கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் கார்த்திகை மாத பௌர்ணமி பூஜை
கரூர் தேர்வீதி பகுதியில் குடிகொண்டு வரும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் காயத்ரி தேவிக்கு கார்த்திகை மாத பௌர்ணமி முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் கார்த்திகை மாத பௌர்ணமியை முன்னிட்டு காயத்ரி தேவிக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
கரூர் நகரப் பகுதியான தேர்வீதி பகுதியில் குடிகொண்டு அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் காயத்ரி தேவிக்கு கார்த்திகை மாத பௌர்ணமி முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு காயத்ரி தேவிக்கு எண்ணைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேகப் பொடி, குங்குமம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஆலயத்தின் சிவாச்சாரியார் சுவாமிக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அறிவித்த பிறகு தூப தீபங்கள் காட்டி நெய்வேத்திய சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன், மகா தீபாராதனை நடைபெற்றது. ஆலயத்தில் நடைபெற்ற கார்த்திகை மாத பௌர்ணமி பூஜையை காண கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சியை ஆலய அர்ச்சகர் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்தனர்.
தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் கார்த்திகை மாத பௌர்ணமி தங்கதேரோட்ட நிகழ்ச்சி.
தமிழகத்தில் புகழ்பெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றான கரூர் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் கார்த்திகை மாத பௌர்ணமியை முன்னிட்டு தங்க தேரோட்ட நிகழ்ச்சி இன்று விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு மூலவர் ஸ்ரீ மாரியம்மன், உற்சவர் ஸ்ரீ மாரியம்மன் பல்வேறு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அதை தொடர்ந்து உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
பின்னர் தங்கத்தேரில் உற்சவர் மாரியம்மன் கொழுவிற்க செய்தனர். அதை தொடர்ந்து ஆலயத்தில் இருந்து மேல தாளங்கள் முழங்க ஸ்ரீ மாரியம்மன் தங்க தேரோட்டம் முக்கிய வீதியில் வழியாக வலம் வந்தனர். அதை தொடர்ந்து ஆலயத்தின் பூசாரி மாரியம்மன் தங்க தேரோட்டத்திற்கு மகா தீபாராதனை காட்டிய பிறகு, கார்த்திகை மாத பௌர்ணமி தங்க தேரோட்ட நிகழ்ச்சி மிக சிறப்பாக நிறைவு பெற்றது. பின்னால் கூடி இருந்து அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் ஏற்பாட்டை அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் ஆலய பரம்பரை அறங்காவலர் மற்றும் பணியாளர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
மேட்டுதெரு ஸ்ரீ அபய பிரதான ரங்கநாதசுவாமி ஆலயத்தில் கார்த்திகை மாத தீபத்திருநாள்.
கார்த்திகை தீபம் என்றாலே பல்வேறு ஆலயங்களில் மெகா தீபம் ஏத்தப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக கரூர் நகரப் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில் கார்த்திகை தீபத்திருநாள் விழா சிறப்பாக இன்று கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலயத்தில் உள்ள உற்சவர் அபய பிரதான ரங்கநாதர் சுவாமிக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதை தொடர்ந்து சுவாமிக்கு பட்டாளை உடுத்தி, வண்ண மாலைகள் அறிவித்த பிறகு, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
மேல தாளங்கள் முழங்க ஆலய மண்டபத்தில் இருந்து புறப்பட்ட அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலய வாசலில் வைக்கப்பட்டிருந்த கார்த்திகை மாத சொக்கப்பானை கொளுத்தும் இடத்திற்கு வந்தடைந்தார். அதை தொடர்ந்து சுவாமிக்கு ஆலயத்தின் பட்டாச்சாரியார் மகா தீபாரதனை காட்டிய பிறகு, சொக்கப்பானை கொளுத்தப்பட்டது.
பின்னர் மேளதாளங்கள் முழங்கு ஆலயத்தில் இருந்து புறப்பட்ட அபய பிரத ரங்கநாத சுவாமி மேட்டு தெரு, மக்கள் பாதை, மாரியம்மன் கோவில் வீதி, தேர் வீதி, ஐந்து ரோடு, ஜவகர் பஜார் உள்ளிட்ட பகுதியில் வழியாக சுவாமி பக்தர்களுக்கு திருவீதி உலா விழா காட்சியளித்த பிறகு ஆலயம் வந்தடைந்தார். ஆலயத்தில் நடைபெற்ற கார்த்திகை மாத தீபத்திருநாள் நிகழ்ச்சியில் காண ஏராளமான பக்தர்கள் ஆலய வருகை தந்தும் உற்சவர் திருவீதி விழாவை காண ஏராளமான பக்தர்கள் வழியெங்கிலும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.