வறண்டு போன காவிரி; தர்ப்பணம் கொடுக்க முடியாமல் தவித்த பக்தர்கள் - மயிலாடுதுறையில் அவலம்
மஹாளய அமாவாசையை முன்னிட்டு புகழ்பெற்ற மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் அளித்து வழிபாடு செய்தனர்.
![வறண்டு போன காவிரி; தர்ப்பணம் கொடுக்க முடியாமல் தவித்த பக்தர்கள் - மயிலாடுதுறையில் அவலம் Devotees suffer in Mahalaya Amavasi Mayiladuthurai no water in cauvery river வறண்டு போன காவிரி; தர்ப்பணம் கொடுக்க முடியாமல் தவித்த பக்தர்கள் - மயிலாடுதுறையில் அவலம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/14/331a21a192b79792533ad0013ef28c041697271076706733_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மஹாளய அமாவாசை சிறப்பு வாய்ந்தது. ஆடி மற்றும் தை அமாவாசைகளில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்காதவர்கள் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மஹாளய அமாவாசையில், தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம் என்பது ஐதீகம். மேலும், மஹாளய அமாவாசையான இன்று தர்ப்பணம் அளிப்பதன் மூலம் குடும்பத்தில் மறைந்த ஏழு தலைமுறைகளுக்கு தர்ப்பணம் வழங்கப்படுவதாக இந்துக்களின் நம்பிக்கை ஆகும்.
புகழ்பெற்ற காவிரி துலா கட்டம்:
அதனைத் தொடர்ந்து மஹாளய அமாவாசைமான இன்று புண்ணிய நதிகள், குளங்கள், கடற்கரை உள்ளிட்ட புண்ணியம் நீர் நிலைகளில் பக்தர்கள் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து பலிகர்ம பூஜைகள் செய்வது வழக்கம், அதன்படி மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் பதினாறு தீர்த்த கிணறுகளுடன் அமைந்துள்ள உலகப் புகழ் பெற்ற காவிரி துலா கட்ட ரிஷப தீர்த்தம் விளங்குகிறது. இங்கு கங்கை உள்ளிட்ட புண்ணிய நதிகள் நீராடி தங்கள் பாவங்களை போக்கிக் கொண்டதாக ஐதீகம். மேலும் பார்வதி தேவி நீராடி மயில் உறவில் இருந்து பழைய நிலைக்கு பாவ விமோசனம் அடைந்ததாக கோயில் வரலாறு கூறுகிறது.
வறண்டு போன காவிரி:
இத்தகைய பல்வேறு சிறப்புமிக்க காவிரி துலாக்கட்டத்தில் மஹாலயா அமாவாசையை முன்னிட்டு காவிரி ஆற்றின் கரையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் காலையிலிருந்து முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜைகள் செய்து தர்ப்பணம் அளித்து வழிபாடு செய்து வருகின்றனர். தர்ப்பணம் செய்த பொருட்களை புனித நீரில் விட வேண்டும் என்பது ஐதீகம் இந்நிலையில் காவிரி ஆறு வறண்டு காணப்படுவதால் பக்தர்கள் பூஜை செய்யப்பட்ட பொருட்களை ஆற்றில் கரைக்க முடியாமல் ஆற்றின் உள்ளே இறங்கி வெறும் தரையில் பொருட்களை வைத்து வணங்கி செல்கின்றனர். இதனால் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
பக்தர்கள் வேதனை:
2017 -ஆம் ஆண்டு காவிரி ஆற்றில் நடைபெற்ற புஷ்கரத்தை முன்னிட்டு கட்டப்பட்ட புஷ்கர தொட்டியில் போர்வெல் தண்ணி மூலம் தண்ணீர் விட முன் எச்சரிக்கை நடவடிக்கை நகராட்சி எடுத்திருந்தால் பக்தர்கள் ஏமாற்றம் இன்றி வழிபாடு செய்திருப்போம் என பொதுமக்கள் ஆதங்கம் தெரிவித்தனர். இதேபோன்று மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த புகழ்பெற்ற பூம்புகார் காவிரி சங்கமத்தில் மஹாளயா அமாவாசையை முன்னிட்டு காவிரி ஆற்றின் கரையில் ஏராளமான பொதுமக்கள் காலையிலிருந்து முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜைகள் செய்து தர்ப்பணம் அளித்து வழிபாடு செய்து வருகின்றனர்.
ferry service: இலங்கைக்கு 3 மணி நேரத்தில் பயணம்; கப்பல் போக்குவரத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி
காவிரி கடலில் சங்கமிக்கும் இடத்தில் நீராடினர். காவிரி ஆற்றில் நீர்வரத்து இல்லாததால் வழக்கத்தைவிட குறைந்த அளவிலான பொதுமக்களே வருகை தந்து மஹாளயா அமாவாசை முன்னிட்டு கடலில் புனித நீராடினர்.
Job Alert: டிகிரி படித்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் - வேலைவாய்ப்பு குறித்த முழு விவரம்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)