மேலும் அறிய
Advertisement
குமாரசாமி பேட்டை அங்காளபரமேஸ்வரி அம்மன் மயான கொள்ளை விழா; தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
பெண்கள், ஆண்கள் என ஏராளமான பக்தர்கள் தீக்குண்டத்தல் இறங்கினர். பின்னர் அக்னி குண்டத்தில் பக்தர்கள் உப்பு மிளகு உள்ளிட்டவற்றை போட்டு நேர்த்திக்கடனை செலுத்தினர்.
தருமபுரி குமாரசாமி பேட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் மயான கொள்ளை திருவிழாவை முன்னிட்டு பூமிதி விழா இன்று நடைபெற்றது.
தருமபுரி குமாரசாமி பேட்டையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை பெருவிழா ஆண்டு தோறும் மாசி மாதம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் நேற்று 6 ம் தேதி கொடி ஏற்றத்துடன் திருவிழா துவங்கியது. பின்னர் ஸ்ரீ மகா கணபதி, சுப்ரமணியர், அம்மனுக்கு சிறப்பு யாகங்கள் நடைந்தது. அதனைதொடர்ந்து இன்று சக்தி சக்தி கரகம் அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது இதனை தொடர்ந்து குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணியசாமி மைதானத்தில் பூ மிதி விழா நடைபெற்றது முதலில் சக்தி கரகத்துடன் பூசாரி அக்னி குண்டத்தில் இறங்கினார் அதனைத் தொடர்ந்து பெண்கள், ஆண்கள் என ஏராளமான பக்தர்கள் தீக்குண்டத்தல் இறங்கினர். பின்னர் அக்னி குண்டத்தில் பக்தர்கள் உப்பு மிளகு உள்ளிட்டவற்றை போட்டு நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து சக்தி கரகத்துடன் பூசாரியை கோயில் கருவறைக்கு அழைத்துச் சென்றனர் அப்போது பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்தும் வகையில் கோயிலுக்கு முன்பு தரையில் நீண்ட வரிசையில் படுத்தனர். சக்தி கரகம் எடுத்து வந்த பூசாரி தரையில் படுத்து இருந்த பக்தர்கள் மீது ஏரி மிதித்தவாறு சென்றார். . இதனை அடுத்து ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு தீபா ஆராதனை நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
ஆட்டோ
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion