வெகுவிமர்சையாக தொடங்கவுள்ளது..

மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.

உலகப்பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 19  ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி- அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திக் விஜயம் நடைபெற்று முடிவடைந்த நிலையில் இன்று சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.

திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக  தொடங்கி நடைபெறவுள்ளது.

இதனை தொடர்ந்து விழாவின் முத்தாய்ப்பாக நாளை காலை திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக  தொடங்கி நடைபெறவுள்ளது. திருத்தேரோட்டத்தை முன்னிட்டு கீழமாசி வீதியில் உள்ள தேரடி பகுதிக்கு மீனாட்சிஅம்மனும், சுந்தரேசுவரர் பிரியாவிடை  சமேதராக கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அழைத்து வரப்பட்டு அம்மனுக்கும் சுவாமிக்கும் சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டு அலங்கரிக்கப்பட்ட பிரமாண்டமான பெரியதேரில் சுந்தரேஸ்வர் பிரியாவிடை சமேதராகவும், சிறப்பு அலங்காரத்திலும், மீனாட்சியம்மன் சிறிய தேரிலும் சிறப்பு அலங்காரத்திலும் எழுந்தருளவுள்ளனர். காலை 6.30 மணிக்கு தேரானது பக்தர்களால் வடம்பிடித்து இழுக்க தொடங்கவுள்ளது.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர்

சுவாமி, அம்மனின் திருத்தேரானது மதுரை நகர வீதிகளான கீழமாசி வீதி, தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி, வடக்குமாசி வீதிகளில் வலம் வரவுள்ளது. தேரோட்டத்தை காண மதுரை மற்றும் சுற்று வட்டாரங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ள நிலையில்  மதுரை மாநகர  காவல்துறை சார்பில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட கவால்துறையினர் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேரோட்டம் நடைபெறுவதை முன்னிட்டு மாசி வீதிகள் முழுவதிலும் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது மாசி வீதிகளில் உயரமாக செல்லும் மின்வயர்கள் தற்காலிகமாக அகற்றப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனங்கள் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர ஊர்திகள் பாதுகாப்பிற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை நான்கு மாசி வீதிகளிலும் தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

இப்படியொரு தெய்வீகக் காட்சியைப் பார்த்திருக்க மாட்டீர்கள்! மாயூரநாதர் கோயில் முருகர்-தெய்வானை திருக்கல்யாணம்!
இப்படியொரு தெய்வீகக் காட்சியைப் பார்த்திருக்க மாட்டீர்கள்! மாயூரநாதர் கோயில் முருகர்-தெய்வானை திருக்கல்யாணம்!
உலக அமைதி வேண்டி சிறப்பு துஆ: மதுரையில் தியாகத்திருநாள் பக்ரித் தொழுகை எழுச்சியுடன் நடைபெற்றது!
உலக அமைதி வேண்டி சிறப்பு துஆ: மதுரையில் தியாகத்திருநாள் பக்ரித் தொழுகை எழுச்சியுடன் நடைபெற்றது!
குரு-சீடர் உறவின் உன்னத விழா! தருமபுரம் ஆதீனத்தில் களைகட்டும் வைகாசிப் பெருவிழா - ஜூன் 7-ல் பட்டினப் பிரவேசம்!
குரு-சீடர் உறவின் உன்னத விழா! தருமபுரம் ஆதீனத்தில் களைகட்டும் வைகாசிப் பெருவிழா - ஜூன் 7-ல் பட்டினப் பிரவேசம்!
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்: கோவில் வைகாசி பிரம்மோற்சவம் கொடியேற்றம்!
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்: கோவில் வைகாசி பிரம்மோற்சவம் கொடியேற்றம்!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ramesh: திருச்செந்தூரில் அடாவடி..! அமைச்சரிடமே ரூ.4000 லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள் - கொத்தாக சிக்கிய கும்பல்
திருச்செந்தூரில் அடாவடி..! அமைச்சரிடமே ரூ.4000 லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள் - கொத்தாக சிக்கிய கும்பல்
Gold Silver Rate May 29th: போச்சுடா.! ரூ.5000 கூடிடுச்சே.! தங்கம், வெள்ளியின் இன்றைய விலை என்ன தெரியுமா.?
போச்சுடா.! ரூ.5000 கூடிடுச்சே.! தங்கம், வெள்ளியின் இன்றைய விலை என்ன தெரியுமா.?
CV Shanmugam: சிவி சண்முகம் தவெக-வில் இணைவது உறுதி? விஜய் தரப்போகும் பதவி என்ன தெரியுமா?
CV Shanmugam: சிவி சண்முகம் தவெக-வில் இணைவது உறுதி? விஜய் தரப்போகும் பதவி என்ன தெரியுமா?
Hardik Pandya: ”நீ கிளிச்ச வரைக்கும் போதும்” சொந்த காசில் சூனியம் - ஹர்திக்கிற்கு கும்புடு, ரோகித்தை நாடும் மும்பை
”நீ கிளிச்ச வரைக்கும் போதும்” சொந்த காசில் சூனியம் - ஹர்திக்கிற்கு கும்புடு, ரோகித்தை நாடும் மும்பை
CM Vijay: அதிகாரிகளுக்கு நோ..! மக்கள் வரி பணத்தில் ஹேர் ஸ்டைலிஸ்டிற்கு ட்ரிப்பா? CM விஜய்க்கு சரமாரி கேள்வி
அதிகாரிகளுக்கு நோ..! மக்கள் வரி பணத்தில் ஹேர் ஸ்டைலிஸ்டிற்கு ட்ரிப்பா? CM விஜய்க்கு சரமாரி கேள்வி
15 வருடமாக வசித்த வீட்டை காலி செய்யும் இபிஎஸ்.! புது வீட்டிற்கு குடியேறுகிறார்- ஏன் தெரியுமா.?
15 வருடமாக வசித்த வீட்டை காலி செய்யும் இபிஎஸ்.! புது வீட்டிற்கு குடியேறுகிறார்- ஏன் தெரியுமா.?
Singappen Special Force: CM விஜயின் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழா ரத்து ஏன்? இதுதான் காரணமா?
CM விஜயின் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழா ரத்து ஏன்? இதுதான் காரணமா?
Tamilnadu Headlines: சிங்கப்பெண் சிறப்பு படை அதிரடி திட்டம் தொடக்க விழா ரத்து! வெளுக்கப்போகும் மழை - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Headlines: சிங்கப்பெண் சிறப்பு படை அதிரடி திட்டம் தொடக்க விழா ரத்து! வெளுக்கப்போகும் மழை - தமிழகத்தில் இதுவரை
Embed widget