Kodumudi Magudeswarar Temple: திருமண தடையா..? ஒரு முறை இந்த கோயிலுக்கு செல்லுங்கள்..!
Kodumudi Magudeswarar Temple: திருமண தடை உள்ளவர்கள் ஒரு முறை இந்த கோயிலுக்கு வந்து சென்றால் உடனடியாக திருமண தடை நீங்கும்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் பிரசித்தி பெற்ற மகுடேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. தமிழகத்தில் பல பழமை வாய்ந்த கோவில்கள் இருந்தாலும் கொடுமுடியில் அமைந்துள்ள மகுடேஸ்வரர் திருக்கோவில் சிறப்புமிக்க புனித ஸ்தலமாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் வந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக கொடுமுடி மகுடேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. வடக்கில் இருந்து தெற்கு நோக்கி ஓடிவரும் காவிரி கிழக்கு நோக்கி திசை மாறி செல்லும் இடமாக கொடுமுடி அமைந்துள்ளது.
சன்னதிகள்:
இந்த திருக்கோவிலில் மகுடேஸ்வரர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். அகத்தியர் கைபட்ட வடு இருப்பதாக கூறப்படுகிறது. அகத்தியருக்கு மணக்கோலத்தில் காட்சி அளித்ததால் இந்தக் கோவிலில் வடிவுடைய நாயகியாக அம்பாள் காட்சியளிக்கிறார். மகுடேஸ்வரர் மற்றும் வடிவுடைய நாயகி சொன்னதுக்கு இடையில் வீரநாராயண பெருமாள், மகாலட்சுமி சன்னதிகள் உள்ளது. கோவிலின் தல விருட்சமான வன்னி மரத்தை அடியில் மூன்று முகத்தில் பிரம்மன் காட்சியளிக்கிறார். ஆஞ்சநேயர் சன்னதி, சனி பகவான் சன்னதி, விநாயகர் சன்னதி இந்த கோவிலில் அமைந்துள்ளது. சிவன், பிரம்மா, திருமால் என மும்மூர்த்திகளும் உள்ள ஒரே திருக்கோவிலாக உள்ளது.
தல வரலாறு:
ஆதிசேஷனுக்கும், வாய்வுக்கும் ஏற்பட்ட போட்டியால் மேரு மலையின் சிதறி விழுந்த துண்டுகளில் ஒன்றாக கொடுமுடியாக உருவானது என வரலாற்று சுவடுகளில் கூறப்படுகிறது.
பரிகாரங்கள்:
பரிகார ஸ்தலமான இந்த கோவிலில் உள்ள வேப்பமரம் மற்றும் அரசு மரத்து அடியில் காட்சியளிக்கும் விநாயகருக்கு காவிரி ஆற்றில் நீராடி சுற்றி வந்தால் திருமண தடை, குழந்தை பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம். இதைத் தவிர இந்த கோவிலில் ஆயுள், தொழில், குடும்ப தோஷம், கால சர்ப்ப தோஷம், சர்ப்ப தோஷம், கார தோஷம், நாக தோஷம், பெண் சாப தோஷம், பிரம்மஹத்தி தோஷம், பிரம்ம தோஷம், பூர்வீக சாப தோஷம், சனி கிரக தோஷம், செவ்வாய் தோஷம், மாங்கல்ய தோஷம் உள்ளிட்ட பல தோஷங்களுக்கு பரிகாரங்கள் கொடுமுடி மகுடேஸ்வரர் திருக்கோவில் செய்யப்படுகிறது. திருமண தடை உள்ளவர்கள் ஒரு முறை இந்த கோவிலுக்கு வந்து சென்றால் உடனடியாக திருமண தடை நீங்கும் என கூறப்படுகிறது.
செல்லும் வழி:
கரூர் - ஈரோடு பிரதான சாலையில் கொடுமுடி மகுடேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலும், கரூர் பேருந்து நிலையத்திலிருந்து 27 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது கொடுமுடி மகுடேஸ்வரர் திருக்கோவில். இந்த கோவிலுக்கு ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்தும், கரூர் பேருந்து நிலையத்திலிருந்தும் தொடர்ச்சியாக பேருந்து வசதி உள்ளது. ரயில் பயணிகள் கொடுமுடி ரயில் நிலையத்தில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் மகுடேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. மகுடேஸ்வரர் திருக்கோவிலில் அருகில் பக்தர்கள் தங்குவதற்காக விடுதி வசதிகளும் உள்ளது.