மேலும் அறிய

Kanda Sashti Viratham: முருகனை வணங்கினால் தீராத நோய்கள் தீரும்... சஷ்டி விரத காலம்.. கந்தசஷ்டி விரதமும், பலனும்!

Kanda Sashti Viratham 2023 in Tamil: கந்த சஷ்டி விரதம் இருந்து முருகனை வணங்கினால் தீராத நோய்கள் தீரும். திருமண பாக்கியம் கை கூடி வரும் புத்திரபாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

Kanda Sashti Viratham: கந்த சஷ்டி விரதமிருந்து இவ்வாறு முருகனை வழிபட்டால் வீட்டின் கஷ்டங்கள் நீங்கி இன்பம் செழிக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும் என்று காலம் காலமாக பக்தர்கள் நம்பிக்கையுடன் கந்த சஷ்டி விரதம்  இருக்கின்றனர். சஷ்டி விரத பலன்கள் சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள், முருகனுக்கு உகந்த சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும். எனவேதான் குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும்  சிறந்த விரதமாகும்.
 
குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைபிடிக்கலாம் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. கந்த சஷ்டி விரத மகிமை கந்த சஷ்டி விரதத்தை பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் குழந்தைகளும் அனுஷ்டிக்கின்றனர். மாணவர்கள் கல்விக்காகவும், திருமணமான பெண்கள் குடும்ப நன்மைக்காகவும் குழந்தை வரம் வேண்டியும், கன்னிப்பெண்கள் திருமண வரம் வேண்டியும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கின்றனர். இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா திருச்செந்தூர் உள்ளிட்ட முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் திருத்தணி படைவீடு தவிர பிற படைவீடுகளுள் துவங்க உள்ளது.

Kanda Sashti Viratham: முருகனை வணங்கினால்  தீராத நோய்கள் தீரும்... சஷ்டி விரத காலம்.. கந்தசஷ்டி விரதமும், பலனும்!
 
கந்த சஷ்டி விரதம் பலன்கள்  (Kanda Sashti Viratham Benefits in Tamil)

கந்த சஷ்டி விரதமிருந்து இவ்வாறு முருகனை வழிபட்டால் வீட்டின் கஷ்டங்கள் நீங்கி இன்பம் செழிக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும் என்று காலம் காலமாக பக்தர்கள் நம்பிக்கையுடன் கந்த சஷ்டி விரதம்  இருக்கின்றனர். இந்த விரதம் உண்ணாமல் இருக்க வேண்டும். கடுமையாக விரதம் இருப்பவர்கள் 7 நாள் விரதத்தில் மிளகு விரதம் கடைபிடிப்பார்கள். முதல் நாள் ஒரு மிளகு, இரண்டாம் நாளில் இரண்டு மிளகு, என ஏழு நாட்கள் மிளகு உண்டு விரதம் இருப்பவர்கள் உண்டு. இளநீர் மட்டும் எடுத்து கொள்வது, பாலும் பழமும் மட்டும் எடுத்துக்கொள்வது, கீரை உணவு வகைகள் மட்டும் எடுத்து கொள்வது, சிலர் ஒரு வேளை உணவு உண்டு விரதமும், சிலர் காலை தவித்து மீதமுள்ள இரண்டு வேலைகள் உண்டும் விரதம் இருப்பார்கள்.
 
அவரவர் ஆரோக்கியத்தை பொறுத்து விரத முறையை தேர்ந்து எடுத்து கொள்வார்கள். இந்த விரதத்தில் தண்ணீர் அருந்துவது தோஷம் இல்லை. போதுமான அளவு தண்ணீர் எடுத்து கொள்ளலாம். பகலில் தூங்குவதை தவிர்ப்பது நலம். பருத்தி ஆடைகள், பச்சை மற்றும் காவி நிற ஆடைகளை விரத காலத்தில் உடுத்தி கொள்ளலாம்.

Kanda Sashti Viratham: முருகனை வணங்கினால்  தீராத நோய்கள் தீரும்... சஷ்டி விரத காலம்.. கந்தசஷ்டி விரதமும், பலனும்!
 
கந்த சஷ்டி விரதம் இருந்து முருகனை வணங்கினால் தீராத நோய்கள் தீரும் திருமண பாக்கியம் கை கூடி வரும் புத்திரபாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் பிரதமை தொடங்கி சஷ்டி வரை ஆறு நாட்களும் உமிழ் நீரும் உள்ளே விழுங்காதவாறு நோன்பிருந்து கந்த சஷ்டி விரதம் கடைபிடிக்க வேண்டும். விரதம் இருப்பவர்கள் மறந்தும் கூட சில தவறுகளை செய்யக்கூடாது.
 
சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை சுப்ரமணியருக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை என்பார்கள். நம் வாழ்க்கையில் எவ்வளவு துன்பங்கள் இருந்தாலும் அவைகள் யாவும் நொடியில் நீங்கி, பகைவர்கள் ஒழிந்து முன்னேற்றம் உண்டாக, தன்னம்பிக்கை அதிகரிக்க சஷ்டி விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்க வேண்டும். உயிர் உணர்ச்சி வளர்க்கும் விரதம் இது. எனவே உப்பு நீர், எலுமிச்சம் பழச்சாறு, நாரத்தம் பழச்சாறு, இளநீர் முதலியவற்றை கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் அருந்தக்கூடாது.
 
கந்தசஷ்டி தினம் முதல் சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான சைவ உணவினை, குறைந்த அளவில் உட்கொண்டு எப்போதும் முருகனின் சிந்தனையிலேயே விரதம் இருப்பது அவசியம். கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் மதியம் உச்சிவேளையில் ஒருபொழுது மட்டும் பச்சரிசி உணவு தயிர் சேர்த்து உண்ண வேண்டும். காலை மற்றும் இரவில் பால், பழங்கள் மட்டும் சாப்பிடலாம். ஆனால், வயோதிகர்கள், நோயாளிகள் ஆகியோர் விரதத்தின் போது அவரவர் உடல் நிலைக்கு தக்கபடி நடந்து கொள்ள விதிவிலக்கு உண்டு.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
Orange Alert: இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
சென்னையில் மழைநீர் தேக்கம்: மக்களின் துயரத்திற்கு இவர்கள்தான் காரணம் - விஜயின் அதிரடி பதிவு
சென்னையில் மழைநீர் தேக்கம்: மக்களின் துயரத்திற்கு இவர்கள்தான் காரணம் - விஜயின் அதிரடி பதிவு
OPS met Amit Shah: அமித்ஷாவை தனியாக சந்தித்த ஓபிஎஸ்.! இது தான் காரணமா.? வெளியான ரகசிய தகவல்
அமித்ஷாவை தனியாக சந்தித்த ஓபிஎஸ்.! இது தான் காரணமா.? வெளியான ரகசிய தகவல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சென்னையில் மழை தாண்டவாம் டிட்வாவின் LATEST UPDATE எப்போது மழை நிற்கும்? | TN Rain Ditwah Cyclone
திண்டுக்கல் வந்த தனுஷ் சூழ்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் SPOT-க்கு ஓடோடி வந்த போலீஸ் | Dhanush
AKS Vijayan House Theft | திமுக பிரமுகர் வீட்டில்300 சவரன் கொள்ளை?தஞ்சையில் பரபரப்பு | Tanjore
சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
Orange Alert: இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
சென்னையில் மழைநீர் தேக்கம்: மக்களின் துயரத்திற்கு இவர்கள்தான் காரணம் - விஜயின் அதிரடி பதிவு
சென்னையில் மழைநீர் தேக்கம்: மக்களின் துயரத்திற்கு இவர்கள்தான் காரணம் - விஜயின் அதிரடி பதிவு
OPS met Amit Shah: அமித்ஷாவை தனியாக சந்தித்த ஓபிஎஸ்.! இது தான் காரணமா.? வெளியான ரகசிய தகவல்
அமித்ஷாவை தனியாக சந்தித்த ஓபிஎஸ்.! இது தான் காரணமா.? வெளியான ரகசிய தகவல்
Wonderla Chennai: ரூ.611 கோடிய கொட்டி என்ன பலன்? முதல் நாளே மட்டையான சென்னை வொண்டர்லா - கடுப்பான மக்கள்
Wonderla Chennai: ரூ.611 கோடிய கொட்டி என்ன பலன்? முதல் நாளே மட்டையான சென்னை வொண்டர்லா - கடுப்பான மக்கள்
Honda: ஸ்கூட்டர் சந்தையை ஆளும் ஹோண்டா.. ஆக்டிவாவின் ஆதிக்கம், இளசுகளை அள்ளும் டியோ - மொத்த மாடல்கள்
Honda: ஸ்கூட்டர் சந்தையை ஆளும் ஹோண்டா.. ஆக்டிவாவின் ஆதிக்கம், இளசுகளை அள்ளும் டியோ - மொத்த மாடல்கள்
Heavy Rain: சென்னை, திருவள்ளூரை நொறுக்கிய டிட்வா.! இன்றும், நாளையும் என்ன நடக்கும்- வெதர்மேன் எச்சரிக்கை
சென்னை, திருவள்ளூரை நொறுக்கிய டிட்வா.! இன்றும், நாளையும் என்ன நடக்கும்- வெதர்மேன் எச்சரிக்கை
Electric Car Sales: EV கார்களுக்கு என்னாச்சு? சரிந்த விற்பனை, தடுமாறும் டாடா, MG, மஹிந்த்ரா - ஹிட் லிஸ்டில் கியா
Electric Car Sales: EV கார்களுக்கு என்னாச்சு? சரிந்த விற்பனை, தடுமாறும் டாடா, MG, மஹிந்த்ரா - ஹிட் லிஸ்டில் கியா
Embed widget