கரூரில் பல்வேறு ஆலயங்களில் நவராத்திரி விழா கோலாகலமாக தொடக்கம்
அனைவருக்கும் மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் ஏற்பாட்டை அருள்மிகு ஸ்ரீ வராகி அம்மன் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.
![கரூரில் பல்வேறு ஆலயங்களில் நவராத்திரி விழா கோலாகலமாக தொடக்கம் karur: first day program of navaratri festival in karur TNN கரூரில் பல்வேறு ஆலயங்களில் நவராத்திரி விழா கோலாகலமாக தொடக்கம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/27/dd1d852edaec0dc890adc3cd9ef9e1d81664281120314183_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கரூர் மாவட்டம், உழவர் சந்தை பிரம்ம தீர்த்தம் சாலையில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வராகி அம்மன் ஆலயத்தில் நவராத்திரி உற்சவ விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு வராகி அம்மனுக்கு என்னைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், குங்குமம், பன்னீர் உள்ளிட்ட சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்தனர். தொடர்ந்து அனைவருக்கும் மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் ஏற்பாட்டை அருள்மிகு ஸ்ரீ வராகி அம்மன் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.
கரூரில் நடைபெற்ற நவராத்திரி உற்சவ விழாவின் முதல் நாள் நிகழ்ச்சி
கரூர் தேர் வீதியில் குடிகொண்டு அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா சிறப்பாக தொடங்கியது. இதனை முன்னிட்டு ஸ்ரீ மாரியம்மனுக்கு சிறப்பான அலங்கார ஆராதனை செய்யப்பட்டது.
நவராத்திரி உற்சவ விழாவை முன்னிட்டு எல்என்வி பள்ளி மாணவ, மாணவிகளின் பக்தி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.
அதைத்தொடர்ந்து ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற நவராத்திரி முதல் நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் மஞ்சள், குங்குமம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நவராத்திரி விழாவின் முதல் நாள் உற்சவ விழாவை கண்டு களித்தனர். இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை உபயதாரர்கள் மற்றும் கோயில் சிவாச்சாரியர்கள், ஊழியர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி விழா கொண்டாட்டம்.
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்கார வள்ளி சௌந்தரனாகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரியை முன்னிட்டு முதல் நாள் நிகழ்ச்சியாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதில் பள்ளி மாணவ, மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் கொலு பொம்மைகளை பக்தர்கள் வழங்கிய நிகழ்ச்சியும் சிறப்பாக அமைந்தது.
மேலும் மேட்டு தெரு பகுதியில் உள்ள ஸ்ரீ அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்திலும் நவராத்திரி முதல் நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியைக் காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலய வருகை தந்து சிறப்பித்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)