Madurai: சிங்கம்புணரியில் இருந்து அழகர்கோயில் கருப்பணுக்கு 450 கிலோவில், 18.5 அடி உயரத்தில் வீச்சரிவாள்
கருப்பண சாமிக்கு நேர்த்தி கடன் செலுத்துவதற்காக 450 கிலோ எடை கொண்ட 18.5 அடி உயரம் உள்ள அரிவாள் செய்யும் பணி கொடுக்கப்பட்டது.
#Madurai | மதுரை அழகர்கோயிலில் ஆடித் திருவிழா கொடியேறியுள்ளது. இந்நிலையில் காவல்தெய்வம் கருப்பணசாமிக்கு பக்தர்கள் அரிவாள் சாத்தி வருகின்றனர். சிங்கம்புணரியில் இருந்து 450.கி எடையுள்ள 18.5 அடி உயரம் கொண்ட அரிவாள் காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது.@abpnadu | @SRajaJourno | #கருப்பசாமி pic.twitter.com/2jK3w4rDPX
— arunchinna (@arunreporter92) July 25, 2023
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் இரும்பு தளவாடங்கள் செய்யும் தொழிற்பட்டறைகள் செயல்பட்டு வரும் நிலையில் இங்கு மதுரை மாவட்டம் அழகர்கோyiல் பதினெட்டாம்படி கருப்பணசாமிக்கு நேர்த்தி கடன் செலுத்துவதற்காக 450 கிலோ எடை கொண்ட 18.5 அடி உயரம் உள்ள அரிவாள் செய்யும் பணி கொடுக்கப்பட்டது.
இதற்காக தொழிலாளர்கள் காப்பு கட்டி, விரதம் இருந்து பயபக்தியுடன் 15 நாட்களாக பணி செய்து பிரமாண்ட அரிவாளை தயார் செய்து முடித்தனர். அந்த அரிவாள் பக்தர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அதற்கு சிறப்பு பூஜைகள் செய்து அழகர்கோயில் பதினெட்டாம்படி கருப்பணசாமி கோயிலுக்கு எடுத்து செல்லப்பட்டது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்