ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலய கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்
ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் கணபதிக்கு கரும்பு, பால், பன்னீர், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
கரூர் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மூலவர் கணபதிக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் கணபதிக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, கரும்பு பால், பன்னீர், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து மூலவர் கணபதிக்கும், உற்சவர் கணபதிக்கும் பட்டாடை உடுத்தி வண்ண மாலைகள் அணிவித்த பிறகு சுவாமிக்கு ஆலயத்தின் சிவாச்சாரியார் தூப தீபங்கள் காட்டிய பிறகு பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய சிவாச்சாரியார் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
அபய பிரதான ரங்கநாத சுவாமி ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு எட்டாம் நாள் இராபத்து நிகழ்ச்சியில் சுவாமி ஆண்டாள் திருக்கோலத்தில் காட்சி அளித்தார்.
கரூர் மேட்டு தெரு பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரெங்கநாத சுவாமி ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு நாள்தோறும் சுவாமி பல்வேறு அலங்காரத்தில் காட்சி தருகிறார். இந்நிலையில் நேற்று அபய பிரதான ரெங்கநாத ஸ்வாமி வைகுண்ட ஏகாதசி இராப்பத்து நிகழ்ச்சியில் எட்டாம் நாள் அலங்காரமாக ஆண்டாள் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆலய மண்டபத்தில் இருந்து மேள, தாளங்கள் முழங்கு புறப்பட்ட அபய பிரதான ரெங்கநாத ஸ்வாமி ஆலய வலம் வந்து பிறகு மீண்டும் ஆலய குடிபுகுந்தார்.
இந்நிலையில், ஆண்டாள் சன்னதி அருகே சுவாமிக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சியும் அதை தொடர்ந்து சுவாமிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. கரூர் மேட்டு தெரு அபய பிரதான ரெங்கநாத சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி இராப்பத்து எட்டாம் நாள் ஆண்டாள் திருக்கோல அலங்காரத்தை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்துள்ளனர்.