கரூரில் உலக நன்மை வேண்டி ஸ்ரீ சீதா கல்யாண உற்சவ நிகழ்ச்சி
கரூரில் உலக நன்மை வேண்டி 22 ம் ஆண்டு நடைபெற்ற ஸ்ரீ சீதா கல்யாண உற்சவ நிகழ்ச்சி – பக்தர்கள் பங்கேற்று கடவுள் அருள்பெற்றனர்.
கரூரில் உலக நன்மை வேண்டி 22 ம் ஆண்டு நடைபெற்ற ஸ்ரீ சீதா கல்யாண உற்சவ நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று கடவுள் அருள்பெற்றனர்.
கரூர் மாநகரின் மையப்பகுதியில் வீற்று அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ பசுபதி ஐயப்பன் ஆலயத்தில் அமைந்துள்ள கரூர் ஸ்ரீ பசுபதீஸ்வரா ஐயப்பா சேவா சங்கத்தின் 36 ம் ஆண்டு விழா நிகழ்ச்சி கடந்த 26 ம் தேதி ஸ்ரீ நவசக்தி மஹா யாகம், ஸ்ரீ சத்திய நாராயண பூஜை, ஏக தின லட்சார்ச்சனை நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து மாபெரும் குத்துவிளக்கு பூஜையும் நிகழ்ந்து வரும் நிலையில், புத்தாண்டு தினத்தினையொட்டியும்,உலக நன்மை வேண்டியும், ஸ்ரீ சீதா கல்யாண உற்சவம் 22 ம் ஆண்டு விழா நிகழ்ச்சியாக நடைபெற்றது. கரூர் அருள்மிகு ஸ்ரீ பசுபதி ஆஞ்சநேயர் ஆலயத்தின் முன்புறம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கணபதி பூஜையுடன் நிகழ்ச்சி துவங்கி, தோடய மங்களம், குரு தியானங்கள், கீத கோவிந்தம் (அஷ்டபதி), மங்கள ஹாரதி, அஷ்டபதி தொடர்ச்சி நிகழ்ச்சிகளும், அதனை தொடர்ந்து உஞ்சவ்ருத்தி, சீர்க் கொண்டு வருதல், ஸ்ரீ சீதா கல்யாண வைபவம் ஆரம்பம் நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து சீதா கல்யாண உற்சவ நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ சீதா ராமர் அருள் பெற்றனர். உலக நன்மை வேண்டியும், புத்தாண்டு தினத்தினையொட்டி 22 ம் ஆண்டு ஸ்ரீ சீதா கல்யாண உற்சவ நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பெற்றனர்.
கரூர் பசுபதீஸ்வரர் ஐயப்பா ஆலயத்தில் 5 தேங்காய் 1 லட்சத்தி 25 ஆயிரம் ஏலம் எடுத்த பக்தர்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதீஸ்வரர் ஐயப்பன் ஆலயத்தில் பசுபதீஸ்வரர் ஐயப்பா சேவா சங்கம் 36 ஆம் ஆண்டு விழாவை ஒட்டி ஆலயத்தில் கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதில் நாள்தோறும் பல்வேறு பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று சுவாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது, திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காண்பிக்கப்பட்டு நெய் வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டது.
ஜயப்பா சுவாமிக்கு படைக்கப்பட்ட தேங்காய்யினை ஏலம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் சுவாமிக்கு படைக்கப்பட்ட தேங்காய் ஏலத்தில் பக்கதர்கள் கலந்து கொண்டனர் இதில் ஒரு தேங்காய் 32 ஆயிரம், ஒரு தேங்காய் 25 ஆயிரம் என மொத்தம் ஐந்து தேங்காய் ஏலம் போனது இதில் மொத்தம் 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு 5 தேங்காய் ஏலம் போனது. ஏலத்தை பார்ப்பதற்காகவே கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் ஆலயம் வருகை தந்தனர்.
சிவாலயங்களில் பிரசித்து பெற்றதும், புராணக் கோயில்களில் பெருமை கொண்டதும் ஆனால் அய்யர்மலை சிவாய சிவபுரீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா ஆறாம் தேதி நடைபெறுகிறது.
இந்த கோயிலில் எழுந்தருளிய நடராஜ பெருமாள் பேரழகு உடையவர் இவரது ஆருத்ர தரிசனக் காட்சி சிறப்பானது. சிதம்பரம் சென்று நடராஜரை தரிசிக்க இயலாதவர்கள், இங்கு வந்து தரிசித்து அதே பயனை பெறலாம் என்பது ஐதீகம். காலை 6 மணிக்கு மகா அபிஷேகம், மாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு சிறப்பு நாதஸ்வர கச்சேரிகளும், தேவார திருமுறை இன்னிசை கச்சேரிகளும் நடைபெறுகிறது .முதல் நாள் வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு மாணிக்கவாசகர் புறப்படும் இரவு 8 மணிக்கு சந்திரசேகரர் சுவாமி நூற்றாண்டு கால் மண்டபத்தில் ஊஞ்சல் நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு பிரச்சாரான மூர்த்தி நந்தவனம் அளித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதில் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான கலந்து கொள்வார்கள். இவ்விழாவில் காண ஏற்படுகளை இந்து அறநிலைத்துறை உதவி ஆணைய ஜெயதேவி செயல் அலுவலர் அனிதா மற்றும் உபயதாரர்கள் செய்து வருகிறார்கள்.