மேலும் அறிய

Hardik Pandya: ”நீ கிளிச்ச வரைக்கும் போதும்” சொந்த காசில் சூனியம் - ஹர்திக்கிற்கு கும்புடு, ரோகித்தை நாடும் மும்பை

Hardik Pandya: ஹர்திக் பாண்ட்யாவை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கி, புதிய கேப்டனை நியமிக்கும் பணிகளை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் வேகப்படுத்தியுள்ளதாம்.

Hardik Pandya: முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் ஆதரவு உள்ள நபரையே, புதிய கேப்டனாக நியமிக்க மும்பை அணி நிர்வாகம் விரும்புகிறதாம்.

சொதப்பிய மும்பை இந்தியன்ஸ்

முன்னெப்போதும் இல்லாத வகையிலான குழப்பமான சூழல் மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் ஏற்பட்டுள்ளதாம். அதன்படி, ஹார்திக் பாண்ட்யாவை கேப்டன் பதவியிலிருந்து நீக்க அணி நிர்வாகம் திட்டமிட்டு வரும் சூழலில், அணியிலிருந்தே விலக ஹர்திக் திட்டமிட்டுள்ளாராம். உரிமையாளர்களுடன் சுமூகமான உறவு இல்லாததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. நடப்பாண்டி ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் வெறும் நான்கில் மட்டுமே மும்பை வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தை பிடித்தது. தொடர்ச்சியான சொதப்பல் காரணமாக, கடந்த 2024ம் ஆண்டு கேப்டனாக நியமிக்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யாவை அப்பொறுப்பில் இருந்து விடுக்க மும்பை தீவிரம் காட்டுகிறதாம். அதேநேரம், அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வியும் வலுவாக எழுந்துள்ளது.

ஆள விடுங்கடா முடிவில் ஹர்திக் பாண்ட்யா

மும்பை அணியிலிருந்து வெளியேற விருப்பம் தெரிவித்துள்ள ஹர்திக்கின் முடிவு குறித்து, நிர்வாகம் இன்னும் இறுதியான முடிவை எட்டவில்லையாம். ஆனால், வேறு அணிக்கு மாறுவது குறித்து 32 வயதான ஆல்-ரவுண்டர் விரைவில் வெளிப்படையான அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாம். கேப்டன் பதவியில் எதிர்பார்த்த வெற்றியை ஈட்ட முடியாதது மட்டுமின்றி, தனிப்பட்ட முறையிலும் அணி உரிமையாளர்களிடம் நல்ல உறவு இல்லாததும் ஹர்திக்கின் முடிவுக்கு காரணமாம். நடப்பாண்டு ஐபிஎல் தொடர் முடிவடைந்த அடுத்த ஒரு சில வாரங்களிலேயே மும்பை அணியில் நிகழ உள்ள முக்கியமான மாற்றங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாம்.

மும்பைக்கு அடுத்த கேப்டன் யார்?

மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மாவை நீக்கியத்தில் எதிர்காலத்திலும் எந்த மாற்றமும் இருக்காது என கருதப்படுகிறது. அதேநேரம், நிர்வாகம் தனது தவறை இந்தமுறை உணர்ந்ததாக தெரிகிறது. அதன் காரணமாகவே ரோகித்தின் அங்கீகாரம் பெற்ற நபரையே அடுத்த கேப்டனாக நியமிக்க முடிவு செய்துள்ளதாம். இத்தகைய நடைமுறையை பின்பற்றாததன் காரணமாகவே, ஹர்திக் உள்ளே நுழைந்ததும் மும்பை அணியில் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டதோடு, வீரர்கள் இடையே ஒருமித்த கருத்து ஏற்படுவதிலும் சிக்கல் ஏற்பட்டதாக பலதரப்பட்ட தகவல்கள் வெளியாகின. 5 முறை சாம்பியன் பட்டம் வென்று கொடுத்த ரோகித் சர்மாவிற்கு, உரிய மரியாதை கொடுக்கப்படவில்லை என ரசிகர்களும் அணியின் நிர்வாகத்தின் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். 

இதையும் படியுங்கள்: Royal Enfield Bullet 650: பவர் ஹவுஸ் ஆன புல்லட் - 30KM மைலேஜ், டர்ன் பை டர்ன் நேவிகேஷன், மாஸ் லுக் - பட்ஜெட் எப்படி?

சொந்த காசில் சூனியம்..

2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் அடுத்தடுத்து சாம்பியன் பட்டம் வென்று கொடுத்த ரோகித் சர்மாவால், அடுத்த மூன்று சீசன்களில் ஒருமுறை மட்டுமே அணியை பிளே-ஆஃப் சுற்றுக்கு கொண்டு சென்றார். இதனால் யாரும் எதிர்பாராத விதமாக 2024ம் ஆண்டு குஜராத் அணியில் இருந்து ட்ரேடிங் முறையில் ஹர்திக்கை கொண்டு வந்து, கேப்டனாக மும்பை அணி நிர்வாகம் அறிவித்தது. இது ரசிகர்கள் மட்டுமின்றி அணியின் வீரர்களிடையேயும் மிகப்பெரிய அதிர்வலைகளையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது. அதன் வெளிப்பாடாகவே  அந்த தொடரில் மும்பை அணி கடைசி இடத்தை பிடித்தது. 2025 சீசனில் மூன்றாவது இடத்தை பிடித்தது. ஆனால், இந்த முறை மீண்டும் மோசமான செயல்பாட்டால் 9வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதையடுத்து அணியில் உள்ள பிரச்னைகளை சீர்படுத்தும் விதமாக, கேப்டனை மாற்றுவது உட்பட பல முக்கிய முடிவுகளை மும்பை அணி எடுக்க முடிவு செய்துள்ளதாம்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK: வெற்று பில்டப்.. கொடூர குற்றம்.. ஆட்சித் திமிர்! ஒரு மாத தவெக ஆட்சியை விளாசிய திமுக!
DMK: வெற்று பில்டப்.. கொடூர குற்றம்.. ஆட்சித் திமிர்! ஒரு மாத தவெக ஆட்சியை விளாசிய திமுக!
Lance Naik Meenatchi Sundaram : ’முகத்திலும் தோளிலும் குண்டு’ தீவிரவாதிகளை துவம்சம் செய்த தமிழர் – யார் இந்த மீனாட்சி சுந்தரம்..?
’முகத்திலும் தோளிலும் குண்டு’ தீவிரவாதிகளை துவம்சம் செய்த தமிழர்..!
விஜய்க்கு வில்லனாக மருமகனை களமிறக்கும் ரஜினிகாந்த்? ஆஃப் ஸ்கிரினில் ஆடப்போகும் சூப்பர்ஸ்டார்!
விஜய்க்கு வில்லனாக மருமகனை களமிறக்கும் ரஜினிகாந்த்? ஆஃப் ஸ்கிரினில் ஆடப்போகும் சூப்பர்ஸ்டார்!
Kia Offers: 1.5 லட்சம் ரூபாய் ஆஃபர்! தள்ளுபடியை தாறுமாறாக அறிவித்த கியா - எந்தெந்த காருக்கு?
Kia Offers: 1.5 லட்சம் ரூபாய் ஆஃபர்! தள்ளுபடியை தாறுமாறாக அறிவித்த கியா - எந்தெந்த காருக்கு?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Raghava Lawrence | TARGET விஜய்!TEAM அண்ணாமலை?லாரன்ஸ் மெகா ட்விஸ்ட்
Tindivanam Murder: தீர்த்துக்கட்ட சொன்ன தாய்..திட்டம் போட்டு முடித்த மகன்!குப்பை கொட்டியதால் கொடூரம்
Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: வெற்று பில்டப்.. கொடூர குற்றம்.. ஆட்சித் திமிர்! ஒரு மாத தவெக ஆட்சியை விளாசிய திமுக!
DMK: வெற்று பில்டப்.. கொடூர குற்றம்.. ஆட்சித் திமிர்! ஒரு மாத தவெக ஆட்சியை விளாசிய திமுக!
Lance Naik Meenatchi Sundaram : ’முகத்திலும் தோளிலும் குண்டு’ தீவிரவாதிகளை துவம்சம் செய்த தமிழர் – யார் இந்த மீனாட்சி சுந்தரம்..?
’முகத்திலும் தோளிலும் குண்டு’ தீவிரவாதிகளை துவம்சம் செய்த தமிழர்..!
விஜய்க்கு வில்லனாக மருமகனை களமிறக்கும் ரஜினிகாந்த்? ஆஃப் ஸ்கிரினில் ஆடப்போகும் சூப்பர்ஸ்டார்!
விஜய்க்கு வில்லனாக மருமகனை களமிறக்கும் ரஜினிகாந்த்? ஆஃப் ஸ்கிரினில் ஆடப்போகும் சூப்பர்ஸ்டார்!
Kia Offers: 1.5 லட்சம் ரூபாய் ஆஃபர்! தள்ளுபடியை தாறுமாறாக அறிவித்த கியா - எந்தெந்த காருக்கு?
Kia Offers: 1.5 லட்சம் ரூபாய் ஆஃபர்! தள்ளுபடியை தாறுமாறாக அறிவித்த கியா - எந்தெந்த காருக்கு?
விரைவில் வெளியாகும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி?
விரைவில் வெளியாகும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி?
டெல்லியில் சிஎம் விஜய்; தமிழக உரிமைகளை வென்றெடுக்கஎன்ன செய்யணும்? 8 முக்கிய கோரிக்கைகள்
டெல்லியில் சிஎம் விஜய்; தமிழக உரிமைகளை வென்றெடுக்கஎன்ன செய்யணும்? 8 முக்கிய கோரிக்கைகள்
ஆகஸ்ட் 15 வரைதான் டைம்! நயினார் நாகேந்திரனுக்கு கெடு விதித்த பாஜக நிர்வாகிகள் - கமலாலயத்தில் நடந்தது என்ன?
ஆகஸ்ட் 15 வரைதான் டைம்! நயினார் நாகேந்திரனுக்கு கெடு விதித்த பாஜக நிர்வாகிகள் - கமலாலயத்தில் நடந்தது என்ன?
ஒரு முறை சார்ஜ் செய்தாலே 123 கிலோமீட்டர் மைலேஜ்! ட்ராஃபிக்கிலும் டயர்ட் இல்லாமல் போக BGauss C12 இ ஸ்கூட்டர்!
ஒரு முறை சார்ஜ் செய்தாலே 123 கிலோமீட்டர் மைலேஜ்! ட்ராஃபிக்கிலும் டயர்ட் இல்லாமல் போக BGauss C12 இ ஸ்கூட்டர்!
Embed widget