மேலும் அறிய
Advertisement
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உண்டியல் வசூல் எவ்வளவு தெரியுமா..?
உண்டியல் வருமானமாக 1 கோடியே 4 இலட்சத்து 37ஆயிரத்து 557 ரூபாய் ரொக்க பணம் மற்றும் 544 கிராம் தங்கம், 6 கிலோ 576 கிராம் வெள்ளியும் மற்றும் அயல்நாட்டு நோட்டுக்கள் 465 காணிக்கையாக பெறப்பட்டுள்ளது.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு, உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். மதுரையின் பல நூற்றாண்டு கால அடையாளமாகவும், மதுரையின் நடுவிலும் மிகப் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. ஆன்மீகம், வரலாறு, கலை, பண்பாட்டு அடையாளங்களுடன் மீனாட்சி கோயில் இன்றளவும் திகழ்கிறது.
#Madurai | மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உண்டியல் வருமானம்-1 கோடியே 4 லட்ச ரூபாய் பணம் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
— arunchinna (@arunreporter92) November 29, 2022
further reports to follow - @abpnadu #spritual | @abpnadu | #மதுரைமீனாட்சியம்மன்கோயில் | #MeenakshiAmmanTemple | @LPRABHAKARANPR3 .... pic.twitter.com/2JKw1aEiSM
இந்நிலையில் பக்தர்கள் உண்டியல்களில் காணிக்கையாக செலுத்தும் பணம் மற்றும் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் மாதந்தோறும் எண்ணும் பணியானது நடைபெறும் நிலையில், நவம்பர் மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோயில் துணை ஆணையர் அருணாச்சலம் முன்னிலையில் கோயில் ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில் நடைபெற்றது.
இதில் உண்டியல் வருமானமாக 1கோடியே 4 இலட்சத்து 37ஆயிரத்து 557 ரூபாய் ரொக்க பணம் மற்றும் 544 கிராம் தங்கம், 6 கிலோ 576 கிராம் வெள்ளியும் மற்றும் அயல்நாட்டு நோட்டுக்கள் 465 காணிக்கையாக பெறப்பட்டுள்ளது என திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள் படிக்க - மதுரை: இலவச அனுமதி.. மன்னர் திருமலை நாயக்கர் மஹாலுக்கு படையெடுத்த பொதுமக்கள்..
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Pugar Petti: மதுரை யானைமலை அடிவாரத்தில் மலையாய் குவியும் குப்பைகள்; உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கைகள் எடுக்குமா?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
உலகம்
கிரிக்கெட்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion