Christmas 2025: இந்த நாடுகளில் டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் கிடையாது தெரியுமா?
டிசம்பர் மாதம் வந்து விட்டாலே கிறிஸ்தவ மக்கள் தங்கள் இல்லங்களிலும்,தேவாலயங்களிலும் ஸ்டார், குடில் போன்ற அலங்காரங்கள் செய்யப்படும்.

கிறிஸ்துமஸ் பண்டிகை மத வேற்றுமைகளை கடந்து அனைவராலும் கொண்டாடப்படும் அற்புதமான பண்டிகையாகும். உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் டிசம்பர் 25 ஆம் தேதி இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடுகிறார்கள்.
இந்து மதத்தில் திதி அடிப்படையிலும், இஸ்லாம் மதத்தில் பிறை அடிப்படையிலும் பண்டிகைகள் கொண்டாடப்படும். ஆனால் கிறிஸ்துமஸ் பண்டிகை எல்லா வருடமும் டிசம்பர் 25 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. டிசம்பர் மாதம் வந்து விட்டாலே கிறிஸ்தவ மக்கள் தங்கள் இல்லங்களிலும்,தேவாலயங்களிலும் ஸ்டார், குடில் போன்ற அலங்காரங்கள் செய்யப்படும். இப்படியான கிறிஸ்துமஸ் பண்டிகை சில நாடுகளில் டிசம்பர் 25 ஆம் தேதி அல்லாமல் வேறு நாளில் கொண்டாடப்படுகிறது.
அந்த நாடுகள் பற்றி காணலாம்.
டிசம்பர் 25 ஆம் தேதி கொண்டாடாத நாடுகள்
கிழக்கு மரபுவழி நாடுகள் டிசம்பர் 25 அன்று இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடுவதில்லை.
அதாவது, ரஷ்யா, உக்ரைன் - சில பகுதிகள், செர்பியா, ஜார்ஜியா, பெலாரஸ், மால்டோவா, மொண்டெனேகுரோ, வடக்கு மாசிடோனியா, எத்தியோப்பியா, எரித்திரியா, எகிப்து - காப்டிக் கிறிஸ்தவர்கள் ஆகிய இடங்கள் இதில் அடங்கும்.
Peace, prayers, and Christmas magic at Edappally Church 🎄✨
— Nithin K L (@nithinkl_) December 24, 2025
Grateful for this beautiful Christmas Eve. #HappyChristmas #ChristmasEve #EdappallyChurch #ChristmasVibes #SilentNight #FaithAndGrace #KochiChristmas #FestivalOfLove #Blessed #christmasjoyday pic.twitter.com/oucZ88eG4I
இந்த நாடுகள் இன்னும் ஜூலியன் நாட்காட்டியைப் பின்பற்றுகின்றன. இந்தக் காரணத்தினால் தான், டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துவின் பிறந்த நாளாகக் கொண்டாடப்படுவதில்லை. நம்முடைய நாட்காட்டியில் டிசம்பர் 25 ஆம் தேதி காட்டும் கிறிஸ்து பிறப்பு, அவர்கள் பின்பற்றும் ஜூலியன் நாட்காட்டியின்படி ஜனவரி 7 ஆம் தேதி ஆகும். இந்தக் காரணத்திற்காக, இந்த நாடுகளில் உள்ள கிறிஸ்தவர்கள் ஜனவரி 7 ஆம் தேதி இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்கள்.
ஆர்மீனியாவின் மற்றொரு சிறப்பு அம்சம்
அதேசமயம் ஆர்மீனியா நாட்டில் இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை நாட்காட்டியின்படி இல்லாமல் அவர்களின் பழைய மரபுகளின்படி வித்தியாசமாகக் கொண்டாடுகிறார்கள். உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் டிசம்பர் 25 அன்று இந்தப் பண்டிகையைக் கொண்டாடினாலும், சிலர் ஜூலியன் நாட்காட்டியின்படி ஜனவரி 7 அன்று கொண்டாடுகிறார்கள். இந்த ஆர்மீனிய கிறிஸ்தவர்கள் ஜனவரி 6 அன்று கிறிஸ்துமஸைக் கொண்டாடுகிறார்கள். ஜனவரி 6 அன்று இயேசுவின் பிறப்பு மற்றும் அவரது ஞானஸ்நானத்தை ஒரே நாளில் கொண்டாடுவது வழக்கமாகும்.





















