சிங்கப்பெருமாள் கோயில் கருட சேவை..! " கோவிந்தா கோவிந்தா " எனும் முழக்கமிட்ட பக்தர்கள் ..!
Garuda Sevai: மஞ்சள் நிற பட்டு உடுத்தி, வாசனை பூக்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பாடலாத்திரி நரசிங்கப்பெருமாள் கோயில் (Padalathiri Narasimma Perumal Temple )
"கோவிந்தா கோவிந்தா "
வைகாசி மாத பிரமோற்சவ விழா 2024 - Vaikasi Brahmotsavam 2024
வைகாசி 03 தேதி (16 -05 -2024): காலை சேஷ வாகன உற்சவம் நடைபெறுகிறது. காலை வேளையில் தொடர்ந்து ஏகாந்த சேவை நடைபெறுகிறது. பகல் வேளையில் விசேஷ திருமஞ்சனம் நடைபெறுகிறது. மாலை வேளையில் சந்திர பிரபை உற்சவம் நடைபெறுகிறது.
வைகாசி 04 தேதி ( 17 - 05 -2024 ): காலையில் நாச்சியார் திருக்கோலத்தில் சுவாமி உற்சவம் நடைபெறுகிறது. தொடர்ந்து இரவில் விழாவில் முக்கிய நிகழ்வான வான வேடிக்கை மற்றும் யாளி வாகன உற்சவம் நடைபெறுகிறது.
வைகாசி 05 தேதி (18 - 05 -2024 ) : காலை பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வுகளின் ஒன்றான சொர்ண அபிஷேகம் விழா காலை நடைபெறுகிறது. இரவு வேளையில் வானவேடிக்கையுடன் யானை உற்சவம் நடைபெறுகிறது .
வைகாசி 06 தேதி ( 19 - 05 -2024 ) : வைகாசி பிரம்மோற்சவ விழாவில், தலைமை நிகழ்வாக கருதக்கூடிய திருத்தேர் உற்சவம் நடைபெறுகிறது. இன்றைய மாலை மண்டகப்படி நிகழ்வு நடைபெறுகிறது. இரவு அனுமார் சன்னதி வரை பெருமாள் எழுந்தருளுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
வைகாசி 07 தேதி ( 20 - 05 -2024 ) : காலை பல்லாக்கு உற்சவம் இருந்து மாலை குதிரை வாகனம் உற்சவம் நடைபெறுகிறது. இரவு புஷ்ப பள்ளியறை ஜோடிக்கும் நடைபெற இருக்கிறது.
வைகாசி 08 தேதி ( 21 - 05 -2024 ) : தீர்த்த வாரி உற்சவம் நடைபெறுகிறது அதனை தொடர்ந்து தீர்த்தவாரி திருமஞ்சனம் நடைபெறுகிறது . இரவு புஷ்ப பல்லாக்கு உற்சவம் நடைபெறுகிறது.
வைகாசி 09 தேதி ( 22- 05 -2024 ) : துவாதசாராதனம் திருமஞ்சனம் உற்சவம் நடைபெறுகிறது.
இதனைத் தொடர்ந்து மே மாதம் 23ம் தேதி முதல் இரவு விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது