மேலும் அறிய
Somavara Vratham 2024:கார்த்திகை மாத சோமவாரம் - வீட்டில் பூஜை செய்யும் வழிமுறைகள் தெரியுமா?
கார்த்திகை மாதத்தில் சோமவார திங்கள் கிழமைகளில் விரதம், வழிபாட்டு முறைகள் பற்றி இங்கே காணலாம்.
கார்த்திகை தீபம்
1/6

கார்த்திகை மாதத்தில் சிவபெருமான், விநாயகர், முருகன், ஐயப்பன் என பல தெய்வங்களுக்கும் உகந்தது என்று சொல்லப்படுகிறது. வாரத்தின் முதல் வேலைநாளான திங்கட்கிழமை சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நாள் ஆகும்.சிவபெருமானுக்கு உகந்த இந்த திங்கட்கிழமையை சோமவாரம் என்று கூறுவார்கள். சோமவாரத்தில் எப்போதும் சிவாலயங்களில் சிறப்பு பூஜைகளும், வழிபாடும் நடத்தப்படுவது வழக்கம் ஆகும்.
2/6

கார்த்திகை மாதத்தின் முதல் சோமவாரமான இன்று காலையிலே தலைக்கு குளித்துவிட வேண்டும். வீட்டில் உள்ள அகல் விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.வீட்டில் உள்ள சிவபெருமானின் படம், சிவ லிங்கத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.பூஜைக்காக எடுத்துக் கொள்ளப்படும் சிவன் படத்திற்கோ அல்லது சிவலிங்கத்திற்கோ வில்வ இலைகள் கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும்.
Published at : 21 Nov 2024 09:03 PM (IST)
மேலும் படிக்க





















