மேலும் அறிய

Easter 2023: ஈஸ்டர் திருநாள் பண்டிகை..! ஈஸ்டர் முட்டையின் முக்கியத்துவம், தத்துவம் என்ன தெரியுமா..?

Easter 2023: ஈஸ்டர் திருநாளின் முக்கியத்துவம் குறித்து விவரங்களை இங்கே காணலாம்.

உலகம் முழுவதும் கிறிஸ்துவர்களால் ஈஸ்டர் திருநாள் கொண்டாடப்படுகிறது. சிறப்பு நாளில் தேவாலயங்களில் பிரார்த்தனை நடத்தப்படும். முட்டை வடிவிலான சாக்லெட்கள், முயல் உருவத்திலான சாக்லெட்கள் உள்ளிட்ட இனிப்புகளை அனைவரும் பகிர்ந்துகொள்வர்.

ஈஸ்டர் திருநாளுடன் முட்டை மற்றும் முயலுக்கு என்ன தொடர்பு இருக்கிறது என்பதை காணலாம். 19 ஆம் நூற்றாண்டிற்கு பிறகே இந்த நடைமுறை தொடங்கியது. ஈஸ்டர் திருநாள் வரும் நாளை (09.04.2023) கொண்டாடப்படுகிறது.

ஈஸ்டர் முட்டை:

ஈஸ்டர் திருநாளன்று முயல்கள் நல்ல எண்ணங்கள் உள்ளவர்களுக்கு சாக்லெட் வழங்கும் என்று நம்பப்படுகிறது. கிறிஸ்துமஸ் நேரத்த்தில் சாண்டா க்ளாஸ் அனைவருக்கும் பரிசுகளைத் தருவதுபோல, முயல்களும் என்று நம்பப்படுகிறது. 

புனித வெள்ளி முக்கியத்துவம்:

கிறிஸ்தவர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவைகளுள் ஒன்று புனித வெள்ளி. இயேசு கிறிஸ்து மக்களின் முன்னேற்றத்திற்காக தனது வாழ்க்கையை தியாகம் செய்தார் என்று நம்பப்படுகிறது. பின்னர் அவர்கள் இரட்சிப்பின் பாதையில் செல்ல முடியும். எனவே, கிறிஸ்து செய்த தியாகங்களை நினைவுகூரும் நாளாக புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. இந்த புனிதமான தினத்தில் மக்கள் தாங்கள் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கேட்கிறார்கள். கிறித்துவ ஆலயங்களில் பிரார்த்தனை செய்வர்.

ஈஸ்டர் திருநாள்

கிறிஸ்துவர்களுக்கு இயேசு பிறந்த மாதமான டிசம்பர் மட்டுமே முக்கியமான பண்டிகை இல்லை. அதற்கு அடுத்தப்படியாக பைபிளின் புதிய ஏற்பாட்டின் படி கி.பி 30- இல் இயேசு கிறிஸ்து ரோமானியர்களால் சிலுவையில் அறையப்பட்டு இறந்து, மூன்று நாட்களுக்குப் பிறகு  உயிர்த்தெழுந்த நாளாக ஈஸ்டர்  கொண்டாடப்படுகிறது. இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்தினம் இரவு அவருடைய சீடர்களுடன் பஸ்கா உணவை பகிர்ந்து கொண்ட தினம் "பரிசுத்த வியாழன்" அதாவது மான்டி வியாழன் (Maundy Thursday) நினைவு கூறப்படுகிறது.

புனிதவெள்ளியன்று சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்து பிறகு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். அதற்கு முன்னரே தன் சீடர்களிடம் நான் மரித்த பின் மீண்டும் உயிர்த்தெழுவேன் என்று இயேசு குறிப்பிட்டிருக்கிறார்.

இந்நிகழ்வு ‘Passion of Christ’, மற்றும் ‘ Passover’ என்றழைக்கப்படுகிறது. ஈஸ்டர் பண்டிகை, மக்கள் செய்த பாவங்களுக்காக, இயேசு தண்டனையை ஏற்றுக் கொண்டதாகவும், மனித குலம் வளர இயேசு தியாகம் செய்ததாகவும் கூறப்படுகிறது. அதாவது, இயேசு தன்னை வருத்திக் கொண்டு, இம்மானுடம் செழிக்க தன் வாழ்வையே அற்பணித்தார். மரணத்தை வென்ற இயேசுவை கொண்டாடும் தினமாக ஈஸ்டர் அமைந்திருக்கிறது.

ஈஸ்டர் முட்டை கூறும் தத்துவம் என்ன?

  • மூடிய கல்லறை திறந்து, வான் முழங்க, இடி, மின்னலுடன் மழை பெய்தது. இன்றைய நாளில் இயேசு பிரான் உயிர்தெழுந்தார். அதுவே `ஈஸ்டர் திருநாள்' (Easter).
  • பாவத்தை அழித்திட, பூமியில் நிலவும் இருள் விலக்கிட, சாவை வென்று இயேசு உயிர்த்தெழுந்த நாள் `பாஸ்கா பண்டிகை' (Pascha) என்றும் அழைக்கப்படுகிறது.
  • `பாஸ்கா' என்றால் `கடந்து போதல்' என்று பொருள். சாவைக் கடந்து, இயேசு உயிர் பெற்றார் என்பதால்`பாஸ்கா பண்டிகை' எனக் கொண்டாடப்படுகிறது.
  • ஈஸ்டர் சொல்லும் செய்தி என்னவென்றால், ’இயேசு உயிர்த்தெழுந்ததுபோல, நாமும் அவரோடு ஒன்றி உயிர்த்தெழுவோம். நம் பாவங்களை விட்டொழிப்போம். புதிய நல்வாழ்விற்கு தயாராவோம்.’ என்பதுதான்.
  • நம்மை பாவங்களில் இருந்து ரட்சிக்கும் இயேசுவின், துன்பங்களிலும், மரணத்திலும் உயிர்ப்பிலும் பங்குபெறுவோம்.
  • சாவு வீழ்ந்தது, வெற்றி கிடைத்தது’ (1 கொரி. 15:54) என்கிறது பைபிள்.
  • `ஈஸ்டர் திருவிழா' என்றவுடன் `ஈஸ்டர் முட்டை' நமக்கு நினைவுக்கு வரும்.  உலக அளவில், `ஈஸ்டர் முட்டை' என்ற பெயரில் பல வண்ணங்களில் சாக்லேட், கேக் தயார் செய்து, அதைப் பிறருடன் பகிர்ந்துகொள்வார்கள்.
  • முட்டை என்பது இரு பிறப்பு அல்லது மறுபிறப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. எனவேதான் நமது பழைய வாழ்க்கையில் இருந்து, புதிய வாழ்க்கைக்கு மாறுவது புதுப்பிறப்பின் ஈஸ்டர் திருநாளின் அர்த்தத்தைத் தரக்கூடியதாக அமைகிறது. அதாவது, கோழியின் முட்டையில் இருந்து ஒரு உயிர் வெளிவருகிறது. கோழியிடமிருந்து முட்டை வருவம் நிகழ்வையும் குறிக்கிறது.
  • சாவை வென்று என்றும் நம்மை ரட்சிக்கும் இயேசு பிரான் உயிர்தெழுந்த தினமே ஈஸ்டர் பண்டிகை.

 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

திருப்பரங்குன்றம் வேல் விழா: மலை அன்னதான நடைமுறை தொடர உயர்நீதிமன்றம் உத்தரவு!
திருப்பரங்குன்றம் வேல் விழா: மலை அன்னதான நடைமுறை தொடர உயர்நீதிமன்றம் உத்தரவு!
புனிதப் பயணம் செல்வோர் கவனத்திற்கு: தமிழ்நாடு அரசின் ரூ.37,000 மானியம் பெற ரெடியா?
புனிதப் பயணம் செல்வோர் கவனத்திற்கு: தமிழ்நாடு அரசின் ரூ.37,000 மானியம் பெற ரெடியா?
Tirupati Temple: திருப்பதி கோவில் புதிய சாதனை.. 9 மாதங்களில் எத்தனை கோடி உண்டியல் வருமானம் தெரியுமா? வாய்ப்பிளக்கும் பக்தர்கள்!
Tirupati Temple: திருப்பதி கோவில் புதிய சாதனை.. 9 மாதங்களில் எத்தனை கோடி உண்டியல் வருமானம் தெரியுமா? வாய்ப்பிளக்கும் பக்தர்கள்!
திருப்பதி செல்வோருக்கு சூப்பர் நியூஸ்! பெருமாள் தரிசனத்திற்கு ரெடியா? உடனே புக் பண்ணுங்க!
திருப்பதி செல்வோருக்கு சூப்பர் நியூஸ்! பெருமாள் தரிசனத்திற்கு ரெடியா? உடனே புக் பண்ணுங்க!

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Embed widget