வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக!
புத்தக வெளியீட்டு விழாவின் மூலம் நக்சல்வாதத்தை ஊக்கப்படுத்த புத்தக பதிப்பகத்தார் முயற்சிக்கிறார்களா?
அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட ஆனந்த் டெல்டும்டே ஒரு நகர்புற நக்சல் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”ஆனந்த் டெல்டும்டேவின் தம்பி மராட்டிய வனப்பகுதியில் நடந்த என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ஒரு நக்சல். புத்தக வெளியீட்டு விழாவின் மூலம் நக்சல்வாதத்தை ஊக்கப்படுத்த புத்தக பதிப்பகத்தார் முயற்சிக்கிறார்களா? ஆனந்த் டெல்டும்டே ஒரு நகர்புற நக்சல். விசிக யார் கையில் உள்ளது. ஆதவ் அர்ஜுனா மீது திருமாவளவன் நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்? திருமாவளவன் செல்லாத நிகழ்ச்சிக்கு அவரது கட்சியை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா சென்றது ஏன்? அம்பேத்கரை வைத்து வியாபாரம் நடைபெறுவதற்கு இந்த புத்தக வெளியீட்டு விழா ஒரு ஆதாரம். அம்பேத்கரை வைத்து தமிழகத்தில் அரசியல் செய்கிறார்கள். விசிகவுக்கு ஒரு தலைமையா? இரண்டு தலைமையா? அம்பேத்கர் புத்தகத்தை வெளியிட வேறு ஆட்களே இல்லையா?
லாட்டரி மார்ட்டினின் மறுமகன் கையில் விசிக உள்ளது. தவெக தலைவர் விஜயை அழைத்துக்கொண்டு மணிப்பூர் செல்லத் தயார். மணிப்பூர் விவகாரத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் பிரச்சினையை தீர்க்க மத்திய அரசு தீர்வு கண்டு வருகிறது. தமிழ்நாட்டில் பாஜகவை இந்துத்துவா கட்சி என்று சொன்னால் கிரிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் ஓட்டுகளை வாங்கலாம் என விஜய் நினைக்கிறார்.” எனத் தெரிவித்தார்.