Kuthu Vilakku: நன்மை தரும் கார்த்திகை தீபம்! வாசலில் ஏற்றப்படும் குத்துவிளக்கின் அம்சங்கள் இத்தனையா?
கார்த்திகை தீபத்திருநாளன்று வீடுகளின் வாசல்களில் அகல் விளக்குகளுக்கு மத்தியில் குத்துவிளக்கேற்றி வழிபடுவது வழக்கம் ஆகும்.
தமிழ் மாதங்களில் அதிகளவு பக்தர்களுக்கு மிகவும் முக்கியமான மாதங்களில் ஒன்று கார்த்திகை மாதம் ஆகும். கார்த்திகை மாதம் வந்தாலே ஐயப்பனுக்கும், முருகனுக்கும் மாலை அணிந்து பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.
கார்த்திகை தீபம்:
அதேபோல, கார்த்திகை மாதத்தில் வரும் மிகவும் முக்கியமான பண்டிகையில் திருக்கார்த்திகை தீபம் ஆகும். இந்த நாளில் உலகப்பிரிசித்தி பெற்ற திருவண்ணாமலை கோயிலில் ஏற்றப்படும் மகாதீபத்தை காண குவிவது கூடுதல் சிறப்பாகும். நடப்பாண்டிற்கான திருக்கார்த்திகை தீபம் வரும் 26-ம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. கார்த்திகை தீப தினத்தில் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் அகல் விளக்குகளில் ஏற்றி வீட்டையே ஜோதியால் ஒளிரவைப்பது வழக்கம்.
குத்து விளக்கின் அம்சம்:
திருக்கார்த்திகையன்று பலரும் வீட்டின் வாசலில் இடப்பட்டுள்ள கோலத்தின் நடுவே குத்துவிளக்கேற்றுவது வழக்கம். குத்து விளக்கு என்றாலே அது நல்ல சகுணத்தின் அம்சமாகும். பொதுவாக, குத்து விளக்கில் மும்மூர்த்திகளும் வாசம் செய்வதாக நம்பப்படுகிறது.
அதாவது, குத்து விளக்கின் அடிப்பாகத்தில் படைக்கும் கடவுளான பிரம்மாவும், தண்டு பாகத்தில் அதாவது நடுபாகத்தில் மகாவிஷ்ணுவும், மேலே அதாவது எண்ணெய் ஊற்றும் இடத்தில் அனைத்திற்கும் ஆதியான சிவபெருமானும் வாசம் செய்வதாக கருதப்படுகிறது.
மும்மூர்த்திகளும் வாசம் செய்வதே தனிச்சிறப்பாக கருதப்படுகிறது. இதற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக குத்து விளக்கின் சுடரில் அதாவது ஜோதியில் துர்காதேவி, லட்சுமி தேவி, சரஸ்வதி ஒரு சேர அம்சமாக உறைவதாகவும் புராணங்கள் கூறுகிறது.
சகல நன்மைகள்:
மங்கள திருநாளான கார்த்திகை தீபம் தினத்தில் வீட்டில் குத்து விளக்கு ஏற்றுவதற்கு முன்பு, அந்த குத்துவிளக்கை நன்றாக கழுவி, சுத்தம் செய்திருக்க வேண்டும். வீட்டில் குத்துவிளக்கு ஏற்றி வழிபடுவதால் சகல நன்மைகளும், மகாலட்சுமியின் அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம் ஆகும்.
மேலும் படிக்க: Vijay Political Entry: விஜய் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? விஜயின் ஜோதிட கட்டங்கள் சொல்வது என்ன?
மேலும் படிக்க: Sabarimala Temple: உலகப்புகழ் பெற்ற சபரிமலை கோயில்.. முக்கிய விஷேசங்கள் எப்போது? பிரத்யேக தகவல் உங்களுக்காக!