மேலும் அறிய

Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!

”தனக்கு கட்சியில் தனக்கு துணைத் தலைவர், அல்லது இணைப் பொதுச்செயலாளர் ஆகிய முக்கிய பொறுப்பு ஒன்று உருவாக்கித் தர வேண்டும் என்று ஆதவ் அர்ஜூனா விஜயிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது”

அரசியல் கருத்துகள் பேச வேண்டாம் என்று தான் சொல்லி அனுப்பியும் அதனை துளியும் கேட்காமல், விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில் திமுகவை சரமாரியாக தாக்கி பேசிய ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுக்க தயாராகிவிட்டார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.

திரும்ப, திரும்ப பேசுற நீ – கொதிக்கும் நிர்வாகிகள்

ஆதவ் அர்ஜூனாவின் வாய்ஸ் ஆஃப் காமன் நிறுவனமும் விகடன் குழுமமும் நடத்திய அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திமுக போடும் கூட்டணி கணக்குகளை மைனஸ் ஆக்குவோம் என்று பேசியதும், மன்னராட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என்று ஆதவ் அர்ஜூனா பேசியதும் திமுக தலைமையை கொதிப்பேற்றியுள்ளது.

திமுக கூட்டணிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஆதவ் அர்ஜூனா பேசக் கூடாது என்று அவருக்கு திருமாவளவன் ஏற்கனவே அறிவுறுத்திய நிலையிலும், இந்த நிகழ்ச்சியில் அரசியல் கருத்துகளை பேச வேண்டாம் என்று சொல்லி அனுப்பிய நிலையிலும், தலைமையின் பேச்சை கேட்காமல் தான் தோன்றிதனமாக ஆதவ் அர்ஜூனா மீண்டும், மீண்டும் திமுகவை விமர்சித்து பேசி வரும் நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் திருமாவளவனுக்கு உருவாகியிருக்கிறது.

ஏற்கனவே, பல முறை நேரடியாகவும் மறைமுகமாகவும் திமுகவையும் கூட்டணியையும் ஆதவ் அர்ஜூனா விமர்சித்து பேசிய நிலையில், அவரை கொஞ்சம் வாயை மூடி இருக்கச் சொல்லுங்கள் என்று விசிக நிர்வாகிகள் திருமாவளவன் மூலம் அறிவுறுத்தி வந்தனர். ஆனால், அதையெல்லாம் கேட்காமல் ,செவிடன் காதில் ஊதிய சங்கு மாதிரி, தன்னுடைய தனிப்பட்ட பிரபல்யத்திற்காகவும் சுய அரசியல் லாபத்திற்காகவும் ஆதவ் அர்ஜூனா செயல்படுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் திமுகவினர் கருதி, அவருக்கு எதிராக திருமா உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

நீக்கமா ? தற்காலிக நீக்கமா ? விரைவில் திருமா அறிவிப்பு

இந்நிலையில், ஆதவ் அர்ஜூனா பேசியது குறித்து விளக்கம் அளிக்கக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு அவர் என்ன விளக்கம் அளித்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற முடிவில் திருமாவளவன் இருப்பதால், விரைவில் ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் இருந்து நீக்கியோ அல்லது தற்காலிகமாக இடைநீக்கம் செய்து உத்தரவிட்டோ விரைவில் அறிவிப்பு வரும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் கட்சியில் ஐக்கியமாகும் ஆதவ் ?

தன் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் சென்று சேர ஆதவ் அர்ஜூனா முடிவு செய்திருப்பதாகவும், அந்த கட்சியில் தனக்கு துணைத் தலைவர், அல்லது இணைப் பொதுச்செயலாளர் ஆகிய முக்கிய பொறுப்பு ஒன்று உருவாக்கித் தர வேண்டும் என்று ஆதவ் அர்ஜூனா விஜயிடம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும், அதற்காக வரும் சட்டமன்ற தேர்தலில் தன்னுடைய அரசியல் வியூக வகுப்பு நிறுவனம் மூலம் தமிழக  வெற்றிக் கழகத்திற்காக பணியாற்ற தான் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.

அதே நேரத்தில் சமீபத்தில் ஒரு வார இதழில் விஜய் கட்சி பற்றி பாசிட்வான ஒரு சர்வே வெளியானது. இதனையும் ஆதவ் அர்ஜூனாவே வர வைத்து கொடுத்ததாகவும், மேலவளவில் சாதி கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வந்து விஜயை சந்திக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது.

I am a seasoned journalist with over 12 years of experience across the visual and digital media landscape. Throughout my career, I have taken up diverse editorial responsibilities—from content writing and ticker management to heading desk and assignment operations. My on-ground reporting includes in-depth coverage of political, cultural, and social affairs. I have had the opportunity to interview several influential figures from politics, arts, and public life. Known for delivering impactful exclusives, I was one of the first to break major stories like the TNPSC scam, cementing my commitment to responsible and fearless journalism.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

U19 WC Final: பயம் அறியா பாய்ஸ்.. U19 உலகக்கோப்பையை 6வது முறையாக வென்றது இந்தியா! 2 கே கிட்ஸ் அபாரம்!
U19 WC Final: பயம் அறியா பாய்ஸ்.. U19 உலகக்கோப்பையை 6வது முறையாக வென்றது இந்தியா! 2 கே கிட்ஸ் அபாரம்!
கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி விட்டதா ? பிரேமலதா விஜயகாந்த் அளித்த பதில்
கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி விட்டதா ? பிரேமலதா விஜயகாந்த் அளித்த பதில்
T20 WC 2026: டி20 உலகக்கோப்பைத் திருவிழா! கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விஷயமும் உள்ளே!
T20 WC 2026: டி20 உலகக்கோப்பைத் திருவிழா! கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விஷயமும் உள்ளே!
மதுரைக்கு மட்டுமில்ல... இது, தென் மாவட்டத்திற்கே இது குட் நியூஸ் - எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தீவிரம் !
மதுரைக்கு மட்டுமில்ல... இது, தென் மாவட்டத்திற்கே இது குட் நியூஸ் - எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தீவிரம் !
ABP Premium

வீடியோ

MK Stalin Angry | ஆப்சென்ட் ஆன அமைச்சர் டோஸ் விட்ட முதல்வர் பரபரப்பு வீடியோ | Minister Gandhi | DMK
Gold Price Drop Reason | மீண்டும் ஏறும் தங்கம் தலைகீழாய் மாற வாய்ப்பு பிப்ரவரியில் TWIST |Trump
US India | இந்தியா - அமெரிக்கா டீல்
Tirunelveli News | சமபந்தி விருந்தில் தீண்டாமை விரட்டப்பட்ட நரிக்குறவர் சிறுவர்கள் வெடித்த சர்ச்சை
US Trade Deal with India |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
U19 WC Final: பயம் அறியா பாய்ஸ்.. U19 உலகக்கோப்பையை 6வது முறையாக வென்றது இந்தியா! 2 கே கிட்ஸ் அபாரம்!
U19 WC Final: பயம் அறியா பாய்ஸ்.. U19 உலகக்கோப்பையை 6வது முறையாக வென்றது இந்தியா! 2 கே கிட்ஸ் அபாரம்!
கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி விட்டதா ? பிரேமலதா விஜயகாந்த் அளித்த பதில்
கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி விட்டதா ? பிரேமலதா விஜயகாந்த் அளித்த பதில்
T20 WC 2026: டி20 உலகக்கோப்பைத் திருவிழா! கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விஷயமும் உள்ளே!
T20 WC 2026: டி20 உலகக்கோப்பைத் திருவிழா! கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விஷயமும் உள்ளே!
மதுரைக்கு மட்டுமில்ல... இது, தென் மாவட்டத்திற்கே இது குட் நியூஸ் - எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தீவிரம் !
மதுரைக்கு மட்டுமில்ல... இது, தென் மாவட்டத்திற்கே இது குட் நியூஸ் - எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தீவிரம் !
சாலை விபத்துகளில் நாட்டிலே நம்பர் 1 தமிழ்நாடுதான் - இத்தனை ஆயிரம் மரணங்களா?
சாலை விபத்துகளில் நாட்டிலே நம்பர் 1 தமிழ்நாடுதான் - இத்தனை ஆயிரம் மரணங்களா?
Happy Rose Day 2026 Wishes: என் ரோஜா நீயா! காதலை மலர்களால் வெளிப்படுத்தும் நாள்! ரோஸ் டே வாழ்த்துகள்
Happy Rose Day 2026 Wishes: என் ரோஜா நீயா! காதலை மலர்களால் வெளிப்படுத்தும் நாள்! ரோஸ் டே வாழ்த்துகள்
இரட்டை இலக்கம் கேட்கும் தேமுதிக.. ஒத்த இலக்கத்துக்கே யோசிக்கும் திராவிட கட்சிகள் - என்ன செய்வார் பிரேமலதா?
இரட்டை இலக்கம் கேட்கும் தேமுதிக.. ஒத்த இலக்கத்துக்கே யோசிக்கும் திராவிட கட்சிகள் - என்ன செய்வார் பிரேமலதா?
IPS Officer Transfer : ‘லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புது எஸ்.பி’ சென்னையிலும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்..!
‘லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புது எஸ்.பி’ ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்..!
Embed widget